சந்திரன் அறிய வேண்டியவை

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கிட முயற்சி செய்கிறோம். அதே சமயம் (நேரம்) சந்திரனில் ‘அறிய வேண்டியவை எது’ என்பதை அறிய வேண்டியது அவசியம் ஆகும்.

பல நெடுங்காலமாக பூமியில் வாழ்ந்து பழகிய நாம் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) இங்கு (பூமியில்) வாழ்வாங்கு வாழ்ந்த அனுபவங்கள், கற்ற பாடங்கள், பகிர்ந்து கொண்டு தொடரும் வாழ்வியல் முறைகளினால் உருவான அறிவியலின் விளைவுகளை கொண்டு சந்திரனில் வாழ்வாதாரத்தை தேட முற்படுகிறோம். இதனால் “சந்திரனில் எந்த ஒரு முன்னேற்றமும் உருவாகவில்லை”. காரணம் என்ன தெரியுமா? பூமியில் உள்ளது போல் சந்திரனிலும் அணைத்தும் அமைந்திருக்கும் என்று நம்பிக்கை கொள்வதே ஆகும்.

ஆனால்,
நடப்பது என்ன?
நடந்து கொண்டிருப்பது என்ன?

நடப்பது என்பது பூமியில் உள்ளது போலவே நீர், காற்று, வெப்பம், மண், பசுமை, தென்றல்……. என உயிரினங்கள், தாவரங்கள் வாழ்வதற்கு தேவையான அணைத்து மூலக்கூறுகளும் உள்ளடங்கிய பகுதிகள் எங்குள்ளது என்று தேடிக்கொண்டிருக்கிறோம்.

நடந்து கொண்டிருப்பது என்பது ஏற்கனவே சந்திரனில் ஆய்வுகள் ( உதாரணம்: நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினர்) மேற்கொண்ட விசயங்களின் முறைகளை விட்டு விட்டு தேடும் முயற்சியில் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமைகிறது. அதாவது சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை மாறுபட்டு இருப்பதும் அதற்கு என்ன தீர்வு என்பதையும் விடுத்து நீர் எங்கிருக்கிறது, குளிர்ச்சி எங்கிருக்கிறது என்பதும் அதில் (மண்ணில்) விதைகளை இட்டால் முளைக்கும்? செடிகளை நட்டால் துளிர்க்கும்? என்று முயற்சிகளை மேற்கொள்கிறோம்.( இதனால் அறிய முற்படுவது என்ன என்பதை அறிவோமா?

அறிவோம் வாருங்கள்.
பூமியில் உள்ளது போல் கோள் ஈர்ப்பு விசை சந்திரனில் இல்லை(மாறியிருக்கிறது) என்பதை தெரிந்தும் (கோள் ஈர்ப்பு விசையின் தன்மை மாறி அமைந்திருக்கும் இடத்தில் (சந்திரனில்) விதைகள் முளைக்குமா அல்லது முளைக்காதா என்பதை அறிவோமா!) அதை சீரமைப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் வாழ்வாதாரத்தை உருவாக்குதல் என்பது இயலாது.

பகல் – இரவு
பகல் – இரவு நிகழ்வுகள் என்பது பூமியில் 24 மணி நேரத்தில் நடைபெறுகிறது. அதில் 12 மணி நேரம் பகலாகவும், 12 மணி நேரம் இரவாகவும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் வாழ்ந்து பழகிய மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் சந்திரனில் வாழ்வது என்பது தற்போது உள்ள சூழ்நிலையில் (முழு பகலாக மாற 14 நாட்கள், முழு இரவாக மாற 14 நாட்கள்) இயலாது என்பதே முடிவாகும்.

கோள் சுழற்சி இயல்
கோள் சுழற்சி இயலில் ஏற்பட்டுள்ள வேக அளவுகள் (தம்மை தாமே) பாதுகாப்பு வளையத்தின் சுழற்சி இயக்க அளவுகளை இயற்கை கட்டமைப்போடு இணைவதில் முரண்பாடுகள் உருவாவதால் வின் கற்கள் விழும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பை தரும் அளவில் இல்லாது இருக்கிறது. வின் கற்கள் விழும் அபாயத்தில் இருந்து சந்திரனை மீட்காவிடில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான சாத்திய கூறுகள் பலன் அற்றவை ஆகும். ஏனெனில் அங்கு வாழும் தாவரங்கள், உயிரினங்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்திக்க இயலும்.

சந்திரனில் இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் சந்திரனின் இயற்கை கட்டமைப்பு இருக்கிறது என்பதை அறிவோம்.

அறிந்து செயல்படுவோம், ஆனந்தமான வாழ்வியலை உருவாக்குவோம், வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of