வாழ்வியலில் ஆய்வு தொடர்பு

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரினங்களின் வாழ்வும் மகத்தானது என்பதை அறிய வேண்டும். அதிலும் மனித வாழ்வியல் மாத்திரம் எல்லா உயிரினங்களின் மகத்துவத்தில் மகத்துவம் வாய்ந்தது என்பதை அறிய வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

காரணம்:
அறிவை தேடியது. அதாவது அறிந்து கொள்ள தேடியது.

அறிந்து கொள்ள காரணம்:
தங்களுக்கு (ஆதி மனிதனுக்கு – ஆண், பெண்) வாழ்வியல் தொடர்பாக எதுவும் தெரியாது.
ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியது.
அவசியம் வாழ்வியலுக்கு,
* வாழ்வியலில் வாழ்வதற்கு உரிய தேவைகளை அவசியம் நிறைவேற்றுவதற்கு,
* உயிரியலில் உறவாடுவதற்கு,
* பரிணாம வளர்ச்சியில் பகிர்ந்து கொள்வதற்கு ….. என இயற்கையோடு இணைய வேண்டிய அவசியமா?!
அல்லது கட்டாயமா?!
என இதுவரை விடை தெரியாத வாழ்வியல் தொடர்புகள் என்பதை அறிவோமா!
எங்கு வாழ்க்கை துவங்கியது,
ஏன் இத்தனை பரிமாற்றங்கள்,
எதற்காக இத்தனை பரிணாம வளர்ச்சியில் முறைகள்,
அதற்குள் எத்தனை எத்தனை தெரிந்து கொள்ள வேண்டியவைகள்,
எத்தனை எத்தனை தேடுதல்,
எத்தனை எத்தனை கற்றல் முறைகள்,
எத்தனை எத்தனை குழப்பங்கள்,
எத்தனை எத்தனை ஆய்வுகள்,
எத்தனை எத்தனை தெளிவுகள்,
எத்தனை எத்தனை ஏக்கங்கள்,
எத்தனை எத்தனை அனுபவங்கள்,
எத்தனை எத்தனை பிறவிகள்,
எத்தனை எத்தனை வளர்ச்சிகள்,
எத்தனை எத்தனை முடிவுகள்,
எத்தனை எத்தனை பகிர்வுகள் ……. என எத்தனை எத்தனை வேண்டியது * வேண்டியது வேண்டியது ஆகிறது.
* வேண்டியது வேண்டாதது ஆகிறது.
* வேண்டாதது வேண்டாதது ஆகிறது.
* வேண்டாதது வேண்டியது ஆகிறது. என்பனவற்றுள் எல்லாம் இவை ஏன் இவ்வாறு நிகழ்கிறது. இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்க்க முற்பட்ட போது ‘பிரபஞ்ச படைப்பாளரே’ இதற்கு மூலமாகிறது எனவும், பிரபஞ்சமே ‘தாமாக (இயற்கையாக) தோன்றியது’ எனவும், தோற்றங்கள், நிகழ்வுகள் அனைத்திற்கும் இயற்கையே காரணமாகிறது என இதுவரை இருவகை கருத்து நிலவுகிறது.

இங்கு மேற்கூறப்படும் இருவகை தொடர்புகளை விரிவாக அறிய வேண்டிய அவசியம் உருவாகிறது.
இந்த அவசியத்தை அறிய நாம் நமது துவக்க காலத்தில் இருந்தே பிரபஞ்சத்தில் இயற்கை, உயிரியல், பிரபஞ்ச படைப்பாளர் என்பதையும், அறிவு, ஞானம் என்பதையும், அகம், புறம் என்பதையும் தெளிவாக தெரிந்துகொள்ள முற்பட்டால் அனைத்தும் புரியவரும்.

மனிதனின் துவக்க காலம்:
மனித வாழ்வின் துவக்க காலத்தில் இருந்தே பழக்க – வழக்கம் எனும் தொடர்பு கொண்டு தான் மிகப்பெரும்பாலான நிகழ்வுகள் நடைமுறையில் இருந்தது கொண்டிருக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of