பிரபஞ்ச நுண்ணுயிர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களை மையபடுத்தி அமைந்திருப்பதை அறிவோம். பிரபஞ்சம் என்பது உயிரியல் வாழ்வாதாரத்திற்காகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோமா? ஆம் உயிரியல் வாழ்வாதாரத்திற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கருத்தை முழுவதும் புரிந்து கொள்வது அவசியம் என்பதை அறிய வேண்டும். ஏனெனில் நாம் இது வரை அறிந்த உயிரியல் பார்வை என்பது பூமியில் வாழ்கிற வாழ்வியல் அடிப்படையில் அறிந்து கொண்ட விபரங்கள் ஆகும்.

பிரபஞ்சம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு என்பதையும் அறிவோம். அதாவது
ஆகாயம் + வெப்பம் + காற்று + நீர் + மண்
எனும் ஐவகை கூட்டமைப்பில், பிரபஞ்ச ஈர்ப்பு விசையில் தனித்துவம் வாய்ந்த தனித்தனி இயக்க முறைகளிலும், ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் இயக்க கலவை அமைப்பு முறைகளிலும் இயங்குகிறது.
பிரபஞ்சம் என்பது பஞ்ச பூத (ஐவகை) கூட்டமைப்போடு இயங்குவது மட்டுமல்லாமல் உயிரியல் கட்டமைப்போடும் இணைந்து இயங்குகிறது.

நாம் வாழும் பிரபஞ்சத்தை இருவகை பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. பஞ்ச பூத இயற்கை இயல்.
2. இயற்கை உயிரியல்.
என இருபெரும் பிரிவுகளை ‘நடைமுறையில் புரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை’ கூர்ந்து கவனிப்போம்.

இதில் இயற்கை உயிரியல் எனபது இருவகை படும்,
1. பிரபஞ்ச நுண்ணுயிர்கள்
2. உயிரினங்கள் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்)

பஞ்ச பூத இயற்கை இயல்:

பஞ்ச பூத இயற்கை இயலை நடைமுறையில் அறிய வேண்டிய விபரங்களை அறியலாம். பஞ்ச பூத இயற்கை இயல் என்று குறிப்பிடுவதை ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண் என இவ்வைந்தை பஞ்ச பூதங்கள் என்றும், பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் கலவை இயக்கங்களோடு கோள்கள், நட்சத்திரங்கள் எனவும், இவற்றோடு உயிரியல் (நுண்ணுயிர்கள்) அமைப்புகளும் என மூவகை இயக்கங்களாக இணைந்து இயங்கும் நிகழ்வுகளாக அமைகிறது.

தெரிந்ததும் – தெரியாததும்:
பஞ்ச பூத இயற்கை இயல் தொடர்பில் மூவகை (தொடர்பு) இயக்கங்கள் இருக்கிறது.
அதாவது,
1. பஞ்ச பூதங்கள்.
2. பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் கலவை இயக்கங்கள்.
3. உயிரியல் அமைப்புகள் – எனும் மூவகை அமைப்புகளில் புறத்தில் (கண்கள் – பார்த்தல், உணர்தல்) அறியக்கூடிய விசயங்களாக பஞ்ச பூதங்கள், பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் கலவை இயக்கங்களாக வெளிப்படுகிறது.

பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் கலவை இயக்கங்களே பிரபஞ்ச இயக்கங்கள் இயங்குவதற்கும், உயிரியல் வாழ்வாதாரம் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது. இதில் மூன்றாவதாக அமைந்திருக்கும் உயிரியல் அமைப்புகளில் பிரபஞ்ச நுண்ணுயிர்களை மாத்திரம் நமது புறக்கண்களால் காண இயலாது. அதவும் மண்ணின் மேற்பரப்பில் வாழ இயலாத நிலையில் இருப்பதால் விஞ்ஞான ஆய்வியல் அடிப்படையில் கூட அறிந்து கொள்ள இயலாது என்பதை அறிய வேண்டும்.

அதேசமயம், கோள் சுழற்சி இயக்கங்களின் துணையால் மண்ணின் உட்பரப்பில் உள்ள பிரபஞ்ச நுண்ணுயிர்களை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவருவோமேயானால். விஞ்ஞான ஆய்வுகள் அடிப்படையில் அறிந்துகொள்ள இயலும் என்பதை அறிய வேண்டும்.

பிரபஞ்சம் முழுவதும் உயிரியல் அமைப்பு முறைகள் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருப்பதே பஞ்ச பூதங்களும், பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் கலவை இயக்கங்களே காரணமாக அமைகிறது.

பிரபஞ்சம் முழுவதும் உயிரியல் அமைப்பு முறைகள் கோள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

உயிரியல் அமைப்புகள்:
பிரபஞ்ச உயிரியல் கட்டமைப்பை பொறுத்தவரை பஞ்ச பூதங்களின் துணை கொண்டு தான் வாழ்கிறது.
அதாவது

  • பஞ்ச பூத கலவையில் ஆகாய இடைவெளிகளில் வாழ்கிறது.
  • வெப்ப சக்தியின் துணை கொண்டு வாழ்கிறது.
  • காற்றின் துணை கொண்டு வாழ்கிறது.
  • நீரின் தன்மையோடு இணைந்து வாழ்கிறது.
  • மண்ணை இருப்பிடமாக வைத்து வாழ்கிறது என பஞ்ச பூதங்களின் தனித்துவ வாழ்வியல் குறிப்பிடபடுகிறது.

பிரபஞ்ச உயிரியல் கட்டமைப்பை பொறுத்தவரை பஞ்ச பூத கலவைகளின் இணைப்பு இயக்க சக்தியின் துணை கொண்டு தான் வாழ்கிறது.
பஞ்ச பூதங்கள் கலவை இயக்கங்களில்

  • ஆகாயத்தில் சுழன்று வரும் காற்றின் துணை கொண்டு வாழ்கிறது.
  • ஆகாயத்தில் சுழன்று வரும் காற்றில் வெப்ப சக்தியின் கலவையில் இணைந்து வாழ்கிறது.
  • ஆகாயத்தில் சுழன்று வரும் காற்றில் வெப்ப சக்தியின் கலவையில் நீரின் சக்தி கலவையோடு இணைந்து வாழ்கிறது.
  • ஆகாயத்தில் சுழன்று வரும் காற்றில் வெப்ப சக்தியின் கலவையில் நீர் சக்தியின் கலவை மண்ணோடு இணைந்து வாழ்கிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் அமைப்புகளை அறிவது என்பது அறிவியல் வல்லுநர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிற விசயங்களுல் ஒன்றாகும்.

உயிரியல் வாழ்வாதாரத்தால் மனிதர்களுக்கு எந்த அளவுக்கு பயன்பாடுகள் இருக்கிறதோ அதே அளவுக்கு பராமரித்தலும் அமைந்திருக்கிறது என்பதை அறிவது அவசியமாகிறது. இந்த ஆய்வில் (உயிரியல் அமைப்புகள்) இது போன்ற விபரங்களை தெரியபடுத்துவதன் அவசியம் ஏன் என்பதை தெரிந்து கொள்வோமா?. ஏனெனில் நாம் இது வரை அறிந்த உயிரியல் விபரங்கள் அணைத்துமே பூமியில் இருந்து அறிந்து கொண்ட விபரமாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும். அதாவது நுண்ணுயிர்கள், வைரஸ் உயிரினங்கள், பாக்டீரியாக்கள் உயிரினங்கள், ஊர்வன உயிரினங்கள், நடப்பன உயிரினங்கள், பறப்பன உயிரினங்கள் என மிகச்சிறிய உயிரினங்கள் துவங்கி மிகப்பெரிய உயிரினங்கள் வரை (இதில் மனிதர்கள், தாவரங்கள் உள்ளடங்கும்) அறிந்தவை அணைத்துமே பூமியில் இருந்து தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சந்திரனில் நமது விஞ்ஞானிகளின் உயிரியல் ஆய்வில் எந்த வகையான உயிரியல் (நுண்ணுயிர்களையும் சேர்த்து தான்) அமைப்புகளும் இல்லை என்று தான் குறிப்பிட்டுள்ளதை நினைவில் கொள்வோம்.

பூமியில் உயிரியல்:
பூமியில் உள்ள உயிரியல் அமைப்புகள் அணைத்துமே மனிதர்கள் பூமியில் வாழத்துவங்கிய காலத்தில் இருந்தே இருந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

சந்திரனில் உயிரியல்:
சந்திரனில் உள்ள நுண்ணுயிர்களை (உயிரியல்) அறிந்தால், சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்குதல் எளிமையானது என நினைத்து விட இயலாது.

