பிரபஞ்ச ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

நாம் இந்த பிரபஞ்சத்தில் அறிய வேண்டிய முதல் நிகழ்வு எது என்றால் அது ஈர்ப்பு விசை ஆகும். அதுபோலவே மிக முக்கியமாக அறிய வேண்டிய நிகழ்வும் ஈர்ப்பு விசை ஆகும். ஏனென்றால் பிரபஞ்சமே ஈர்ப்பு விசையால் இயங்குகிறது.

ஈர்ப்பு விசை
ஈர்ப்பு விசையால் இயங்குகிறது பிரபஞ்சம்.
பிரபஞ்ச ஈர்ப்பு விசை
பிரபஞ்ச ஈர்ப்பு விசையின் ‘இயக்க தொடர்பில்’ தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஈர்ப்பு விசைகளும் இயங்குகிறது.

பிரபஞ்ச ஈர்ப்பு விசையில்:
1. பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை,
2. பஞ்ச பூத ஈர்ப்பு விசை,
3. வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை
4. ஒளி – இருள் ஈர்ப்பு விசை
5. கோள் ஈர்ப்பு (இயக்க) விசை,
6. கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை,
7. கோள் சுழற்சி இயல் ஈர்ப்பு விசை
8. காந்த ஈர்ப்பு விசை,
இங்கு குறிப்பிடுகிற 8 வகையான ஈர்ப்பு விசைகளே பிரபஞ்சத்தில் மிக முக்கியமான ஈர்ப்பு விசைகள் ஆகும். இந்த 8 ஈர்ப்பு விசைகளுக்குள் தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வகையான ஈர்ப்பு விசைகளும் உள்ளடங்கும் என்பதை அறிய வேண்டும்.

பிரபஞ்ச ஈர்ப்பு விசை இரு பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கிறது.
1. முறை சார்ந்த ஈர்ப்பு விசை
2. முறை சாரா ஈர்ப்பு விசை

முறை சார்ந்த ஈர்ப்பு விசை:
முறை சார்ந்த ஈர்ப்பு விசை என்பது பிரபஞ்சத்தில் முறையான & முழுமையான ஒன்றாக குறிப்பிடுவது ஆகும்.

முறை சாரா ஈர்ப்பு விசை:
முறை சாரா (சாராத) ஈர்ப்பு விசை என்பது உயிரியல் வாழ்வாதாரத்தை முன்னிட்டு (தேவைபடுகிற போது) சீரமைப்புகளுக்கு உட்படுத்த வேண்டியதாக அமைந்திருப்பதாக இருக்கிறது.

பிரபஞ்ச ஈர்ப்பு விசையில் முறை சார்ந்த தொடர்பு அமைப்புகளையும், முறை சாரா தொடர்பு அமைப்புகளையும் அறியலாம்.

முறை சார்ந்த தொடர்பு அமைப்புகள்:
1. பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை,
2. பஞ்ச பூத ஈர்ப்பு விசை,
3. வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை
4. ஒளி – இருள் ஈர்ப்பு விசை என நான்கு பெரும் பிரிவுகளாக அறியலாம்.

முறை சாரா தொடர்பு அமைப்புகள்:
1. கோள் ஈர்ப்பு (இயக்க) விசை,
2. கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை,
3. கோள் சுழற்சி இயல் ஈர்ப்பு விசை
4. காந்த ஈர்ப்பு விசை என நான்கு பெரும் பிரிவுகளாக அறியலாம்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் முறை சார்ந்த தொடர்பு அமைப்புகளாக விளங்கும் பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை, பஞ்ச பூத ஈர்ப்பு விசை, வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை, ஒளி – இருள் ஈர்ப்பு விசை என்பவை நான்கும் பிரபஞ்சத்தின் மூல சக்திகளாக அமைந்திருக்கிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் முறை சாரா தொடர்பு அமைப்புகளாக விளங்கும் கோள் ஈர்ப்பு விசை, கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை, கோள் சுழற்சி இயல் ஈர்ப்பு விசை, காந்த ஈர்ப்பு விசை என்பவை நான்கும் பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை கட்டமைப்புகளாக அமைந்துள்ளது.

முறை சாரா தொடர்பில் சீரமைப்பு:
மனிதர்களின் வாழ்வாதாரம் ஒரு கோளில் உருவாக்கப்பட வேண்டும் என்றால் ஜட உயிர் இயற்கையில் ஜடமற்ற உயிர் இயற்கையில் வாழ்வதற்கு உரிய வாய்ப்புகள் அமைந்திருக்க வேண்டும். அதாவது ஜட உயிர் என்றழைக்கப்படும் பஞ்ச பூதங்களின் தொடர்பு நிறைவு பெற்றிருக்க வேண்டும். எவ்வாறு எனில் காற்று, வெப்பம், நீர் ஆகிய மூன்றும் கோளின் மண் அமைப்போடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தொடர்பு கொள்வதில் காற்று, வெப்பம், நீர் ஆகிய மூன்றில் ஒன்று அல்லது இரண்டு கோளில் தேவையான அளவு நிறைவு பெறவில்லை என்றால் அங்கு உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்க இயலாது என்பதை அறிய வேண்டும். எனவே அக்கோளில் பஞ்ச பூத சீரமைப்பு முறைகளை முறைப்படுத்த வேண்டும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of