அனைவருக்கும் வணக்கம்,
பஞ்ச பூதங்களால் ஆன இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) வாழ்வதற்கு அவசியமான இயற்கை மூலகூறுகளில் வெப்பம், குளிர் (நீர்) அவசியமாகிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளிலும் ஒவ்வொரு விதமான சூழ்நிலைகளில், ஒவ்வொரு விதமான அளவுகளில் வெப்பம் – குளிர் (வெப்ப -தட்ப அளவுகள்) நிலவுகிறது.
பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு கோளிலும் வெப்பமும், நீரும் எந்த அளவிற்கு பயன்படுத்தபடுகிறதோ (இயற்கை பயன்பாடு) அந்த பயன்பாட்டு முறைகளை வைத்து தான் உயிரினங்கள் வாழ்வாதார முறைகளை உருவாக்க இயலும், இயலாது என்பதை தீர்மானிக்க இயலும் என்பதை அறிய வேண்டும்.
நாம் இதுவரை வாழுகின்ற பூமியில் வெப்பம், குளிர் என்பது உயிரினங்கள், தாவரங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.
நாம் வாழும் பூமியில் வெப்பம், குளிரின் அளவுகள் இடத்திற்கு இடம் மாறுபட்டு இருந்தாலும் அந்தந்த இடத்திற்கு ஏற்புடையதாக உயிரினங்கள், தாவரங்களின் வாழ்வாதார அமைப்புகள் இயற்கை கட்டமைப்பில் வாழ்வதற்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.
மாதிரி கோள் – பூமி:
பூமியில் இவ்வாறு மாறுபட்ட கட்டமைப்பில் வெப்பம், குளிர் அமைந்திருக்கும் இடங்களுக்கு வேறு சில இடங்களில் இருந்து வருகிற போது அதற்குரிய பாதுகாப்பு அமைப்புடன் கூடிய வாழ்வாதார கட்டமைப்புகள் இயற்கையில் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பூமி (கோள்) ஒன்று மாத்திரமே உயிரியல் வாழ்வாதாரத்திற்கு மாதிரி கோளாக அமைந்திருக்கிறது. அதனால் தான் பூமியில் வெப்பம் என்பது மிக குறைந்த அளவில் இருந்து மிக கூடுதலான அளவு வரை (+ துவங்கி ( _ வரை) ஆங்காங்கு பரவியிருக்கிறது. அதுபோலவே குளிரும் மிக குறைந்த அளவில் இருந்து மிக கூடுதலான அளவு ( + துவங்கி _ வரை) வரை ஆங்காங்கு பரவியிருக்கிறது. இவ்வாறு வெப்பமும், குளிரும் கூடுதலாகவும், குறைவாகவும் அமைந்திருந்தாலும் இயற்கை வாழ்வாதார கட்டமைப்பு அந்தந்த சூழ்நிலைகளில் தாவரங்கள், உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற அமைப்பு முறையாகவே அமைந்திருக்கிறது. மேலும் மண், மலை, நீர், நெருப்பு, சுவை, ஈர்ப்பு விசை, மழை, மேகம், பணி, சுழற்சி இயல், பகல் – இரவு …… என பூமியில் இயற்கை கட்டமைப்பில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்றவாறும், வாழ்ந்து கொண்டிருக்கும் விதமாக அமைந்திருக்கிறது என்பதை அறிந்தால் பூமி இந்த பிரபஞ்ச வாழ்வாதாரத்திற்கு மாதிரி கோளாக அமந்திருக்கிறது என்பதை தெளிவாகவே அறிய இயலும்.
சந்திரனில் வெப்பம் – குளிர்:
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான தேவைகளை விஞ்ஞான ரீதியாக அறிகிற போது தான் பகலில் வெப்பம் 130 டிகிரி செல்சியஸ் எனவும், இரவில் குளிர் மைனஸ் 170 டிகிரி எனவும் அறிய முடிகிறது.
சந்திரனில் வெப்பம் – குளிர் இவ்வாறு அமைந்திருந்தாலும் பூமியில் மேற்கூறியது போல் பகல் – இரவு, சுழற்சி இயல், கோள் ஈர்ப்பு விசை, மழை, நீர்…… போன்ற இயற்கை கட்டமைப்புகளும் பூமியில் உள்ளது இல்லாது மாறுபட்டிருக்கிறது. மேலும் தாவரங்கள், உயிரினங்கள் போன்ற உயிரியல் கட்டமைப்புகளும் இல்லை என்பதை அறிய வேண்டும். எனவே சந்திரனில் பூமியில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களின் வாழ்வாதாரத்தை உருவாக்க நிணைத்தால் பூமியில் உள்ள இயற்கை கட்டமைப்புகளை உருவாக்கினால் தான் இயலும் என்பதை அவசியம் அறியவேண்டும்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply