அனைவருக்கும் வணக்கம்,
வாழ்வாதாரத்தில் கொரோனா வைரஸ்
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் மனித அறிவின் வளர்ச்சி என்பது மகத்தானது. கற்காலம் துவங்கிய மனித வாழ்வானது கண்டம் விட்டு கண்டம் என்பதை கடந்து கோள் விட்டு கோள் சென்று வாழ முயற்சி செய்கிற வளர்ச்சியாகும். இந்த காலகட்டத்தில் வைரஸ் கிருமிகளால் மனித சமுதாயம் அழிகிறது என்றால் அதற்கு காரணம் வாழ்வாதார சிதறலும், ஆரோக்கிய சிதறலுமே ஆகும்.
ஆரோக்கிய சிதறல்:
உணவிலும், நினைவிலும், பழக்க வழக்கத்திலும், பயிற்சியிலும், சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பிலும், கற்கிற கல்வியிலும், செய்கிற தொழிலிலும் ………. என வாழ்வாதார கட்டமைப்பில் ஒவ்வொரு நிகழ்விலும் வாழ்வியல் விழிப்புணர்வு தேவையாகிறது. இல்லையென்றால் சிந்தனை சிதறலும், சீர்திருத்தத்தில் கவன குறைவும் உருவாகும். இதன் தொடர் நிகழ்வுகள் வாழ்வாதாரத்தில் திருப்தி இன்மையும், வாழ்வாதார சிதறல் உருவாகிட அடிப்படை காரணமுமாக அமைந்துவிடும்.
வாழ்வாதார சிதறல் அமைப்பில் ஆரோக்கிய பற்றாக்குறையும், நோய் எதிர்ப்புச்சக்தி பற்றாக்குறையும் உருவாகும் என்பதை அவசியம் அறிய வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் கொரோனா வைரஸ் உலக மக்களை உயிர் பழி வாங்குவதற்கு அடிப்படை காரணம் எதுவென புரிந்துகொள்ள முடிகிறதா என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பார்க்கலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் மனித சமுதாயம் மேன்மை தங்கிய வாழ்வியல் வாழவே விஞ்ஞானம் தமது கடமையை விசாலமாக, விரிவாக பரவலாக்கம் செய்து வருகிறது. மனித சமுதாயம் துவங்கிய காலத்தில் இருந்து மனிதர்களின் தொடர்புகள், தேவைகள் என்ன என்பதும், அவற்றை எளிமையாக, எல்லோரும் பெறுகிற, பயன்படுத்துகிற முறைகளை செயல் வடிவமாக பயன்படுத்திட உருவானதே விஞ்ஞானம் ஆகும்.
ஆய்வுகள்: (தேவை)
மனித வாழ்வியல் உலகில் தொடர்ந்திட, நாம் வாழும் இந்த உலகில் இயற்கை கட்டமைப்போடு இணைந்து வாழ்ந்திட, தாவரங்கள் – உயிரினங்கள் வாழ்கிற முறைகளை அறிந்திட, அறிவித்திட இயற்கை இயல் முறைகளில் இயற்கை பரிணாம, பரிமாற்ற பராமரிப்பு முறைகளை “மனிதர்கள், மனிதர்களது வாழ்வாதார முறைகளை” அறிந்திட, தொடர்ந்து வாழ்ந்திட உருவான அனுபவ நிகழ்வுகளாக மற்றும் கல்வியியல் முறைகளாக அனைவருக்கும் பொதுவானதாக உருவானதே ஆய்வுகள் ஆகும்.
அவசியம் தேவை: (விரிவாக்க பட இருக்கிறது)
ஆரோக்கியம்:
மனிதர்களின் வாழ்வாதாரம் உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் வாழ்வாதார நிகழ்வுகளை மையப்படுத்தி உருவானதே ஆகும். மனிதர்கள் தங்களது வாழ்வியலை உயிரியல் கூட்டமைப்போடு, இயற்கை கட்டமைப்போடு இணைந்து வாழ வலிமை மற்றும் ஆரோக்கியம் தேவைப்படுகிறது. மனிதர்கள் தங்களது புலன்கள் வாயிலாக உலகியலை தொடர்பு கொள்வதும், அறிவின் வாயிலாக புரிந்து கொள்வதும், மனதின் வாயிலாக விரிவாக்கம் செய்து கொள்வதும், அன்பின் வாயிலாக பரிமாறிக் கொள்வதும், உடலின் வாயிலாக அனுபவித்தலுமாக வாழ்வியல் அமைகிறது. மக்கள் தொகை அதிகரிப்பும், மக்களின் அடிப்படை தேவைகள் கூடுதலாகுதலும், கல்வி, உணவு மற்றும் மருத்துவம் சார்ந்த விஞ்ஞான முன்னேற்றமும், அறிவியல் வளர்ச்சியும், மனித வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை கண்டுபிடிப்புகளும் அதிகரிக்க வேண்டிய நிகழ்வில் போட்டியும், பொறாமையும் கூடுதலாகிற போது உருவானதே புதிய திருப்பமாக விளங்குகின்றது.
புதிய திருப்பம்:
விஞ்ஞான வளர்ச்சியின் புதிய திருப்பங்கள் மனிதனை நீருக்குளும், ஆகாயத்தை கடந்து வேறு கோளுக்கு செல்லும் அளவுக்கு உயர்ந்தது. முகத்திற்கு முகம் பார்த்து பேசும் அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விஞ்ஞான கட்டமைப்பில் மின்சாரம், போக்குவரத்து தளவாடங்கள், கம்யூட்டர் அமைப்புகள்….. என நவீன விஞ்ஞான வளர்ச்சிகள் உச்ச கட்டத்தை தொடுகிற அதேசமயம் மலிவான விலையில் கிடைக்கும் போதை வஸ்துக்கள், இரசாயனம் கலந்த சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீர், கழிவு கலந்த புகை காற்று (நச்சு காற்று) உணவு, மருந்து …… உற்பத்தி முறைகள் போன்ற பயன்பாடுகள் மனித சமுதாயம் சீரழிவிற்கு காரணமாக அமைகிறது. மேலும் மனித வாழ்வாதாரத்தில் உருவான பேராசையின் காரணமாக பழமையின் அனுபவமும், வாழ்வாதாரமும் அடிப்படையில் அழிந்து போவதற்கு காரணமாக அமைந்தது.
பழமையின் வளமை:
மனித வாழ்வாதாரத்தின் துவக்க காலத்தில் இருந்து உருவான வாழ்வியல் இயற்கை கட்டமைப்போடு, கூட்டமைப்போடு உருவானதாகும். இதில் இயற்கையும், இயற்கை சார்ந்த இயற்கை கட்டமைப்பும், இயற்கையில் வாழும் இயல்பும் முறையாக அமைந்திருப்பதே பழமையின் வளமையாகும்.
பழமையின் வலிமை:
பழமையில் வளமை என்பது இயற்கையின் இயல்பு அமைப்பும், இயற்கையின் வலிமையும் இணைந்த கலவை அமைப்பாக அமைந்திருக்கிறது. இயற்கையின் சக்தியோடு (வெப்பம் – நீர் காற்று) பரிமாறும் பராமரிப்பு முறையோடு வாழும் வாழ்வாதார அமைப்புகளை உள்ளடக்கியது. பழமையில் வளமை, வலிமை என்பதெல்லாம் இயற்கையோடு வாழும் முறையோடும், இயற்கை உணவு முறையோடும் வாழ்வாதார தொடர்ச்சி முறைகளை தொடர்ந்து வாழும் முறைகளில் கலந்து வாழ்வதே வாழ்வியலில் முழுமையான வாழ்வியல் முறையாகும்.
உணவு:
நாம் சாப்பிடுகிற உணவு என்பது உயிருடல் இயக்க அமைப்பிற்கு ஏற்றவாறு அமைதல் அவசியமாகிறது. உணவில் சுவை, உமிழ் நீரில் தேவையான அளவு, பசியின் தன்மை போன்றவை அறிவது அவசியமாகிறது.
இயற்கை உணவு:
மனித உயிருடல் வாழ, வளர, பரிணாம வளர்ச்சி அடைய உணவு அவசியமாகிறது. இயற்கை உணவிற்கும் – உயிருடல் இயக்கத்திற்கும் தான் நேரடியான மற்றும் இயல்பான தொடர்பு இருக்கிறது என்பதை அவசியம், மிக, மிக அவசியம் அறிய வேண்டும்.
