ஆய்வியல் தொடர்பு (கலந்தாய்வு)

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் முறையான, முழுமையான, இயல்பான வாழ்வு வாழ்வது தான் நமது (மனித) வாழ்வியலை முழுமைபடுத்துவது ஆகும். அவ்வாறு முழுமைபடுத்தப்பட்ட வாழ்வியலுக்கு ஆய்வியல் என்பதை அறிய வேண்டும்.

ஆய்வியல் தொடர்பு:
மனிதன் தமது வாழ்வியலுக்கு தேவையான ஒவ்வொன்றையும் விசாலமான முறையில், அகிலார் அனைவரும் பயன்படுத்துகிற வகையில், நிறைவான வழியில் பெறுவதற்கு பெரும் துணையாக அமைவது ஆய்வியல் தொடர்பு முறையாகும்.

ஆய்வியல் வளர்ச்சி இரு வகை:
1. வளர்ச்சி இயக்ககம்
2. இயக்க வளர்ச்சி
என இரு வகை நிகழ்வுகளில் தான் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது.

மனிதன் என்பவன் உடல் – மனம் – உயிர் எனும் முக்கூட்டு அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

* உடலுக்கு உணவு (ஆரோக்கியம்)
* மனதிற்கு ஆய்வு (வாழ்வியல் தொடர்புகள்)
* உயிருக்கு சக்தி என இயற்கை தொடர்புகளோடு இணைந்து பகுத்தறிவின் துணையோடு பிரபஞ்சத்தில் வாழும் முறைகளை அறிவதாகும்.

மனிதனது உடல் ‘வளர்ச்சி இயக்கத்திற்கு உணவும், மனதின் இயக்க வளர்ச்சிக்கு நினைவும்’ அவசியமானதாக அமைகிறது.

மனித வாழ்வியலுக்கு ஆய்வியல் என்பது மிக மிக அவசியமானது. ஏன் என்றால் இந்த உலகில் இயற்கையாக அமைந்திருக்கும் ஒவ்வொன்றும் பல பிரிவுகளை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம்.

இயற்கை கட்டமைப்பில்:
* பஞ்ச பூதங்கள்
* தாவரங்கள்
* உயிரினங்கள் என மனிதர்களின் வாழ்வியலுக்கு மூன்று மாபெரும் தொடர்பு அமைப்புடன் அமைந்திருக்கிறது.

இயற்கை கட்டமைப்பில் பஞ்ச பூதங்களின் துணையோடு வாழும் தாவரங்களோடு, உயிரினங்களோடு இணைந்து மனிதர்கள் மனிதர்களாக வாழும் முறைகளை அறிவதுவே ஆய்வியல் தொடர்பு முறையாகும்.

மனிதன் தொடர்ந்து உயிர் வாழ உணவு அவசியமாக அமைந்திருக்கிறது. அதற்கு தாவரங்களும், உயிரினங்களும் எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதை அறிவது அவசியம் ஆகும்.
அதில் உணவு, மருந்து, விஷம், கலப்பினம் என நான்கும் உணவு பிரிவுகளில் அமைந்திருக்கிறது.

மனிதன் தமது வாழ்வியலுக்கு தேவையானதை, அறிந்ததை பிற மனிதர்களோடு கலந்து ஆலோசிக்கும் முறைகளால் உருவானதை தான் ஆய்வியல், அறிவியல், கண்டுபிடிப்பு இயல் இயற்கை இயல் அறிதல், செயற்கை இயல் உருவாக்குதல் ….. என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.

பிரபஞ்சமே ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்கும் முறைகளில் அமைந்திருக்கிறது.
மனிதர்களும் தாம் அறிந்ததை, அறிவதை கலந்து அதன் தொடர்புகளில் உள்ள உண்மைகளை புரிந்து செயல்படுத்துவது அவசியம் ஆகும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of