சந்திரன்: இணைதல் – இயக்குதல்

அனைவருக்கும் வணக்கம், 

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் இயங்கும் முறைகள் அவற்றுள் நாம் இயங்கிடும் முறைகள் என எல்லாவற்றின் விதிகளை அறிவதும், அவ்விதிகளை செயல்படுத்த உதவிடும் சூத்திரங்களை அறிவது அவசியமாகும்.

மனித வாழ்வாதாரத்திற்கு தேவையான ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூத்திரங்களும், விதிகளும் உருவாக்கப்பட வேண்டியிருக்கிறது. இவ்விதிகளும், சூத்திரங்களும் பூமியில் எளிதாக ஏற்படும் முரண்பாடுகளை உடைய வலிமையான இயக்கங்கள் நடைபெறும் போது நாம் இங்கு பல்லாயிரகணக்கான ஆண்டுகள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருவதால் நமது தேவைகள், சீரமைப்புகள் போன்றவற்றை புரிந்து கொள்ள இயலுகிறது. இருப்பினும் கழிவு முறைகள், சுத்திகரிப்பு முறைகள் என்பனவற்றில் ஏற்படும் பாதிப்புகள், அதன் தாக்கங்களை அறிந்தாலும் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு ஏற்புடைய முறையில் மாற்றி அமைப்பது என்பது மிகவும் சிக்கலான, சில வேளைகளில் மிகவும் கடினமான முறையாக இருக்கிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றாலும் வாழ்ந்து வருகிறோம் என்பதை அறிகிற போது நாம் வாழ்வியல் விதிகளை அறிந்து கொள்ள தயக்கம் காட்டுகிறோம், அல்லது முயற்சி செய்ய மறுக்கிறோம், அல்லது தெரியாது இருக்கிறது என பல்வேறு நிலைகளில் முரண்படுவதை அறிய இயலுகிறது. 

இந்நிலையில் நாம் பூமியை விட்டு வேறு எந்த கோளுக்கு (சந்திரனில்) வாழ்வாதாரத்தை உருவாக்க சென்றாலும் பூமியில் கழிவுகளின் பாதிப்புகள் எவ்வாறு தாக்கத்தை உருவாக்குகிறதோ அங்கும் அவ்வாறு தான் உருவாகும் என்பதை அறிய வேண்டும். இதனால் உருவாகும் பாதிப்புகள் நாம் வாழும் பூமியில் உருவாக்கிடும் தாக்கங்களை, அழிவுகளை தொடர்ந்து வாழச்செல்லும் கோளிலும் உருவானால் இதன் விளைவுகள் சூரிய குடும்பத்தை மாத்திரமல்ல அதற்கு அப்பாலும் உருவாகும் என்பதை அவசியம் அறியவேண்டும். 

எனவே வாழ்வியல் விதிகள், விதிகள் இயங்கிடும் சூத்திரங்கள் மற்றும் சூத்திரங்களின் விதிகள் என்பது மிகவும் நேர்த்தியாகவும், மனித நேயத்தை பாதுகாப்பதாகவும், உயிரியல் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சிக்கல் உருவாகாத முறையிலும், தாவரங்களின் வளர்ச்சி இயல், மறு சுழற்சி இயல் முறைகளும், ஒவ்வொரு கோளிற்கும், கோளின் பாதுகாப்பு வளையத்திற்கும் சேதாரம் உருவாகாத முறையிலும் அடையுமாறு பாதுகாத்து கொள்ளுதல் அவசியம் ஆகும். 

எனவே சந்திரனில் வாழ்வாதார முறைகளை உருவாக்கிடும் அதே வேளையில் மனிதனது விஞ்ஞான ஆய்வுகளில் மாசுகள் கலவாத நிலையில், விதிகள் உருவாக்கப்படும் முறையிலும், சூத்திரங்கள் உருவாக்கப்படும் அமைப்பு முறையிலும் மிகவும் கவனமாக உருவாக்கிட வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறோம். 

இங்கு நாம் உருவாக்கும் விஞ்ஞான விதிகள் மற்றும் சூத்திரங்கள் உயிரியல் வாழ்வாதார பாதுகாப்பு மையத்தை மையபடுத்தியே உருவாக்குகிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம். 

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் மைய அச்சாணியாக விளங்கும் பஞ்ச பூதங்களின் ஒருங்கினைப்பு முறைகளை வைத்தே வாழ்வியல் விதிகளும், சூத்திரங்களும் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம். 

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of