சந்திரனில் உள்ள நான்கு வகை (காற்று நுண்ணுயிர்கள், நீர் நுண்ணுயிர்கள், வெப்ப நுண்ணுயிர்கள், மண் நுண்ணுயிர்கள்) நுண்ணுயிர்களின் வாழ்வாதார ஒருங்கினைப்பை உருவாக்கினால் தான் சந்திரனில் வாழ்வாதார கட்டமைப்பை உருவாக்க இயலும்.

சந்திரனில் உள்ள நான்கு வகை நுண்ணுயிர்களையும் ஒருங்கிணைந்த வாழ்வியல் அமைப்பாக உருவாக்க வேண்டும் என்றால் சந்திரனின் சுழற்சி இயக்கத்தை பூமியின் சுழற்சி இயக்கத்திற்கு (பகல் – இரவு சுழற்சி) ஏற்புடைய (மிக குறைந்த பட்ச அளவிலாவது) முறையில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்படுவதற்கு காரணம் இருக்கிறது. என்னவென்றால் சந்திரனின் சுழற்சி இயல் என்பது பூமியின் சுழற்சி இயல் நிகழ்விற்கு அருகில் நிகழ்வதால் இச்சீரமைப்பு மாற்றம் அத்தியாவசியமாகிறது.

சந்திரனின் சுழற்சி வேகம் அதிகரித்தல் இல்லாமல் இருந்தால் நான்கு வகை நுண்ணுயிர்களின் வெளிப்பாடு என்பது இயலாது. மேலும் சந்திரனில் சுவாச இயல் காற்று சுழற்சி இயல் இணைதல் உருவாகாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாச இயல் காற்று சுழற்சி இயல் நிகழ்கிற மண்ணில் தான் உயிரினங்கள் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) இயல்பாகவும், சுதந்திரமாகவும் வாழ இயலும்.

சுவாச இயல் காற்று சுழற்சி இயல்: கோளில் பஞ்ச பூத இயக்கங்களின் தொடர்பில் “வெப்பம் + காற்று + நீர்” என இம்மூவகை அமைப்புகளும் மண்ணின் மேற்பரப்பிலும் – உட்பரப்பிலும் தொடர்பு இயக்க கலவை சுழற்சி முறைகளை சுவாச இயல் காற்று சுழற்சி இயல் என்கிறோம். மேலும் சுவாச இயல் காற்று சுழற்சி இயல் முறைகளில் தான் உயிரியல் கட்டமைப்பு அமைந்துள்ளது

உயிரியல் கட்டமைப்பு:
பிரபஞ்சத்தில் உயிரியல் கட்டமைப்பு என்பது சுவாச இயல் முறையிலும், சுவாச இயல் காற்று சுழற்சி இயல் முறையிலும் வாழ்வாதார அமைப்பு முறையிலும் அமைந்திருக்கிறது.

சுவாச இயல் முறையில் பிரபஞ்சம் முழுவதும் உயிரியல் வாழ்வாதாரம் (நுண்ணுயிர்கள்) கட்டமைக்கபட்டிருக்கிறது. இம்முறையில் உயிரியல் வாழ்வாதாரம் என்பது கோளில் மண்ணின் உட்கட்டமைப்பில் (உட்பரப்பில்) அமைந்திருக்கிறது.

சுவாச இயல் காற்று சுழற்சி இயல் முறையில் உயிரியல் (நுண்ணுயிர்கள், தாவரங்கள், மனிதர்கள், உயிரினங்கள்) வாழ்வாதாரம் என்பது கோளில் மண்ணின் உட்கட்டமைப்பிலும் – வெளிகட்டமைப்பிலும் ( மண்ணின் உட்பரப்பிலும் – மேற்பரப்பிலும்) அமைந்திருக்கிறது.

வாழ்வாதார இயக்கம்
பஞ்ச பூத கலவைகளின் இயக்கம் பிரபஞ்ச ஈர்ப்பு விசையில் இயங்குகிறது.

உயிரியல் வாழ்வாதார இயக்கம் பிரபஞ்ச ஈர்ப்பு விசையில் அமைந்திருக்கும் சுவாச ஈர்ப்பு விசையோடு அமைந்திருக்கிறது.

மேலும் அறிவோம், வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of