சந்திரன் படம்
அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பூமி பகல் – இரவு எனும் இரு நிகழ்வுகளை உள்ளடக்கியது.
பகல் என்பது வெப்பத்திற்கும் – வெளிச்சத்திற்கும் உரியது.
இரவு என்பது இருளுக்கும், குறைவான வெப்பம் அல்லது குளிர்ச்சிக்கு உரியது.
மனிதர்களின் துவக்க காலத்தில் வாழ்ந்து பழகுவதற்கு பல்வேறு நெருக்கடிகள் (உணவு, இருப்பிடம், பாதுகாப்பு …….) இருந்தது. அதில் மிக மிக முக்கியமானதும், அவசியமானதுமாக இருந்தது பகல் – இரவு பொழுதில் வாழ்கிற முறையாகும். பகலில் வாழ்வு என்பது கூடுதலான வெப்பத்தில் வாழ்வதும், வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிய முறைகளை அறிவதாகும்.
இரவில் வாழ்வு என்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் சவாலாகவே அமைந்தது.
சந்திர ஒளியில் வாழ்வு:
* உடன் இருக்கும் மனிதர்களை அறிவது
* உடன் இருக்கும் உயிரினங்களை அறிவது
* சுற்றிலும் உள்ள உயிரினங்களை அறிவது
* தம்மை சுற்றிலும் உள்ள சூழ்நிலைகளை அறிவது
* ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல் * இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலையில் பாதுகாப்பான இடம் செல்வது …….
போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு இரவில் வெளிச்சம் தேவையானதாக இருந்தது. இந்நிலையில் தான் இரவில் மனிதர்களுக்கு சந்திரனின் வெளிச்சம் மிக மிக அவசியமானதாக அமைந்தது.
துவக்க கால மனிதர்களுக்கு இரவில் எவ்வாறு வாழ்ந்து பழகுவது என்பதற்கு சந்திர ஒளியே வாழ்வியலுக்கு வழி காட்டும் பாடமாக அமைந்தது. அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து பௌர்ணமி (வளர்பிறை) வரையும்,
பௌர்ணமியில் இருந்து அமாவாசைக்கு முதல் நாள் (தேய்பிறை) வரையுமாக இரவில் ஒளி பிரகாச வாழ்வியல் பாடம் அமைந்தது. இந்நிகழ்வில் ஒரு நாள் மாத்திரமே முழு இரவாக (அமாவாசை தினம்) அமைந்திருக்கும் வகையில் இயற்கை கட்டமைப்பு அமைந்துள்ளது. ஆனால் இந்நிகழ்வில் (இரவில்) முழுமையான ஒளியுடன் வாழ விரும்பிய மனித சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே செயற்கை ஒளி பிரகாசம் உருவானது.
சந்திரனில் வாழ்வு:
மனிதர்களின் துவக்க காலம் கொண்டே சந்திர ஒளியின் பிரகாசமும், குளிர்ச்சியும் மனித கண்களுக்கு ஒளியை, வழியை தந்தது. மனித மனதிற்கு வாழ்வாதார நம்பிக்கையை தந்தது. மனித அறிவின் விசாலத்திற்கு விலாசம் தந்தது. அவ்விலாசமே இயற்கையின் பிரமாண்டத்தோடு மனித அறிவு இணைய காரணமாக அமைந்தது.
இயற்கையோடு இணைந்த மனித அறிவின் பிரமாண்டமான வளர்ச்சியே சந்திரனின் சுழற்சி காலம் அறிந்தது. சந்திரனில் மனிதன் கால் பதித்தது. சந்திரனின் கோள் ஈர்ப்பு விசை அறிந்தது. சந்திர மண்ணை பூமிக்கு கொண்டு வந்தது.
சந்திரனில் சாட்டிலைட் வாயிலாக ஆய்வுகள் மேற்கொள்வது என தொடர்ந்து கொண்டே செல்கிறது. அதோடு மாத்திரம் நில்லாமல் நம் வாயிலாக சந்திரனின் இயற்கை கட்டமைப்பை சீரமைத்து, சந்திரனில் பிரபஞ்ச நுண்ணுயிர்களை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வந்து வாழ வைத்து, சந்திரனின் சுழற்சி இயக்கத்தை உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் சுழல வைத்து, பூமியில் இருந்து நுண்ணுயிர்களையும், தாவரங்களையும், உயிரினங்களையும், மனிதர்களையும் சந்திரனில் வாழ வைக்க கூடிய ஆய்வுகளை அறிவின் இரண்டாம் பாகமாக வெளியிடுவது வரை சந்திரனின் தொடர்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவோம்.
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply