சூரியனின் தொடர்பு

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்கள் வாழ்ந்திட பூமி எனும் கோளே இது வரை பிரதானமாக அமைந்திருக்கிறது. மனிதனது துவக்க காலத்தில் வாழ்வாதார வெளிப்பாடாக, வழிகாட்டியாக அமைந்தது என்றால் அது சூரியனே ஆகும்.

சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள பூமிக்கு வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கொடுத்து உதவுவது சூரியனே ஆகும். அதுபோலவே இரவில் குளிர்ச்சியையும், வெளிச்சத்தையும் கொடுத்து உதவுவது சந்திரன் ஆகும். இவற்றின் மகத்துவம் வாய்ந்த உண்மைகள் இன்றைய காலகட்டத்தில் நன்கு தெரிந்த விசயமாக அமைந்திருப்பதை அறிவோம். ஆனால்,
இது மனிதர்களின் துவக்க காலத்தில் இருந்த நிலைகளை அறிவோமா.

மனித சமுதாயத்தின் துவக்க காலத்தில்
* என்ன செய்ய வேண்டும்
* எதை செய்ய வேண்டும்
* எவ்வாறு செய்ய வேண்டும்
* எதற்காக செய்ய வேண்டும் ……..
என்பன போன்ற எதுவும் தெரியாது இருந்தது.
அதேசமயம் உயிரினங்களின் ஒவ்வொரு செயலையும் காணுகின்ற போது தாமும் அதை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் தம்மை தூண்டிக்கொண்டே இருந்தது. தம்மை அச்செயல்களை செய்யவும் வைத்தது. இதைத்தான் ‘துவக்க நிலை செயல் ஈர்ப்பு விசை’ என்கிறோம்.

துவக்க நிலை செயல் ஈர்ப்பு விசை:
உயிரினங்களின் துவக்க நிலையில் தமது செயலை பற்றி, செயலின் விளைவுகள் பற்றி தாம் அறியாமல் செய்கிறோம். அதற்கு காரணம் அறிந்து கொள்ளும் துவக்க நிலை வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. தமக்கும் செயல் நடைபெறுகிற சூழ்நிலைக்கும் உள்ள ஈர்ப்பு விசையே காரணமாகிறது. இதை அறியாமல் செய்வதாக கூறலாம். ஆர்வமிகுதியால் செய்வதாக கூறலாம். என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக கூட செய்யலாம்.

வெப்பம் அறிதல்:
மனிதன் பூமியில் வாழ்கிற துவக்க நிலையில் வெப்பம் தந்த சூடு (சூரியனின் வெப்பம்) தான் நகர்தலுக்கு உரிய வாய்ப்பை கொடுத்தது என்பதை அறிவோமா!

நிழல் அறிதல்:
மனித வாழ்வியலுக்கு துவக்கத்தில் வெப்பத்தை அறிமுகப்படுத்தியது சூரியனே ஆகும். சூரிய வெப்பத்தால் நிழலை அறிமுகப்படுத்தியது சூரியனே ஆகும்.

நிழலில் தென்றல் அறிதல்:
சூரிய வெப்பத்தை தவிர்க்க நிழலை நாடிய மனிதன் அறிந்து கொண்ட நிகழ்வு தான் நிழல் வெளிப்படுகிற இடங்களில் வெப்ப சக்தி குறைகிறது என்பதை அறிய முடிந்தது. மேலும் தாவரங்களின் நிழல் வெளிப்படுகிற இடங்களில் தென்றல் காற்று வீசுவதை உணர்ந்தனர்.

வெப்பத்தை தாங்கும் சக்தி:
சூரிய வெப்ப தாக்கத்தில் இருந்து விடுபட தாவரங்களை நாடுகிற போது தாவரங்கள் நிழலை தருகிறது
இதன் வாயிலாக வெப்பத்தை தாங்கும் சக்தி தாவரங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்தனர். அதாவது மண்ணின் மேற்பரப்பிலும், மண்ணின் உட்பரப்பிலும் தாவரங்கள் தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கி இருப்பதை அறிந்தனர். அதேசமயம் வெப்பம் மண்ணிலும், மண்ணின் மேற்பரப்பிலும் பரவியிருப்பதை மனிதர்களால் அறிய முடிந்தது. மேலும் தாவரங்கள் மண்ணில் வெப்பத்தை தாங்கி நிற்பதையும் அறிந்தனர்.

தனக்கு தானே நிழல்:
தாவரங்கள் மண்ணின் மேற்பரப்பிலும் , மண்ணின் உட்பரப்பிலும் வாழ்கிற போது தமது இலைகள் வாயிலாக வாழ்வாதார சக்திக்காகவும், இலைகள் வாயிலாகவே தம்மீது படரும் வெப்பத்தை தாங்கி கொள்கிறது. அதேசமயம் இலைகள் வாயிலாகவே நிழலை தாவரங்கள் தம்மீதே படரவிட்டு கொள்ளும் விதமாக இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது. ஆகவே தாவரங்கள் தனக்கு தானாகவே நிழல் தரும் விதமாக அமைந்திருக்கிறது.
மனிதர்களும் தாவரங்களின் நிழல் தரும் அமைப்புகளை அறிந்து வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறைகளை கற்று அறிந்தனர்.

நிழல் உருவம் அறிதல்:
தாவரங்கள், உயிரினங்கள் உள்ள இடத்தில் அதைப்போலவே உருவம் இருப்பதை மனிதன் அறிந்தான். அசைந்தால் அசைகிறது. அசையாது இருந்தால் அசையாது இருக்கிறது. கூடவே இருக்கிறது. உருவத்தோடு இணைந்திருக்கும் உருவத்தை காணுகின்ற மனிதர்களுக்கு இதை பற்றி புரிந்து கொள்ள இயலாமல் ஏற்பட்ட தடுமாற்றத்தை என்ன என்று சொல்வது! இந்த நிலையில் தாவரங்களில் மாத்திரம் தானா அல்லது உயிரினங்களில் மாத்திரம் தானா என கூர்ந்து அறிய முற்படுகையில் தமது உருவ அசைவுகளிலும், அசையாது இருக்கும் சூழ்நிலையிலும் தன்னோடு இணைந்து இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு காரணம் என்ன என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. அதற்கு உரிய காரணம் சூரிய ஒளி தான் என தோன்றியது. ஒரு சூழ்நிலையில் ஒரு புறம் தோன்றும் நிழல் உருவம் மற்றொரு சூழ்நிலையில் வேறு புறம் தோன்றுவதை காணுகின்ற போது தான் ஒளி நகர்தலா அல்லது ஒளி தருவதற்கு காரணமாக அமைந்திருக்கும் அதன் உருவம் (சூரியன்) காரணமா என ஆராய தோன்றியது. இதனுடைய தீர்வாக மனிதர்கள் அறிந்தது சூரியனும் அதன் ஒளியும் வேறு அல்ல என்பதாகவே அமைந்தது. இந்நிகழ்வு நிருபனமாக சந்திர ஒளி அமைந்தது.

சூரிய ஒளி நிகழும் சூழ்நிலை அமைப்புகளை நன்கு அறிந்து கொள்ள மனிதர்கள் அப்போது முயற்சி செய்தார்கள். அதாவது அந்த நேரத்தில் தமக்கு வேண்டிய தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என்பதை நன்கு அறிந்து செயல்பட முற்பட்டனர்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of