சந்திரன்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் நாம் வாழ முயற்சி செய்கிறோம் …… என்றால் அது புதிய செய்தியா!

இல்லை,
நாம் சந்திரனை வைத்து பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா !

எவ்வாறு எனில்,
மனிதர்களின் துவக்க காலத்தில் இரவில் ‘ஒளி காட்டியாக’ (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) அமைந்திருந்தது, அந்நிகழ்வு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதுவே நமக்கு ‘வழிகாட்டியாகவும்’ திகழ்கிறது.

மேலும் காலப்போக்கில் “திசை காட்டியாகவும்” அமைந்து கொண்டிருக்கிறது.

மேலும் நாள் காட்டியில் மிக முக்கிய பங்கு (அம்மாவாசை, வளர்பிறை, பௌவர்னமி, தேய்பிறை) வகிக்கிறது. இதன் வாயிலாக திருவிழாக்கள், கிரகணங்கள், இயற்கை மாற்றங்கள்…….. என பல்வேறு நிகழ்வுகள் வாழ்வியல் அமைப்பு முறைகளோடு இணைந்திருக்கிறது.

மேலும்,
பிரபஞ்சத்தில் உள்ள கோள்களையும், நட்சத்திரங்களையும் அறிந்து கொள்வதற்கு ‘முதல் வழி காட்டியாகவும்’ திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாது ஆகாயத்தில் வெகு தூரம் (கோள்களில்) செல்வதற்கும், சென்று ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் வழிகாட்டியாகவும், ஒளி காட்டியாகவும், திசை காட்டியாகவும் அமைகின்றது.

சந்திரன் நமக்கு இரவில் வழிகாட்டி என்பதும், இரவில் குளிர்ச்சி தன்மை உடைய ஒளியை தருகிறது என்பதை நாம் அறிவோம்.

கட்டமைப்பு:

சந்திரனின் இயற்கை கட்டமைப்பை (உள் கட்டமைப்பு – வெளி கட்டமைப்பு) அறிந்தால் தான், அறிந்து சீரமைத்தால் தான் சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும் என்பதை அவசியம் அறியவேண்டும்.

நாம் பூமியில் வாழத்துவங்கிய காலத்திலும் சரி – இன்றைய காலகட்டத்திலும் சரி பூமியின் உள் கட்டமைப்பு முறைகளை அறிந்து வாழ முயற்சி செய்வது போல் சந்திரனின் வெளி கட்டமைப்பு அறிந்து வாழ வேண்டிய முயற்சி (அவசியம்) ஏற்ப்பட்டதில்லை. ஆனால் பூமியின் வெளி கட்டமைப்பு முறைகள் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே முயற்சிகள் நடந்திருக்கிறது.

சந்திரனை பொருத்தவரை சந்திரனின் உள் கட்டமைப்பு – வெளி கட்டமைப்பு முறைகளை நன்கு அலசி ஆராய்ந்து அறிவது அவசியமாகிறது.

சந்திரனின் உள் கட்டமைப்பு முறைகளை அறிவோம்.
சந்திரனின் மண் அக்கினி( நெருப்பு) போன்ற வெப்பத்திலும், பனிகட்டி (குளிர்) போன்ற குளிர்ச்சியிலும் வாழ்ந்து கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்? சந்திரனின் இயற்கை கட்டமைப்பு முறைகள் பூமியைப்போல் அமைந்திருக்கவில்லை. அதாவது இங்கு (பூமியில்) தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்புடைய இயற்கை கட்டமைப்புகள் அனைத்தும் இயற்கையில் அமைந்திருக்கிறது. ஆனால் சந்திரனில் இது போல் அமையவில்லை.

மாறாக

  • வெப்பமும் – குளிரும்,
  • பகலும் – இரவும்,
  • வறட்சிதன்மையும் – ஈர்ப்பு விசையின் தன்மையும்,
  • மின் காந்த அலைகளும் – கோள் ஈர்ப்பு விசையின் தன்மையும்,
  • கோளின் சுழற்சித்தன்மையும் – வின்கற்கல் விழும் நிகழ்வுகளும்

உயிரியல் வாழ்வியலுக்கு ஏற்புடையதாக சந்திரனில் அமையவில்லை. இவை அனைத்தும் சந்திரனின் உள் கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.

சந்திரனின் வெளி கட்டமைப்பு முறைகளை அறிவோம்.
சந்திரனின் உள் கட்டமைப்பில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் இயற்கை கட்டமைப்பு அமையாது இருப்பதால் தம்மை தாமே சுற்றி வரும் நிகழ்வில் நெருக்கடி நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதனால் சந்திரனின் பாதுகாப்பு வளையத்தை கடந்து வின்கற்கல் சந்திரனின் உள் கட்டமைப்பு முறையில் விழுகிறது. எனவே சந்திரன் தம்மை தாமே சுற்றி வருகிற முறைகள் சீரமைக்கப்படவில்லை என்றால் வின்கற்களால் ஏற்படும் பாதிப்புகளையும் சீரமைக்க இயலாது.

எனவே சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்க முயற்சி செய்ய முயன்றால் சந்திரனின் உள் கட்டமைப்பு முறைகளையும் அலசி ஆராய வேண்டியது அவசியம் ஆகிறது.

அனைவரும் ஒன்று கூடுவோம் வாருங்கள் சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கி உயிர் குலத்தை மேன்மைபடுத்துவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of