நுண்ணுயிர்கள் சூத்திரம்

சந்திரன் நுண்ணுயிர்கள்

 

ஜட உயிர் (பஞ்ச பூத கட்டமைப்புகள்) – ஜடமற்ற உயிர் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) இவ்விரு அமைப்பிலும் நுண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால் உயிரியல் இணைப்பு சக்தியாக விளங்குகிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் இரு பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கிறது
அவை
1. ஜடம்
2. ஜடமற்றது.

ஜடம்:
ஜடம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு இயக்க முறைகளை குறிப்பதாகும். அதாவது ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண் எனும் பஞ்ச பூத அமைப்புகளும் அவற்றின் இணைப்பு மூலக்கூறுகளால் இணைந்திருக்கும் கனிம வளங்களும், எரிமலை குழம்புகளும், பனிப் பாறைகளும், வெந்நீர் ஊற்றுகளும், மின்காந்த அலைகளும் …… போன்றவைகளை குறிப்பதாகும்.

ஜட அமைப்பு என்பது பூமியை பொருத்தவரை புற கண்களுக்கு புலப்படுகிற விதமாக அமைந்திருக்கிறது. ஆனால் பூமியை தவிர வேறு கோள்களைப் பொறுத்தவரை பஞ்சபூதங்கள் ஐந்தின் செயல்பாடுகள் பூமியில் வெளிப்படும் பஞ்சபூதங்கள் ஐந்தின் செயல்பாடுகளை போல் அமைந்திருக்காது என்பதை அறிய வேண்டும்.

ஜட அமைப்பை புரிந்து கொள்ள உதாரணமாக சந்திரனை (கோள்) எடுத்துக் கொள்வோம்.
சந்திரனில் வெப்பம் என்பதை கவனித்தால் புரியும். சந்திரனில் வெளிப்படும் வெப்பம் சந்திரனின் மண்ணை மின்காந்த அலைகளாக சுட்டெரிக்கிறது‌. இவ்வெப்பமானது பூமியின் வெப்ப அளவை விட பல மடங்கு கூடுதல் ஆனது என்பதை அறிய வேண்டும்.

சந்திரனில் நீர் என்பதை கவனித்தால் புரியும். சந்திரனில் வெளிப்படும் நீரானது பூமியில் உள்ள நீரின் அளவைப் போல் இல்லை என்பதை அறிவோமா! அதாவது பூமியில் கடல் போன்ற மிகப்பரந்த நீர்ப்பரப்பு சந்திரனில் இல்லை. இருப்பினும் பூமியைவிட சந்திரனில் குளிரின் அமைப்பு என்பது பல மடங்கு கூடுதல் ஆனது என்பதை அறியவேண்டும். இதேபோல்தான் சந்திரனில் காற்று, மண் போன்ற அமைப்புகளும் மாறுபட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

ஜகமற்றது என்பது தாவரங்கள் உயிரினங்கள் மனிதர்கள் எனும் உயிரியல் கூட்டமைப்பை குறிப்பதாகும்.

சந்திரனைப் பொறுத்தவரை உயிரியல் அமைப்பு என்பது புறக் கண்களுக்கு தெரிவது போல் எதுவும் இல்லை என்பதை அறிய வேண்டும். அதாவது பூமியில் இருப்பது போல் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் எனும் உயிரியல் கட்டமைப்புகள் சந்திரனில் எதுவும் இல்லை என்பதை அறிய வேண்டும். மேலும் இதை விரிவாக அறிவோம்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் உயிரியல் அமைப்புகளில் இரு பெரும் கட்டமைப்புகளாக அமைந்திருக்கிறது.
1. இயற்கை இயல் கட்டமைப்பு.
2. உயிரியல் கட்டமைப்பு.
இவ்விரு கட்டமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்குகிறது. இவ்விரு அமைப்பு முறைகளில் இயற்கை இயல் கட்டமைப்பில் வாழும் நுண்ணுயிர்கள் பிரபஞ்சம் முழுவதும் வாழ்கிறது. பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் நுண்ணுயிர்கள் நிறைந்திருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் வாழும் நுண்ணுயிர்கள் இருவகையான சூழ்நிலையில் வாழ்கிறது.
1. ஜட உயிர் வாழ்வியல்
2. ஜடமற்ற உயிர் வாழ்வியல் என வாழ்கிற வாழ்வியல் அமைப்பு முறைகளில் ஜட உயிர் (ஜட உயிர் = பஞ்ச பூதங்கள் + நுண்ணுயிர்கள்) வாழ்வியல் அமைப்பு முறையே பிரபஞ்சம் முழுவதும் காணப்படுகிறது. ஏனெனில் இயற்கை இயல் கட்டமைப்பு முறையே பிரபஞ்சமாக திகழ்கிறது. இதில் ஜடமற்ற உயிர் (பஞ்ச பூதங்கள் + தாவரங்கள் + உயிரினங்கள் + மனிதர்கள்) வாழ்வியல் என்பது பூமியில் காணப்படுகிறது.

