மண் சுழற்சி இயல்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் கட்டமைப்பில் பஞ்ச பூத கலவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவும், ஒன்றோடு ஒன்று இணைந்தும் இருப்பதை காண இயலும்.

அதாவது, உதாரணமாக:
ஆகாயம்:

 • ஆகாயம் என்பது இடைவெளிகளை உள்ளடங்கி இருக்கிறது – தனி நிலை.
 • ஆகாயம் வெளிச்சத்தையும், இருளையும் பிரதிபலிக்கிறது – இணைந்த நிலை.

காற்று:

 • காற்று தனியாக சுழல்கிறது – தனி நிலை.
 • காற்று கோளின் சுழற்சி இயலுக்கு துணையாகிறது – இணைந்த நிலை.

வெப்பம்:

 • வெப்பம் உஷ்னமாய் இருப்பது – தனி நிலை.
 • வெப்பம் நீர் ஆவி ஆகுதலுக்கு துணையாகுதல் – இணைந்த நிலை.

நீர்:

 • நீர் திரவ (இயல்பு நிலை) நிலையில் இருக்கிறது – தனி நிலை.
 • நீர் பனிக்கட்டி ஆகுதல் – இணைந்த நிலை.

மண்:

 • மண் கெட்டியாக இருத்தல் – தனி நிலை.
 • மண் உடைதல் (மண்ணில் இடைவெளி உருவாகுதல்) – இணைந்த நிலை.
  எனவே பஞ்ச பூதங்கள் ஐந்தும் தனித்தும், இணைந்தும் இயங்குவதற்கு சுழற்சி இயக்கமும், ஈர்ப்பு விசையுமே காரணமாகிறது.

மண்ணின் மூலக்கூறுகள்:

 • மண்ணில் ஒட்டும் பசை
 • மண்ணில் உயிர் தாது சத்துகள்
 • மண்ணில் பஞ்ச பூதங்களோடு இணைந்து இயங்கும் ஈர்ப்பு விசை சக்திகள்

மண்ணில் ஒட்டும் பசை:
மண் கூட்டமைப்பு இணைந்து இருப்பதற்கு மண்ணில் ஒட்டும் பசை இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. மண்ணில் ஒட்டும் பசை நிறைவாக இருக்கிற வரை உயிர் தாது சத்துகள் மண்ணில் இணைந்து இருக்கும். மண்ணில் ஒட்டும் பசையும், உயிர் தாது சத்துகளும் நிறைவாக இருக்கிற வரை மண் பஞ்ச பூதங்களோடு இணைந்து நிறைவாக இயங்கும் சக்திகளை பெற்றிருக்கும். மண்ணின் இயக்கங்கள் நிறைவாக இருக்கிற வரை மண் ஈர்ப்பு (வெளி – உள் : மண்ணின் மேற்பரப்பு, உட்பரப்பு) விசை நிறைவாக இருக்கும்.

மண்ணின் ஒட்டும் பசை பாதிப்பு:
மண் பஞ்ச பூத இயக்கங்களோடு இணைந்து இயங்குகிறது. அவ்வாறு உள்ள இயக்கத்தில் பஞ்ச பூத இயக்க அமைப்பில் வெப்ப சக்தி கூடுதலாக (மின் காந்த அலைகளினால் உருவாகும் வெப்ப ஈர்ப்பு விசை) தொடர்ந்து வெளிப்படுமேயானால் அதேசமயம் நீரின் சக்தி மிக மிக குறைவாக வெளிப்படுமேயானால் மண்ணின் மூலக்கூறுகள் பாதிக்கப்படுகிறது.

மண்ணின் (கோள்) மேற்பரப்பில் தொடர்ந்து மின் காந்த அலைகளின் வெப்ப ஈர்ப்பு விசையால் மண் பாதிக்கப்படுமே ஆனால் அம்மண்ணின் சுழற்சி இயலின் (கோள் சுழற்சி இயல்) வேக அளவுகள் குறையும் வாய்ப்பு உருவாகிறது. மேலும் அம்மண்ணின் ஈர்ப்பு விசை (கோள் ஈர்ப்பு விசை) குறையும். இதனால் அம்மண்ணின் தரம் குறையும். எனவே அம்மண்ணில் இயற்கையின் வாழ்வாதார கட்டமைப்புகளை உருவாக்குவது இயலாது.

மண் உடைதல்:

 • மண் இறுகிய நிலையில்.
 • கெட்டியாக (கற்கல்) உடைகிறது.
 • மண் மண்ணாக சிறு துகழ்களாக (மண் ஒட்டும் பசையுடன் இருப்பது) உடைகிறது.
 • மண் மணலாக உடைகிறது.
  மண் மணலாக மாறுகிற போது, மீண்டும் மணல் மண்ணின் துணை இல்லாமல் மணல், மண் எனும் நிகழ்விற்கு மாற இயலாது. ஏனெனில் மணல் என்பது மண்ணின் ஒட்டும் பசையில் இருந்து விலகி விடுகிறது.

மண்ணில் சுழற்சி இயல் தன்மை:
மண் கெட்டி தன்மையாக இருப்பதும், உடைவதும் மீண்டும் கெட்டி தன்மையாக மாறுவதும், பல நிறங்களுக்கு உட்படுவதும் பஞ்ச் பூதங்களுடன் இணைந்து இயங்குவதே காரணமாகிறது. அதாவது சுழற்சி இயல் இயக்கமாக (ஈர்ப்பு விசையில்) சழன்று ஜட – உயிரியல், ஜடமற்ற உயிரியல் இயக்கத்தோடு இணைந்து இயங்க வேண்டிய சூழ்நிலை அமைப்புகளே காரணமாகிறது.

பஞ்ச பூதங்கள் ஐந்தில் இரண்டின் சிறப்பு:
நீர்:
பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்குகிற முறைகளில் நீர் மாறும் (திட, திரவ, வாயு) தன்மையாகிறது.
மண்:
பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கிற முறைகளில் உடைதலும், பிறகு ஒட்டிக்கொள்ளுதலுமாக மண்ணின் இயக்கம் வெளிப்படுகிறது.

மண்ணின் சிறப்பு:
மண்ணில் (கோள்) மாத்திரமே வெளி (மண்ணின் மேற்பரப்பில்) ஈர்ப்பு விசையும், உள் (மண்ணின் உட்பரப்பில்) ஈர்ப்பு விசையும் சுழற்சி இயல் தன்மையோடு இணைந்து இருக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்,

நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of