உயிருடல் இயக்க வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் மூல காரணமாக அமைந்திருக்கும் உணவின் தன்மையும், அதன் சாராம்சங்களையும் நன்கு அறிதல் அவசியமாகிறது. “சுவையால் உணவு – உணவால் வளர்ச்சி”
சுவையால் உணவு – உணவால் வளர்ச்சி:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் உயிர் வாழ இயற்கை கட்டமைப்பில் உணவே பிரதானமாக இருக்கிறது. இயற்கை கட்டமைப்பில், உணவில் அமைந்திருக்கும் ஆறு வகையான சுவைகளும், உயிருடல் இயக்க அமைப்பில் அமைந்திருக்கும் ஆறு வகையான சுவைகளும் முறையாக ஒருங்கிணைந்து இயங்குகிற போது தான் உயிருடல் இயக்க வளர்ச்சி என்பது முழுமையாக, முறையாக, நிறைவாக அமைகிறது என்பதை மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உணவின் சுவையில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், உயிருடல் இயக்க சுவையில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் உடல் வளர்ச்சி இயக்ககத்தில் முரண்பாடுகள் உருவாகும் என்பதை ஒவ்வொரு மனிதனும் மிக மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மனித உயிருடல் இயக்கத்திற்கு ஒத்துக்கொள்ளாத உணவும், மருந்தும், நீரும், காற்றும் பாதிப்புகளை உருவாக்கும் சூழ்நிலை அமைப்புக்களின் பரவலாக்கமே மனித சமுதாயத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி பற்றாக்குறையை உருவாக்கியது. மனித சமுதாயம் இன்று வைரஸ் (கொரோன வைரஸ்) கிருமிகளின தாக்கம் அதிகமாக பரவுவதற்கும் காரணமாக அமைந்தது.
இயற்கை மருத்துவம்:
உணவே மருந்து – மருந்தே – உணவு எனும் கோட்பாட்டை உயிருடல் இயக்க அமைப்பிற்கு ஏற்றவாறு காலம் காலமாக நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அளவு அமைந்திருக்கிறது.
இயற்கை – இயல்பு சக்திகளையும், கால சூழ்நிலை இருப்பிட கட்டமைப்புகளையும் மனித உயிருடல் வாழ்வியலோடு அமைந்திருக்கும் முறையே இயற்கை மருத்துவ முறையாகும்.
மனித வாழ்வியல், கல்வியியல், தொழில் இயல், அனுபவ இயல், இயல்பியல், பகிர்ந்தளிக்கும் இயல் என வாழ்வாதாரத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்ந்து பங்களிக்கும் முறையே இயற்கை மருத்துவ முறையாகும்.
“ஓத்துக்கொள்ளாததை தவிர்ப்போம் வாழ்வாதாரத்தை சீரமைப்போம்”
நமது தினசரி உணவு, விவசாயம், பழக்க வழக்கம், பண்பாடு, பஞ்ச பூத தொடர்புகள், இயற்கை தொடர்புகள் மற்றும், இயற்கை கட்டமைப்பு என வாழ்வாதாரத்தில் வாழ்வியலாக அமைந்திருப்பது இயற்கை மருத்துவ முறையாகும்.
தீமை செய்யும் பாக்டீரியாக்கள், உயிரை கொல்லும் வைரஸ் கிருமிகள் என எவ்வகை கிருமிகளால் உருவாகும்நோய்கள் ஆனாலும், பாதிப்புகள் ஆனாலும் இயற்கை மருத்துவ முறையோடு இணைந்து செயல்படுதல் என்பது மனித வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவிகரமாக அமையும் என்பதை அறியலாம்.
விஞ்ஞான கல்வியல்: (விரிவாக்க பட இருக்கிறது)
புதிய கலாச்சாரம்: (விரிவாக்க பட இருக்கிறது)
மருந்து:
எதற்கெடுத்தாலும் மருந்து என்பதை கடந்து எதற்காக மருந்து சாப்பிடுகிறோம், நமது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், தடுமாற்றங்கள், உணவாலா, நிணைவாலா, இயற்கை சூழ்நிலை அமைப்பாலா, அனிச்சை செயல்பாடுகளின் முரண்பாடுகளாலா ……. என்பதை அவசியம் அறிய வேண்டும். மருத்துவரிடம் நமது உடலியல் இயக்க தொடர்புகள் அனைத்தையும் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.
நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் சிறு, சிறு விசயங்கள் எதுவானாலும் அதற்குரிய தீர்வுகள் எளிமையானதாக அல்லது மருத்துவ ரீதியாக என எதுவாக இருந்தாலும் தெளிவான முறையில் ஆலோசனை மேற்கொண்டு செயல்பட வேண்டும்.
தனித்துவம் ஆளுமை: (விரிவாக்க பட இருக்கிறது)
அறிவியல் & அரசியல்: (விரிவாக்க பட இருக்கிறது)
போட்டிகள்: (பொறாமை) (விரிவாக்க பட இருக்கிறது)
சுற்று சூழல் மாசுபடுதல்: (விரிவாக்க பட இருக்கிறது)
வாழ்வாதார சிதறல்:
இன்றைய காலகட்டத்தில் கொரோன வைரஸ் மனித சமுதாயத்தை வீழ்ச்சி அடைய செய்கிறது. மற்றும் மிக பெருமளவில் உயிர் பழி வாங்குகிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று வாழ்வாதார சிதறலாகும்.
ஆரு சுவைகள் கலந்த உணவை முறையாக வேக வைத்து சாப்பிடுகிற போது அவ்வுணவில் உள்ள சத்துக்களை உடல் முறையாக ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறு இல்லாமல் ஆரு சுவைகளோடு இணையாத பச்சை மாமிசத்தை பச்சையாகவோ, பச்சையாக சுட்டு சாப்பிடுகிற போதோ அந்த உணவானது அதிலுள்ள உயிர்ச்சத்துகளை இழப்பதோடு மாத்திரம் அல்லாமல் சீரணத்திற்கு உதவாமல் போகிறது. மேலும் அந்த உணவானது உடலில் சுரக்கும் ஆரு சுவைகளோடு இணையாத நிலை உருவாகிறது. மேலும் அந்த உணவின் சுவை மாறுகிறது (கலப்பின சுவையாய் மாறுகிறது). மேலும் அந்த சுவையோடு சாப்பிட நேர்ந்தால் அந்த உணவானது விஷத்தன்மை (நச்சுத்தன்மை) அடைந்து உடலை பாதிப்படைய செய்கிறது. இதனால் நமது உடல் செரிமான திறன் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
செரிமான திறன் பற்றாக்குறை:
கலப்பின சுவையோடு நாம் உணவை உண்ணுகிற போது நமது செரிமான திறனில் பாதிப்புகள் உருவாகும் நிகழ்வுகளை நன்கு அறிதல் அவசியமாகிறது.
சுவாச இயல் பற்றாக்குறை: (விரிவாக்க பட இருக்கிறது)
வைரஸ் கிருமிகளின் தாக்கம்: (விரிவாக்க பட இருக்கிறது)
இது வரை பயம் அறியாத நிலை: (விரிவாக்க பட இருக்கிறது)
ஆரோக்கிய பயிற்சிகள்:
மனிதன் மனிதனாக வாழ சிந்தித்தல், புரிந்து கொள்ளுதல், செயல்படுதல், பகிர்ந்து கொள்ளுதல், பாதுகாத்தல்…… போன்ற வாழ்வாதார முறைகளில் வாழ்ந்திட ஆரோக்கியம் அவசியமாகிறது. குழந்தை முதல் பெரியோர் வரை வாழும் காலம் முழுவதும் ஆரோக்கியம் அவசிய தேவையாகிறது. ஆரோக்கியம் வளர்ச்சி பெற பயிற்சிகள் தேவைப்படுகிறது.
பயிற்சிகள்:
பயிற்சிகள் என்பது உடல் உ யிருடல் ஆரோக்கியம் பெற உடல் பயிற்சி, மனபயிற்சி, புலன்கள் இயக்க பயிற்சி, சிந்தனை திறன் பயிற்சி ……. உயிருடல் இயக்கம் உள்ளும், புறமும் பாதுகாப்பு பெற முறையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி முறைகளை மேற்கொள்வது அவசியமாகும். உடலுக்கு ஏற்புடைய பயிற்சிகள் செய்வதோடு கீழ் காணும் வாழ்வியல் விதிகளையும் கடைபிடிக்க வேண்டும்.
பயிற்சிகள் வாயிலாக வளமுடன், நலமுடன் வாழ்தல் என்பது சுற்று சூழல் சுத்திகரிப்பு முறைகளோடு வாழ்வதே வாழ்வியலில் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெற இயலும்.
- விளையாட்டு பயிற்சிகள்
- முறையான உழைப்பால் உருவாகும் பயிற்சிகள்
- உடற்பயிற்சிகள்
- யோக பயிற்சிள்
- அனிச்சை செயல்களுக்கு முறையான வாய்ப்பளித்தல்
- இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்
- உழைப்பிற்கு ஏற்றவாறு முறையாக ஓய்வு பெறுதல்
- தேவையான அளவு உறங்குதல்
- இயற்கையோடு இணைந்து வாழ்தல்
- முறையான அளவு உடலுறவில் ஈடுபடுதல்
- பசித்து புசித்தல்
- உடல் ஏற்றுக் கொள்ள கூடிய உணவுகளை உண்ணுதல்
- போதும் என்ற அளவு அறிந்து உண்ணுதல்
போன்ற வாழ்வாதார கட்டமைப்பில் வாழ்ந்து பழகுதல் ஆகும்.
மேலும் தேவையான அளவு, முறையான பயிற்சிகளை முழுமையாக, நிறைவாக பெற்றோரும் – பிள்ளைகளும், ஆசிரியர்களும் – மாணவர்களும், என ஒவ்வொரு மனிதனும் கற்றறிந்து வாழ் நாள் முழுவதும் பயன்படுத்துதல் அவசியமாகிறது. அவ்வாறு இல்லாமல் அவசர தேவைகளுக்காக – கௌரவத்திற்காக – முறையாக பயிற்சி பெறாத பயிற்சி ஆசிரியர்கள் வாயிலாக – முழுவதும் நிறைவாக கற்றறிந்து வாழ்தல் இல்லாமல் போகிற போது ஆரோக்கியம் முழுமையடைதல் இல்லாது போகிறது.
செயற்கை வாழ்வியல்:
மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிற இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியல் அமைப்பில் உருவான அனுபவ கலாச்சார வாழ்வியலை மாற்றி அமைத்ததுவே செயற்கை வாழ்வியல் கலாச்சார முறையாகும்.
வைரஸ் – பயம்:
மனித உடல் வளர்ச்சி இயக்கத்தில், மனித உயிருடல் அமைப்பில் பாதுகாப்பு முறையாக நோய் எதிர்ப்பு சக்திகளும், நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அமைந்திருக்கிறது. அதேசமயம் மனித உடல் நோயால் பாதிக்கப்படுவதற்கும், அழிவதற்கும், வைரஸ் கிருமிகளும், தீமை செய்யும் பாக்டீரியாக்களும் இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.
வைரஸ் கிருமிகளினால் உடலில் நோய்கள் உருவாகும் என்றால் நோய்கள் கண்டு பயம் கொள்ளாமல் தன்னிலை சுத்திகரிப்பு, தன்னை சுற்றி உள்ள சூழலில் சுத்திகரிப்பு, எளிதாக சீரணம் ஆகும் உணவு முறைகளை பயன்படுத்துவதோடு, தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சுற்று சூழல் சுத்திகரிப்பு முறை அமைப்போடு வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டால் மனித உடலில் தேவையான அளவு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் அமைந்திருப்பதால் வைரஸ் மீது பயம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் வாழ்வியல் முறையில் விழிப்புணர்வு முறையோடு சுற்று சூழல் சுத்திகரிப்பு முறைகள் அமையும் இடத்தில் வைரஸ் கிருமிகள் வாழ இயலாது என்பதை அறியலாம்.
போட்டிகள்: (விரிவாக்க பட இருக்கிறது)
எச்சரிக்கை: (விரிவாக்க பட இருக்கிறது)
உலக மயமாக்கல்:
மனித வாழ்வியல் கல்வியில்: சுற்று சூழல் சுத்திகரிப்பு கல்வி, ஆரோக்கிய ஆதார பயிற்சி கல்வி, உயிருடல் இயக்க தொடர்பு கல்வி என்பதோடு மனித நேய கல்வியை உலக மயமாக்கல் செயல் வழி கல்வியாக (வாழ்வாதார அடிப்படை கல்வியாக) உலக நாடுகள் முழுவதும் கற்றுத்தர வேண்டும்.
உலகம் முழுவதும் காற்று மாசு அடைந்து வருவதை அறிந்த விஞ்ஞான கட்டமைப்பு, மனிதர்கள் தங்களது சுவாச இயல் காற்றை சுவாசிப்பதில் பலவீனம் அடைந்து வருவதை கவனிக்க தவர விட்டு விட்டோம்.
