கோள் ஈர்ப்பு விசை இரு வகை

வாழ்வாதார ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

கோள் ஈர்ப்பு விசை இரு வகை சுழற்சி இயல் முறைகளில் நிகழ்கிறது. (வாழ்வாதார ஈர்ப்பு விசை, கோள் சுழற்சி ஈர்ப்பு விசை)

1. வாழ்வாதார (உயிரியல்) ஈர்ப்பு விசை
2. கோள் சுற்றி வர சுழற்சி இயல் ஈர்ப்பு விசை.
இவ்விரு வகை சுழற்சி இயலும் பஞ்ச பூத சக்திகள் இணைந்து இயங்கும் முறைகளில் நிகழ்கிறது.

இவ்வாறு இணைந்து இயங்கும் சுழற்சி இயல் முறைகள் பஞ்ச பூத ஈர்ப்பு விசையில் இரு வித இயக்க முறைகளில் நிகழ்கிறது.
1. கோளில் மண்ணின் மேற்பரப்பில் நிகழும் ஈர்ப்பு விசை.
2. கோளின் எல்லா (முழு சுற்று வட்டத்தில்) புறத்திலும் நிகழும் ஈர்ப்பு விசை ஆகும்.

வாழ்வாதார (உயிரியல்) ஈர்ப்பு விசை:
மண்ணின் மேற்பரப்பில் நிகழும் ஈர்ப்பு விசையைத்தான் நாம் நடைமுறையில் கோள் ஈர்ப்பு விசை என்கிறோம்.
மண்ணின் மேற்பரப்பில் நிகழும் கோள் ஈர்ப்பு விசையின் தன்மையை பொறுத்து தான் கோளின் சுழற்சி இயல் இயக்கம் நடைபெறும் முறைகளை அறிய இயலும்.

மேலும் அறிய வேண்டியது:

  • மண்ணின் மேற்பரப்பில் நிகழும் பஞ்ச பூத சுழற்சி இயல் ஈர்ப்பு விசையை வாழ்வாதார ஈர்ப்பு விசை என்று அழைக்கிறோம்.
  • மண்ணின் மேற்பரப்பில் நிகழும் பஞ்ச பூத இணைப்பு கலவைகள் ஆனது மண்ணின் உள் ஈர்ப்பு விசையோடு இணைந்து உள் செல்கிறது.
  • மண்ணின் உட்பரப்பில் நிகழும் உள் ஈர்ப்பு விசையானது மண்ணிற்குள் உள்ள பஞ்ச பூத கலவைகள் உள் சுழற்சி இயல் முறைகளில் இயங்குவதற்கு துணை செய்கிறது.
  • மண்ணின் உட்பரப்பில் நிகழும் உள் ஈர்ப்பு விசையானது, மண்ணின் மேற்பரப்பில் நிகழும் பஞ்ச பூத கலவைகளின் இணைப்பு விசையை தன்னகத்தே (மண்ணின் உட்பரப்பில்) ஈர்க்கிறது.
  • மண்ணின் உட்பரப்பில் நிகழும் இவ்விரு ஈர்ப்பு விசைகளும் ஒருங்கினைந்து செயல்படுகிறது. இவ்வாறு ஒருங்கினைந்து செயல்படும் நிகழ்வுகள் ஆரு வகையான செயல்களுக்கு உதவுகிறது.
    • 1. மண்ணின் உட்கட்டமைப்பில் (உட்பரப்பில்) அமைந்திருக்கும் பஞ்ச பூத இயக்கங்களின் பரிமாற்றங்கள் மண்ணின் வெளி கட்டமைப்பில் (மண்ணின் மேற்பரப்பில்) அமைந்திருக்கும் வெளி ஈர்ப்பு விசையுடன் இணைவதற்கு உதவுகிறது.
      2. மண்ணின் உட்கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஜடமற்ற (உயிரினங்கள்) இயக்கங்கள் மண்ணின் வெளி கட்டமைப்பு சக்திகளின் தன்மைகளை உள் – வெளி நிகழ்வுகளில் கிரகித்து வாழ்வதற்கு உதவுகிறது.
      3. மண்ணின் உட்கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஜடமற்ற (கனிம வளங்கள்) பொருள்களின் வளர்ச்சி இயலுக்கும், பரிமாற்றத்திற்கும் உதவுகிறது.
      4. கோளின் உட்கட்டமைப்பு சுழற்சி இயக்கத்திற்கு உதவுகிறது.
      5. கோளின் உட்கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஜட, ஜடமற்ற இயக்கங்கனின் பரிணாம, பரிமாற்ற வளர்ச்சி இயலுக்கு உதவுகிறது.
      6. கோளின் மைய அச்சு சுழற்சி இயலுக்கு உதவுகிறது. அதில் குறிப்பாக தன்னை தானே சுழலும் சுழற்சி இயக்கத்திற்கு உதவுகிறது.
  • மண்ணின் மேற்பரப்பில் நிகழும் வெளி ஈர்ப்பு விசையானது மண்ணிற்குள் நிகழும் இருவகை ஈர்ப்பு விசைகளின் நிகழ்வுகளை வெளியில் (மண்ணின் மேற்பரப்பிற்கு) கொண்டு வருவதற்கு உதவுகிறது.
  • இந்நிகழ்வில் ஏற்படும் ஈர்ப்பு விசை முறையில் தான் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்கள் வாழ்வதற்குரிய சாதக – பாதக நிகழ்வுகள் நடைபெறுகிறது.
  • மண்ணின் மேற்பரப்பில் நிகழும் ஈர்ப்பு (வெளி – உள்) விசையும், மண்ணின் உட்பரப்பில் நிகழும் ஈர்ப்பு (உள் – வெளி) விசையும் இணைந்து கோள் தன்னை தானே சுற்றி வருவதற்கு பயன்படுகிறது.

கோள் ஈர்ப்பு விசையில் வாழ்வாதார ஈர்ப்பு விசையை மேலும் அறிவோம்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of