இயற்கை இயல் கட்டமைப்பு:
இயற்கை இயல் கட்டமைப்பு என்பது பஞ்ச பூதங்களையும், பிரபஞ்ச நுண்ணுயிர்களையும் உள்ளடக்கியது. இயற்கை இயல் கட்டமைப்பு என்பது கோளுக்கு கோள் மாறி அமைகிறது. அதாவது கோளுக்கு கோள் பஞ்ச பூதங்களின் தொடர்பு அமைப்பும், இணைந்து இயங்கும் அமைப்பும் மாறி மாறி அமைகிறது. இதனால் கோள் சுழற்சி இயலும், கோள் ஈர்ப்பு விசை இயலும் கோளுக்கு கோள் மாறுபடுகிறது. மேலும் வெப்பம் – குளிர் அமைப்பும், பகல் – இரவு கால அளவுகளும் மாறி மாறி அமைகிறது. இதன் காரணமாகவே பிரபஞ்ச நுண்ணுயிர்களின் வாழ்வாதார இயலும் மாறுபடுகிறது.

இயற்கை இயல் கட்டமைப்பை பொறுத்த வரை ஆகாயத்தில் மண், நீர், வெப்பம், காற்று என நான்கு அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் அமைப்பு முறைகளை பொறுத்து தான் பிரபஞ்ச நுண்ணுயிர்கள “மண்ணின் மேற்பரப்பிலும், உட்பரப்பிலும் வாழ்தல் என்பதும் – மண்ணின் உட்பரப்பில் வாழ்தல்” என்பதும் நிகழ்கிறது.

உயிரியல் கட்டமைப்பு:
உயிரியல் கட்டமைப்பு என்பது பஞ்ச பூதங்கள், தாவரங்கள், உயிரினங்கள் (நுண்ணுயிர்களையும் உள்ளடக்கியது), மனிதர்கள் எனும் கூட்டமைப்பில் இணைந்து வாழுகின்ற முறையில் அமைந்துள்ளது. ஆகவே தான் உயிரியல் கட்டமைப்பில் நுண்ணுயிர்கள் மண்ணின் மேற்பரப்பிலும் – உட்பரப்பிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எனவே
இயற்கை கட்டமைப்பிற்கும், உயிரியல் கட்டமைப்பிற்கும் இணைப்பு பாலமாக பிரபஞ்ச நுண்ணுயிர்கள் அமைகிறது.

பிரபஞ்ச நுண்ணுயிர்கள் நாலு வகை

1. காற்று நுண்ணுயிர்கள்
2. வெப்ப நுண்ணுயிர்கள்
3. மண் நுண்ணுயிர்கள்
4. நீர் நுண்ணுயிர்கள்

சூத்திரத்தில் குறியீடுகள்
1. காற்று நுண்ணுயிர்கள் – மேல் கீழ் குறியீடு
3, மண் நுண்ணுயிர்கள் – மேல் கீழ் குறியீடு
2. வெப்ப நுண்ணுயிர்கள் – மேல் கீழ் குறியீடு
4. நீர் நுண்ணுயிர்கள் – மேல் கீழ் குறியீடு

நுண்ணுயிர்கள் சூத்திரம்:

நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு உரிய இயற்கை கட்டமைப்பு முறைகளுக்கு உரிய சூத்திர முறைகளை அறிந்தால் இயற்கை கட்டமைப்பு முறைகளையும், உயிரியல் கட்டமைப்பு முறைகளையும் மேலும் மேலும் விரிவாக அறிவதற்கு உதவியாக அமையும்.

பஞ்ச பூத கலவைகள் + மண்ணின் மேற்பரப்பில் பஞ்ச பூத கலவைகள்\ மண்ணின் உட்பரப்பில் பஞ்ச பூத கலவைகள் + காற்று நுண்ணுயிர்கள்\வெப்ப நுண்ணுயிர்கள் + மண் நுண்ணுயிர்கள் + நீர் நுண்ணுயிர்கள்.

வாழ்வாதாரம்:

பிரபஞ்ச நுண்ணுயிர்கள் இயற்கை கட்டமைப்பில் இயற்கையோடு இணைந்து வாழும் தன்மையில் அமைந்திருக்கிறது. இயற்கையை ஆதாரமாக கொண்டு வாழ்கிறது.

பிரபஞ்ச நுண்ணுயிர்கள் உயிரியல் கட்டமைப்பில் இயற்கை கட்டமைப்பிலும் வாழ்கிறது. தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என முக்கூட்டு உயிரினங்கள் அமைப்பிலும் இணைந்து வாழ்கிறது. இவை மண்ணின் மேற்பரப்பிலும் வாழ்கிறது.
அதாவது
* மண்ணில் வாழ்கிறது.
* மண்ணில் பரவுகிற காற்றில் வாழ்கிறது.
* மண்ணின் மேற்பரப்பில் உள்ள நீரில் வாழ்கிறது.
* மண்ணின் மேற்பரப்பில் பரவுகிற ஈர வெப்பத்தில் வாழ்கிறது.
* மண்ணின் மேற்பரப்பில் வாழும் அணைத்து வகையான தாவரங்களிலும் உள்ளும், புறமும் இணைந்து வாழ்கிறது.
* தாவரங்களின் அணைத்து பரினாம வாழ்வியல் முறைகளிலும் வாழ்கிறது.
* மண்ணின் மேற்பரப்பில் வாழும் அணைத்து வகையான உயிரினங்களிலும் உள்ளும், புறமும் இணைந்து வாழ்கிறது.
* மண்ணின் மேற்பரப்பில் வாழும் மனிதர்களுக்குள்ளும், மனிதர்களை சுற்றிலும் வாழ்கிறது.

உருமாற்றம்:
இயற்கை கட்டமைப்பில் வாழுகின்ற நுண்ணுயிர்கள் மண்ணின் உட்பரப்பில் தமது உருவ அமைப்பை மாற்றிக்கொள்வது இல்லை. அதாவது மண்ணின் உட்பரப்பில் வாழுகின்ற நுண்ணுயிர்கள் மண்ணின் மேற்பரப்பில் வாழ இயலாத சூழ்நிலைகளுக்கு மாத்திரமே இந்நியதி பொருந்தும். அதாவது பஞ்ச பூத கட்டமைப்பில் வாழுகின்ற நுண்ணுயிர்களுக்கு தமது உருவ அமைப்பை மாற்றிக்கொள்ளும் திறன் பஞ்ச பூத கலவைகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே அமைகிறது. இந்நிகழ்வை விரிவாக கூற வேண்டும் என்றால் மண்ணின் மேற்பரப்பில் வெப்பம் + காற்று + நீர் (நீர் அல்லது ஈரத்தன்மை) என முக்கூட்டு தன்மையில் இணைந்து இருக்கிற சூழ்நிலையில் மாத்திரமே நுண்ணுயிர்கள் தமது உருவ மாற்று திரனை பயன்படுத்தி கொள்ள இயலும்.

உயிரியல் கட்டமைப்பை பொறுத்தவரை வெப்பம் + காற்று + நீர் எனும் கட்டமைப்புகள் உயிரினங்களின் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வாதார தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் அமைந்திருக்கிறது.

உயிரியல் கட்டமைப்பில் இணைந்து வாழுகின்ற நுண்ணுயிர்கள் தாம் வாழுகின்ற இடத்திற்கு ஏற்றார் போல், சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தமது உருவ அமைப்பை மாற்றி கொள்ளும் திறன் படைத்தது ஆகும்.

சந்திரனை பொறுத்த வரை நுண்ணுயிர்களின் வாழ்வாதாரம் மண்ணின் உட்பரப்பில் வாழும் நிகழ்வாகவே அமைந்துள்ளது. ஏனெனில் சந்திரனில் வெப்பத்தாக்கம் என்பது மிக மிக கூடுதலாகவே அமைந்திருக்கிறது. அதாவது சந்திரல் மேற்பரப்பில் அமைந்திருக்கும் மண்ணின் மூல கூறுகளை உடைத்தெரிகிற அளவில் வெப்பத்தாக்கம் அமைந்திருக்கிறது.

நன்றி, வணக்கம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of