பூமி – சந்திரன் மைய அச்சு

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களின் இயக்கங்களையும் முழுமையாக அறிய வேண்டும் என்றால் கோள்களின் ஒவ்வொரு இயக்கங்களையும் அறிய வேண்டும். அதாவது கோள்களின் இயக்கங்களை அறிவோம்.

கோள் ஈர்ப்பு விசை, கோள் சுழற்சி இயல், பஞ்ச பூத கலவைகளின் செயல்பாடு, கோளின் மைய அச்சு இயக்கம் போன்ற இயக்கங்களை அறிதலே கோளின் இயக்கங்ளை அறிவதற்கு அவசியமாகிறது. இங்கு குறிப்பிட்ட ஒவ்வொரு இயக்கங்களையும் எளிமையான முறையில் தெரிந்து கொள்வோம். அதாவது நாம் இது வரை பூமியிலும், சந்திரனிலும் அறிய வேண்டிய விபரங்களை அறியலாம்.

கோள் ஈர்ப்பு விசை:
கோள் ஈர்ப்பு விசையை பூமியில் அறிந்த அளவிற்கு சந்திரனில் அறியவில்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கோள் ஈர்ப்பு விசை நிகழ்வதற்கு பஞ்ச பூத கலவைகளின் இணைந்த இயக்கங்கள் முதன்மையாக அமைந்திருக்கிறது. மேலும் பஞ்ச பூத கலவைகளின் இயக்கங்களினால் நிகழும் நிகழ்வுகளை இங்கு நாம் அறிய வேண்டும். அதாவது வெப்பம் + காற்று + நீர் + மண் + ஆகாயம் எனும் கூட்டமைப்பில் நிகழும் வெப்ப – குளிர் இணைந்து இயங்கும் இயக்கமே கோள் ஈர்ப்பு விசைக்கு காரணமாக அமைகிறது. அதாவது வெப்ப ஈர்ப்பு விசையும், தட்ப – வெப்ப (குளிர் – வெப்பம்) ஈர்ப்பு விசையுமே காரணமாக அமைகிறது.

பஞ்ச பூத கலவைகளின் இயக்கங்களோடு இணைந்து இயங்கும் கோள் ஈர்ப்பு (வெப்ப ஈர்ப்பு விசை, தட்ப ஈர்ப்பு விசை, வெப்ப – தட்ப ஈர்ப்பு விசை) விசைகளின் தன்மையால் கோளின் சுழற்சி இயக்கங்கள் நடைபெறுகிறது.
கோளின் சுழற்சி இயக்கங்கள் கோளின் மைய அச்சோடு இணைந்து இருக்கிறது.
கோள் ஈர்ப்பு விசைக்கும், கோளின் மைய அச்சிற்கும் உள்ள தொடர்பானது பிரபஞ்ச ஈர்ப்பு விசையுடன் இணைந்து இயங்கும் தன்மையில் அமைந்திருக்கிறது.

பூமியின் மைய அச்சு:
பூமியில் கோள் ஈர்ப்பு விசையானது வெப்ப ஈர்ப்பு விசை, தட்ப ஈர்ப்பு விசை, தட்ப – வெப்ப ஈர்ப்பு விசையின் இயக்கங்கள் இயல்பாக இயங்கும் விதமாக அமைந்திருக்கிறது.

பூமியின் மைய அச்சு சீரான நிலை:
பூமியில் கோளின் மைய அச்சு இயக்கம் இயற்கை இயல் வாழ்வாதாரத்திற்கும், உயிரியல் வாழ்வாதாரத்திற்கும் ஏற்புடைய வகையில் அமைந்திருக்கிறது.

சந்திரனின் மைய அச்சு:
சந்திரனின் கோள் ஈர்ப்பு விசையானது வெப்ப ஈர்ப்பு விசை மற்றும் தட்ப ஈர்ப்பு விசையின் இயக்கங்கள் இயல்பாக இயங்கும் விதமாக அமைந்திருக்கிறது. அதே சமயம் இவ்விரு ஈர்ப்பு விசைகளும் ஒரே இடத்தில் மிக குறைந்த கால அளவில் ஒன்றன் பின் ஒன்றாக நிகழவில்லை என்பதை நாம் இங்கு நன்கு அறிய வேண்டும். அதாவது குறிபிட்டு கூற வேண்டும் என்றால் சந்திரன் மண்ணின் மேற்பரப்பில் கோடை காலம் – குளிர் காலமாக அமைய வேண்டிய நிகழ்வுகள் இங்கு பகல் – இரவு காலமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பூமியை விட கூடுதலான அளவில் வெப்பத்தின் அளவும், குளிரின் அளவுமாக அமைந்துள்ளது. எனவே சந்திரனின் மைய அச்சு வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் சுழலவில்லை என்பதை அறிய வேண்டும்.
மேலும் அறிய வேண்டியதை நிறைவாக அறிய பூமியின் மைய அச்சின் சுழற்சி பற்றிய விபரங்களை அறிவோம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of