வெப்ப சுழற்சியல்

அனைவருக்கும் வணக்கம்,

பிரபஞ்சத்தில் வெப்ப சுழற்சி இயல்:
பிரபஞ்சம் என்பது ஓர் சுழற்சி மயம். இந்த பிரபஞ்ச சுழற்சி மயத்தில் ஆகாய சுழற்சி மையமானது பிரபஞ்சத்தோடு தம்மை முழுமையும் இணைத்து வைத்திருக்கிறது. அதேசமயம் ஆகாய சுழற்சி மயத்தோடு வெப்ப சுழற்சி மயம் இணைந்து இருக்கிறது. பிரபஞ்ச சுழற்சி மயம் முழுவதும் சுழல்வதற்கும் காற்றே பிரதான சக்தியாக அமைந்திருக்கிறது. பிரபஞ்ச ஈர்ப்பு விசையாலும், காற்றின் துணையாலும் சுழல்கிற வெப்ப ஈர்ப்பு விசையானது பிரபஞ்ச இயக்க இயலுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இயக்கங்களுல் ஒன்றாக திகழ்கிறது.

மேற்குறிப்பிட்ட ஐந்தில் வெப்பத்தின் சிறப்பை நாம் இங்கு அறியலாம். வெப்பத்தின் சிறப்பு என்பது பிரபஞ்ச இயக்கத்தின் இயக்கங்களை இயக்குவதில் காற்றின் பிரதான துணையுடன் இணைந்து இருக்கிறது.

கோள் சுழற்சியால் வெப்ப சுழற்சி (வெப்ப காற்று) நிகழ்கிறது. வெப்ப சுழற்சியால் நீர் சுழற்சி (குளிர் காற்று) நிகழ்கிறது. நீர் சுழற்சியால் மண்ணில் காற்றின் சுழற்சியல் (வெப்ப – குளிர் காற்றின் இயல்பு நிலை) முழுமை பெறுகிறது.(அணைத்து சுழற்சியலுக்கும் காற்றே பிரதானமாக அமைகிறது). இதனால் இயற்கை பரிமாற்றம் மண்ணில் நிகழ்கிறது. இயற்கை பரிமாற்றத்தால் உயிரியல் பரிமாற்றமும், பரிணாம வளர்ச்சியும் தொடர்கிறது. எனவே கோள் சுழற்சியலை அறிவோம்.

வெப்ப சுழற்சியல்:

வெப்ப சுழற்சியல் சூத்திரம்
வெப்ப சுழற்சியல் சூத்திரம்

வெப்ப சுழற்சியானது பஞ்ச பூதங்கள் ஐந்தில் ஒன்றான இயக்கமாகவும், வெப்பமானது பஞ்ச பூதங்கள் ஐந்திலும் இணைந்து இயங்கும் இயக்கமாகும், பஞ்ச பூதங்கள் ஐந்தும் வெப்பத்தில் இணைந்து இயங்கும் இயக்கமாகவும் இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.

(படம்)
வெப்பத்தின் சுழற்சியல் காற்றின் துணையோடு இணைந்து இயங்குகிற போது வெளிச்சத்திற்கும், இருளுக்கும் துணையாக அமைகிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஒவ்வொரு மாபெரும் நிகழ்வுகளை அறிந்தால் பல்வேறு விபரங்களை புரிந்து கொள்ள இயலும்.

பிரபஞ்சத்தின் இயற்கை கட்டமைப்பு என்பது ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண் என ஐந்து அமைப்புகளால் ஆனது என்பதை அறிவோம். இவ்வைந்தும் இணைந்து இயங்கும் இயக்க அமைப்பில் இன்னும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததும், மிக சிறப்பு வாய்ந்ததுமாக இருப்பதை அறிய வேண்டியிருக்கிறது. அதாவது பஞ்ச பூதங்கள் ஐந்தின் தனிச்சிறப்பு உள்ளடங்கி இருக்கிறது என்பதை அறிவோம்.

பஞ்ச பூதங்கள் ஐந்தில் ஆகாயமானது மிகப்பெரிய, அகண்ட இடைவெளிகளை உள்ளடங்கி இருக்கிறது. மேலும் தமது இடைவெளிகளோடு இணைந்து இருக்கும் ஒவ்வொன்றோடும் தமது ஈர்ப்பு விசையில் இணைத்து வைத்திருக்கிறது. “பிரபஞ்ச ஈர்ப்பு விசையின் மிகப்பெரிய ஈர்ப்பு விசையாக விளங்குவது ஆகாய ஈர்ப்பு விசையே” ஆகும். இந்த ஆகாய ஈர்ப்பு விசையோடு தம்மை முழுமையும் ஈடுபடுத்தி கொண்டிருப்பது இரண்டு ஆகும்.

1. வெப்பம்
2. காற்று
என இரு மாபெரும் சக்திகள் இணைந்து இருக்கிறது.

வெப்பம்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஆகாய ஈர்ப்பு விசையோடு தம்மை முழுமையும் ஈடுபடுத்தி கொண்டிருக்கும் வெப்பமானது பிரபஞ்சம் முழுவதற்கும் வெப்ப சக்தியோடு வெளிச்சத்தையும் தருகிறது. வெப்பமும் – வெளிச்சமும் இணைந்த சக்தியானது சுழற்சி முறையில் இயங்குகிறது என்பதை அறிவோம்.

மேலும் அறிவோம் வாருங்கள்,

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of