அனைவருக்கும் வணக்கம்,
பூமியில் மிக நெடுங்காலமாக வாழ்கின்ற நாம் திசைகளை அறிவதற்கு பகலில் சூரியன் தோன்றுவதையும், மதியம் நடு வானில் மிக பிரகாசமாய் இருப்பதையும், மாலையில் மறைவதையும் வைத்து தான் நேர அளவையும், திசைகள் அளவையும் கனிக்க ஆரம்பித்து வாழ்வாதார கடமைகளை செய்து கொண்டு இருக்கிறோம்.
நாம் காலையில் கிழக்கில் சூரிய உதயமும், மாலையில் மேற்கில் சூரிய மறைவையும் காணுகின்றோம். துவக்க காலத்தில் இருந்து இரவில் வெளிச்சத்தையும், வாழ்வியலுக்கு வழிகாட்டியாக இருந்ததும் சந்திரனே ஆகும். பகலில் சூரியன் தினமும் காலையும், மாலையும் தோன்றி மறையும் தன்மை கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் நிகழ்வுகளை போல் சந்திரனின் இயக்கம் இல்லை என்பதை அறிய வேண்டும். அதாவது பௌர்ணமி அன்று மாத்திரமே சந்திரன் மாலையில் கிழக்கில் தோன்றி மாலையில் மேற்கில் மறையும் நிகழ்வு இருக்கிறது. பௌர்ணமி அல்லாத நாட்களில் அதாவது வளர்பிறை, தேய்பிறை கால கட்டத்தில் பார்த்தால் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் நிகழ்வுகள் மாலையும் காலையுமாக நிகழ்வது நமக்கு தெரிவதில்லை. இதற்கு காரணம் சந்திரனின் சுழற்சி கால வேக அளவுகளே காரண காரனியாக அமைந்திருக்கிறது.
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு இயற்கை கட்டமைப்பு இயல்புநிலை (சீரமைத்தல்) உருவான பிறகும், உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பு உருவான பிறகும் பார்த்தால் திசைகளின் நிலை புரியவரும். அதாவது கிழக்கில் காலையில் சூரிய உதயம் தோன்றுவதும், மேற்கில் மாலையில் சூரியன் மறைவதும் நிகழ்வது போலவே சந்திரனும் மாலையில் கிழக்கில் உதயமாவதும் விடியற்காலையில் மேற்கில் மறைவதுமாக உருவாகும் என்பதை அறியலாம்.
சந்திரனில் வாழ்வாதார சீரமைத்தலுக்கு பிறகு கடிகார நேர அளவு என்பது 28 மணி நேரமாக அமையும். இரவு என்பது 21 மணிக்கு துவங்கி காலை 7 மணிக்கு முடியும் நிகழ்வாக அமையும். அது போலவே பகல் என்பது காலை 7 மணிக்கு துவங்கி 21 மணிக்கு முடியும் என்பதை அறிய வேண்டும்.
பூமியில் தினமும் கிழக்கில் காலையில் தோன்றும் சூரியன் மேற்கில் மாலையில் மறையும் நிகழ்வுகள் அமைந்திருப்பது போலவே சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் சீரமைத்தலுக்கு பிறகு சந்திரனும் கிழக்கில் மாலையில் தோன்றி மேற்கில் காலையில் மறையும் நிகழ்வுகள் தினமும் நடைபெறும் என்பதை அறிய வேண்டும்.
நன்றி, வணக்கம்.
மேலும் அறிவோம் வாருங்கள்.
Leave a Reply