உலக மனித சமுதாயம் முழுவதும் பல்வேறு புதிய நோய்கள் உருவாகி வருவதை அறிந்து தீர்வு காணுகிற விஞ்ஞானம், உலக மனித சமுதாயத்தை அழிக்க வரும் வைரஸ் கிருமிகளின் குணத்தை முழுமையாக அறியவில்லை. அதேசமயம் மனிதர்கள் தங்களது வாழ்வியலின் மகத்துவத்தை நிறைவாக அறிந்து வாழ்வதில் பற்றாக்குறை தொடர்ந்து உருவாகிறது.
வைரஸ் கிருமிகள்:
வைரஸ் கிருமிகள் என்றால் தொற்று நோய்களை உருவாக்கும் கிருமிகள் என்ற தன்மையில் தான் கருதப்பட்டது. ஆனால் மனிதர்கள் சுவாசிக்கும் சுவாச இயல் காற்றில் வாழும் கிருமிகள் (வைரஸ் கிருமிகள்) Covid19 என்பதை நாம் அறிகிற நிலைகள் உருவாகிற போது வைரஸ் கிருமிகளின் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது. மனித சமுதாயத்தை பேரழிவில் நிறுத்தி தமது அழிவின் செயலை தொடர ஆரம்பித்து விட்டது.
வைரஸ் கிருமிகளின் வாழ்வாதார பாதிப்பு:
நச்சுத்தன்மை கலந்த காற்றில் வாழ்வதும், நோய் எதிர்ப்பு சக்தி பற்றாக்குறை உள்ள மனிதர்கள், உயிரினங்களுக்குள் சென்று கலப்பின சுவைத்தன்மையை உருவாக்கி உணவு செரிமான திறனை பாதிப்படைய செய்கிறது. அதேசமயம் மூளையில் உள்ள நியூரான்களை கொள்கிறது. மேலும் உயிருடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை கொல்லவும் செய்கிறது. அதோடு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை கொன்று உயிருடல் இயக்க வளர்ச்சி கட்டமைப்பை சோர்வடைய செய்கிறது. இதனால் சுவாச மண்டலம் பலவீனம் அடைந்து இதயத்தின் இயக்கத்திலும், நுரையீரல் இயக்கத்திலும் முரண்பாடுகளை உருவாக்கி ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை பலவீனம் அடைய வைத்து மரணத்தை உருவாக்குகிறது.
மனித உலகம் துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை வைரஸ் கிருமிகளால் எத்தனை எத்தனையோ நோய்கள் உருவாகி மனித வாழ்வாதாரத்தை மரண பாதிப்புகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. அவை எல்லாவற்றையும் தாண்டி மனித உலகத்தையே ஒட்டு மொத்தமாக பாதிப்பிற்குள் கொண்டு வந்தது கொரோனா வைரஸ் ஆகும்.
அவசிய தேவைகள்:
மனித வாழ்வியலை வலிமையான, வளமையான புரிந்து கொள்ளக்கூடிய வாழ்வியலாக்க ‘மனிதனை மனிதனாக்குவோம்.’
மனித அறிவை வெளிப்படுத்தி, மனிதனை மனிதனாக வாழக்கூடிய வாழ்வாதார கலாச்சாரத்தை உருவாக்குவோம். மனித வாழ்வியலை மேன்மையாக்குவோம்.
அனுபவங்கள் பகிர்தல்:
மனித வாழ்வாதாரத்திற்கு நலம், பாதுகாப்பு, உதவிகள், ஆரோக்கியம் …… போன்ற பல்வேறு காரணங்களுக்கு பகிர்ந்தளித்தல் எனும் முறைகள் மேன்மை தாங்கிய வாழ்வியலை முழுவதும் நிறைவாக முழுமையாக்கும். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், …….. போன்ற முறைகளின் அனுபவங்களை, விஞ்ஞான ஆய்வியல் முறைகளை, மனித வாழ்வாதார கலாச்சாரங்களை மனித நேயத்தோடு பகிர்தல் என்பது, மனித வாழ்வியலுக்கு தேவையான அளவு உதவியாக அமையும். மேலும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியலை இன்பமயமான வாழ்வியலுக்கு வழிவகுக்கும்.
