வாழ்வாதாரம் உருவாக்குதல்

அனைவருக்கும் வணக்கம்,

மனித வாழ்வாதாரத்தின் அணைத்து வாழ்வியல் கட்டமைப்புகளை உள்ளடக்கியதே உயிரியல் வாழ்வியல் கட்டமைப்பு அல்லது உயிரியல் வாழ்வாதாரம் என்று கூறலாம்.

சந்திரனில் வாழ்வதற்குரிய இயற்கை கட்டமைப்புகளை உருவாக்கிய பிறகு உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும்.

சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்குதல் என்பது தனி மனித காரியம் அல்ல.

விஞ்ஞானிகள், உதவியாளர்கள், உபகரணங்கள் எனும் கூட்டமைப்பால் உருவாக்குகிற காரியம் ஆகும்.

சந்திரனில் வாழ்வாதார துவக்கமாக நீர் ஆதாரங்கள்,
நீர் பயன்படுத்துதல்,
மண் – நீர் சுத்திகரிப்பு செய்தல் ,
வெப்பம் குறைதல்,
நுண்ணுயிர்கள் வெளிப்படுதல்,
நீர் ஆவியாகுதல்,
மழை நீர் பொழிதல்,
கோள் ஈர்ப்பு விசை மாறுதல்,
கோள் சுழற்சியின் வேகம் கூடுதல்,
பகல் – இரவு தன்மையின் கால அளவுகள் மாறுதல் போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு தான் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான பணிகள் துவங்குதல் உருவாக்கப்பட வேண்டும்.

உயிரியல் வாழ்வாதாரம்:

 • மண் + நீர் பரிசோதனை (சந்திரன்)
 • நீர் சேமிப்பு (மண் நீர், மழை நீர்)
 • நுண்ணுயிர்கள் + மண் பரிசோதனை (சந்திரன்)
 • மண் + நீர் பரிசோதனை (பூமி)
 • நுண்ணுயிர்கள் + மண் பரிசோதனை (பூமி)
 • நுண்ணுயிர்கள் சங்கமம் (சந்திரன்)
 • நுண்ணுயிர்கள் சங்கமம் (பூமி)
 • தாவரம் + மண் + நுண்ணுயிர்கள்+ பாதுகாப்பு மருந்து(எரு) (பூமியிலிருந்து சந்திரனுக்கு)
 • விதைகள் மண் + நுண்ணுயிர்கள் + எரு + தாவர உண்ணிகள்(சிறு வகை உயரினங்கள்) (பூமியிலிருந்து சந்திரனுக்கு)
 • தாவர விவசாயத்திற்கு மாதிரி முறைகள் (சந்திரனில்)
 • உயிரினங்கள் வரவழைத்தல் (பூமியிலிருந்து சந்திரனுக்கு)
 • பாதுகாப்பு ஏற்பாடுகள்
 • வாழ்வாதார கட்டமைப்புகளுக்கு ஏற்பாடுகள்
 • மனிதர்களின் வாழ்வியல் அமைப்பு முறைகள்.

முறைகளை அறிவோம், முறையாக வாழ்வோம்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of