அனைவருக்கும் வணக்கம்,
சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற முயற்சியில் ஈடுபடுகிற போது அங்குள்ள ஒவ்வொன்றையும் அறிய முயற்சி செய்கிறோம்.
சந்திரனில் சேட்டிலைட்டின் (விஞ்ஞானிகள் நேரடி பயனம் இல்லாத நிலையில்) வாயிலாக நாம் சில விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
அதாவது,
சேட்டிலைட் வாயிலாக தெரிந்து கொண்டது:
- மண் இருக்கிறது.
- கல் (பாறை) இருக்கிறது.
- வெளிச்சம் இருக்கிறது.
- வெப்பம் இருக்கிறது.
என்பன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டது:
உயர்திரு நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமையில் சென்ற மூவர் குழு 1969 ஜூலை 16ல் சென்ற பயனமானது ஜூலை 20ல் தமது முதல் காலடியை சந்திரனில் பதிந்தனர்.
இதன் வாயிலாக:
- கோள் ஈர்ப்பு விசை பற்றாக்குறையாக (பூமியின் ஈர்ப்பு விசையை விட) இருப்பதை அறிந்தனர்.
- சுவாசத்தில் (மூச்சு காற்று) உள்ள நிகழ்வுகளை (மூச்சு விடுதலில் உள்ள சிரமம்) அறிந்தனர்.
- மண்ணை நேரடியாக எடுத்து வந்தனர்.
- கல்லை (பாறை துகல்) எடுத்து வந்தனர்.
இது போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாக தன்னை தானே சுற்றி வரும் கால அளவுகள், சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கால அளவுகளும், வெப்பம் – குளிரின் அளவுகள், சந்திர மண்ணின் மேற்பரப்பில் வின்கற்கல் விழும் அபாயத்தினையும் அறிய முடிந்தது. மேலும் எரிமலை குழம்புகளால் உருவான குகை போன்ற அமைப்புகளை அறிந்தது ……. போன்ற விவரங்களின் தொடர்ச்சியாக சந்திரனின் மறுபக்கத்தை அறியக்கூடிய நிகழ்வுகள் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவோம்.
எனது ஆய்வுகள்:
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கிட விஞ்ஞான ஆய்வுகளின் துணை கொண்டும், எமது குருவின் சிந்தனை துளிகளும், எமது சிந்தித்து ஆராய்ந்து பார்க்கும் தனித்திறன் கொண்டும் எமது ஆய்வுகள் தொடர்கிறது.
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply