நீரின் சுழற்சி இயல்

அனைவருக்கும் வணக்கம்,

நீர் இன்றி அமையாது உலகு என்பது காலம், காலமாக வாழுகின்ற வாழ்வியல் கருத்தாகும்.
அதாவது, வாழ்வாதார அமைப்பு முறைகளில் பஞ்ச பூத கட்டமைப்பு வாழ்வியல் முறைகளையும், இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளையும் வாழ்ந்தவர்களின் வாழ்வியல் நீதியாகும்.
இதுவே,
வாழ்ந்தவர்களின் கருத்து,
வாழ்கிறவர்களின் கருத்து,
வாழப்போகிறவர்களின் கருத்து ஆகும்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் கட்டமைப்பை மீண்டும் மீண்டும் உற்று நோக்கினால் சில நிகழ்வுகள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதாவது பஞ்ச பூதங்களினால் கட்டமைக்கபட்டிருக்கும் பிரபஞ்சத்தில் ஆகாயம் (1) எங்கு பார்த்தாலும் நிறைந்து இருக்கிறது. காற்றும் (2) எங்கு பார்த்தாலும் நிறைந்து இருக்கிறது. வெப்பம் (3) எங்கு பார்த்தாலும் நிறைந்து இருக்கிறது. அதேசமயம் வெப்பத்தோடு இணைந்து இருக்க வேண்டிய வெளிச்சம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. நீர் (4) என்பதும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. மண் (5) என்பது கோள் (கோள்கள், துணை கோள்கள், நட்சத்திரங்கள்) அமைப்பிலும், சிதறிய கற்கள் (வின்கற்கல்) சிறிய வடிவத்திலிருந்து, பெரிய வடிவம் வரை இருக்கிறது.
நாம் இங்கு சுழற்சி இயல் முறையில் பார்த்து கொண்டிருப்பது நீரின் இயக்கங்களை பற்றியதாகும்.

பிரபஞ்ச இயக்க கட்டமைப்பில் சுழற்சி இயக்க ஈர்ப்பு விசை நிகழ்வில் திட, திரவ, வாயு என மூவகை கட்டமைப்புகள் இயக்க இயல் சுழற்சிக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது.

பஞ்ச பூதங்கள் அடங்கிய ஐவகை அமைப்பில் திட, திரவ, வாயுவின் தொடர்புகளை அறியலாம்.
1. திடம்: மண்ணின் அமைப்பாகவும்,
2. திரவம்: நீரின் அமைப்பாகாவும்,
3. வாயு: காற்றின் அமைப்பாகவும் அமைந்திருக்கிறது. இம்மூன்று தொடர்பு அமைப்புகளும் வெப்பத்துடனும், ஆகாயத்துடனும் இணைந்து ஜட – உயிரியல், ஜட – ஜடமற்ற உயிரியல் இயக்க கட்டமைப்பை தொடர்ந்து இயங்குவதற்கு பேருதவியாக அமைந்திருக்கிறது.

பிரபஞ்ச இயக்கத்தின் தொடர்ந்த தொடர்பு இயக்கத்திற்கு திட, திரவ, வாயு ஆகிய இம்மூன்றின் சுழற்சி இயக்க பரிமாற்ற அமைப்புகளும் காரண, காரிய, கருவியாக அமைந்திருக்கிறது.

பஞ்ச பூத அமைப்புகளில் நீருக்கு மாத்திரம் தனி சிறப்பு இருக்கிறது. அதாவது பொதுவாக நீர் திரவ நிலையிலும், ஈரத்தன்மை உடையதுமாக அமைந்திருக்கிறது. நீரின் செயல் இயக்க நிகழ்வுகள் தான் திரவ நிலையில் அமைந்திருக்கும் தன்மையானது இதர நான்கு பஞ்ச பூத அமைப்புகளுடனும் இணைந்து இயங்குகையில் திட, திரவ, வாயு நிலைக்கு உருமாற்றம் அடைந்து பிரபஞ்சம் முழுவதிலும் பரவலாக்கம் ஆகிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of