கற்றலில் மிகப்பெரிய பாடம்:
மனித வாழ்வியல் வாழ்வாதாரத்தில் உனக்கு ஆரோக்கியம், எனக்கு ஆரோக்கியம் என்றில்லாமல் எல்லோருக்கும் ஆரோக்கியம் என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்தே ஆக வேண்டும். இல்லையெனில் இது வரை உலகில் ஆங்காங்கே உருவான நோய் கிருமிகளின் பாதிப்புகள் உருவானதை கண்டு அலட்சியம் கொண்ட நாம் இனியும் அவ்வாறு இருக்கலாகாது என்பதை திடமாக அறிய வேண்டும். அறிந்து வாழ வேண்டும். இல்லையெனில் மனித உலகம் மாத்திரமல்லாது தாவரங்கள், உயிரினங்கள் என எல்லா உயிரியல் அமைப்புகளையும் கொன்று நாமும் நம்மை அழித்துக் கொல்லும் நிலை உருவாகும். சுற்று சூழல் சுத்திகரிப்பு, இயற்கை பராமரிப்பு, இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பதை தெளிவாக அறிவோம். தெளிவாக வாழ்வோம்.
இயல்பு நிலையில் வாழ்க்கை: (விரிவாக்க பட இருக்கிறது)
நமக்கு நாமே காரணம்: (விரிவாக்க பட இருக்கிறது)
தீர்வுகள்:
பழமையும், வளமையும், வலிமையும், முழுமையுமான வாழ்வியலை நமக்கு நாமே அறிய வேண்டும்.
மனித உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே யார் என அறிய வேண்டும்.
பகுத்தறிவின் பலத்தில் பயணம் (வாழ்வியல் பயணம்) செய்திட (வாழ்ந்திடும் முறை) ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்திட வேண்டும். அதற்கு உரிய வாழ்வியல் வழிகாட்டுதலை உருவாக்கிட “வாழ்வியல் கல்வியில்” முறையாக உருவாக்கி வாழ்வாதார முறையாக வாழ்வியலை தொடர்ச்சியாக்குவோம்.
- சுத்தமே சுகாதாரம், ஆரோக்கியமே.
- ஆனந்தம், சிந்தித்தலே சீர்திருத்தம். *புரிந்துகொள்ளுதலே புலன்களின் இயக்க அமைப்பு.
- மனித நேயமே மாண்புமிகு வாழ்வு ….. என்பன போன்ற உயிரியல் – வாழ்வியல் தத்துவங்களை வாழ்க்கையின் முதுகெலும்பாக்கி மனித வாழ்வியலை – ஆரோக்கியமான வாழ்வியலை ஆனந்தமாக வாழ்ந்திடுவோம்.
நன்றி, வணக்கம்.
மேலும் விரிவாக வாருங்கள்
வணக்கம்,
கலப்பின சுவையை பற்றி தெரிந்து கொள்வதின் அவசியம் புரிகிறது. இதில் கலப்பின சுவையில் ஏற்க்கத்தகு முறை எவ்வாறு அமைகிறது?
நன்றி வணக்கம்.
வணக்கம்,
நாம் உண்ணுகின்ற உணவிலும் ஆறு வகையான சுவைகள் இயற்கையில் அமைந்திருக்கிறது. அதுபோலவே நமது உயிருடல் இயக்க அமைப்பிலும் ஆறு வகையான சுவைகள் சுரக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவானது உடலில் சுரக்கின்ற ஆறு வகையான சுவைகளோடு இணைந்து ஜீரணம் ஆகிற போது, நாம் உண்ணும் உணவில் உள்ள சக்திகள் முழுமையாக உடல் பெற்றுக் கொள்கிறது. சுவைகள் முரண்பாடாக அமைந்தால் கலப்பின சுவையாக மாறி உடலுக்கு ஒவ்வாமை தன்மையை உருவாக்குகிறது. மேலும் நிறைவாக அறிய ourmoonlife website பாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Thank you Sri M. Mathiyalagan sir, for the detailed reply, I have a follow up question to the above answer. If there are six type of tastes that secrete form in the body, in a food that contains one taste among the six tastes, will the 5 other tastes are found as flavor support and as hidden form? If that is the case, then will the conflicting nature that happens in the joining of tastes described in your explanation when there is a mixed taste in food. Does it happen to be in the type of confusion and contradictions of… Read more »