அனைவருக்கும் வணக்கம்,
சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்படுவதற்கு என்ன தடைகள் இருக்கிறது, அவற்றை எவ்வாறு சீரமைப்பது என்பதை அறிவோம். இந்நிகழ்வை அறிவதற்கு முன்பு பூமியில் எவ்வாறு மனித வாழ்வாதாரம் விசாலமடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல்வேறு உண்மைகளை அறிய இயலும்.
பூமியில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மனித சமுதாயம் சந்திரனில் வாழ துவங்குவது என்பது மிகவும் தெளிவாக, மிகவும் நுட்பமாக அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் நமது கடந்த காலத்தையும் மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ் காலத்தையும் கூர்ந்து கவனித்தால் புரியவரும்.
பூமியில் மனிதனது கடந்த கால சரித்திரத்தின் தொடர்ச்சியானது,
சந்திரனில் மனிதனது நிகழ் கால சரித்திர தொடர்ச்சியாகும் என்பதை அறிய வேண்டும்.
பூமியில் மனிதனது துவக்க வாழ்வியலை தொடர்ச்சியாக்குவதற்கு எண்ணிலடங்கா முயற்ச்சிகளில் வெற்றி அடைந்த சரித்திரமே/அனுபவமே ஆகும். அதுபோலவே சந்திரனில் மனித வாழ்வாதாரம் துவக்க நிலையில் உருவாக்கப்படுவதற்கு உரிய காரணங்களை முழுமையாகவும், முறையாகவும் அறிந்து செயல்படுவது சிறப்பான வழிமுறையாகும் என்பதை அறிவோம்.
பூமியில் மனித வாழ்வாதாரம்:
பூமியில் மனித வாழ்வியலின் துவக்க காலத்தில் இருந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து கவனித்தால் பல்வேறு உண்மைகள் புலப்படும்.
பூமியின் இயற்கை கட்டமைப்புகளை உற்று நோக்குவோம்.
* பசுமையான தாவரங்கள் ( அசைந்தாடும் பசுமையான புற்கள், செடிகள், கொடிகள், மரங்கள்)
* நீர் நிலைகள் (நீர் வீழ்ச்சிகள், மழை, பனி, ஓடும் நதிகள்)
* மலைகள் (பசுமை சார்ந்ததும், பசுமை சாராததும்)
* பகல் – வெப்பம் (காலை, மதியம், மாலை எனவும், மேகங்களில் மறைந்து வெளிப்படும் நிகழ்வுகள்)
* குளிர் (நீர் வீழ்ச்சி, மழை, பனி)
* ஒளி – இரவு (சந்திரனின் முதல் பிறையில் இருந்து பௌர்ணமியின் இறுதி பிறை வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள், நட்சத்திரங்களோடு இணைந்து வெளிப்படுதல், மேகங்களின் மறைவில் தோன்றும் இருள்)
* இருள் – இரவு (சந்திரன் முழுவதும் வெளிப்படாத இரவு – அமாவாசை தினம், நட்சத்திரங்களின் ஒளி நிகழ்வு மேகங்களின் தோன்றும் இருள்)
* காற்று (தென்றல், குளிர், புயல்)
* மண் (மண் துகள்கள், மணல் துகள்கள், இறுகிய மண், பாறை)
* உயிரினங்கள்
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply