காற்றின் சுழற்சி இயல்

அனைவருக்கும் வணக்கம்,

சுழற்சி இயல்
நாம் வாழும் இந்த பிரபஞ்சமானது ஒரு வட்டத்திற்குள் 5 பொருள்கள் சுழற்சி முறையில், ஈர்ப்பு விசை இயக்க முறையில் ஒவ்வொன்றும் தனித்தும், இணைந்தும் இயங்க வேண்டியிருந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு தான் அமைந்திருக்கிறது. இவ்வைந்து பொருள்களை தான் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கிறோம். பஞ்ச பூதங்கள் என்பது ஆகாயம், காற்று, வெப்பம், நீர், மண் என குறிப்பிடப்படபடுகிறது. இவ்வைந்து 5 வகையான இயக்கங்களை உடையதாகவும், அந்த ஐவகை இயக்கங்களும் அந்த வட்டத்திற்குள் தமக்கென கொடுக்கப்பட்ட வழி முறைகளோடும் – பிற நான்கின் இயக்கங்களோடும் ஒவ்வொன்றும் இணைந்து இயங்க வேண்டியிருக்கிறது. இந்த ஐவகை இயக்கங்களும் ஒரு செயலை மையபடுத்தி இரு பெரும் பிரிவுகளாக பிரிந்து இயங்குகிறது.

1. ஜட – உயிரியல் இயக்கம்.
2. ஜடமற்ற – உயிரியல் இயக்கம் என மேற்கூறிய ஐந்தோடும் இணைந்து இயங்க வேண்டியிருக்கிறது.

காற்றின் சுழற்சி இயல்:
பிரபஞ்ச இயக்க மூலங்களுல் ஒன்றாகவும், பிரபஞ்ச சுழற்சி இயக்கத்திற்கும், ஈர்ப்பு விசை இயக்கத்திற்கும் காரண, காரிய, கருவிகளுல் ஒன்றாகவும் காற்று அமைந்திருக்கிறது. காற்று தாமாகவும், தம்மை சுற்றியுள்ள மிக சிறிய பொருளில் இருந்து, மிக பெரிய பொருள் வரை நகர்த்துவதற்கும் (எப்புறமும்), சுழல்வதற்கும் (எப்புறமும்) உரிய உயரிய பனிகளை செய்கிறது. காற்றின் பனிகளை சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ” ஜடம் இயங்குவதற்கு சுழற்சி இயல் காற்றாகாவும், ஜடமற்றது இயங்குவதற்கு சுவாச இயல் காற்றாகாவும் அமைந்திருக்கிறது.”

பிரபஞ்சம் மிக பெரிய இடைவெளிகளை உள்ளடங்கி இருக்கிறது. அதில் ஆங்காங்கே ‘மண் கட்டமைப்பு (கோள்கள்: கோள்கள், துணை கோள்கள், நட்சத்திரங்கள் என அணைத்தையும் ) கூட்டு’ முயற்சிகளில் (கூட்டு முயற்சி: மண் + காற்று + வெப்பம் + நீர் +ஆகாயம்: இடைவெளி) மண்ணோடு காற்றையும், இடைவெளி அமைப்புகளில் சிலவற்றில் (கோள்கள்) வெப்பத்தை கூடுதலாகவும், சிலவற்றில் (கோள்கள்) நீரை கூடுதலாகவும், சிலவற்றில் (கோள்கள்) வெப்ப காற்றை (வெப்பத்துடன் இணைந்த காற்று) கூடுதலாகவும், சிலவற்றில் நீர் காற்றை (நீருடன் இணைந்த காற்று – குளிர் அல்லது பனி) கூடுதலாகவும் உள்ளடக்கி அமைந்திருக்கிறது.

காற்றின் கடமை:
காற்றின் கடமை மிக முக்கியமான, நுணுக்கமான விசயமாக அமைந்திருக்கிறது.

பிரபஞ்ச உள் கட்டமைப்பு இடைவெளி சுழற்சி இயக்கம்:
பிரபஞ்ச உள் கட்டமைப்பிற்குள் உள்ள இடை வெளி்கள் முழுவதும் காற்று சுழற்சி இயக்கங்களுக்குள் சுழல வேண்டியிருக்கிறது. இந்நிகழ்வானது பிரபஞ்ச உள் கட்டமைப்பிற்குள் உள்ள இடைவெளிகளில் நிகழும் வெப்பம், குளிர், வெளிச்சம், இருள்….. போன்றவைகளின் செயல்களுடன் இணைந்து இயங்கிட உதவுகிறது. அதாவது எப்புறமும் இயங்கும் சுழற்சி இயல் இயக்கத்திற்கும், எப்புறமும் நகரும் நகர்த்துதலுக்கும் உதவுகிறது.

கோள்களின் பாதுகாப்பு வலய வெளி கட்டமைப்பு சுழற்சி இயக்கம்:
பிரபஞ்ச உள் கட்டமைப்பிற்குள் அமைந்திருக்கும் கோள்களின் பாதுகாப்பு வலயத்தின் வெளி கட்டமைப்பு சுழற்சி (தன்னை தானே சுற்றி வருதல், சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்) இயக்கங்களுக்கு உதவுகிறது. அதாவது வெப்பம், நீர் (குளிர்), இடைவெளி என மூன்றோடும் இணைந்து காற்று தமது சுழற்சி இயல் கடமைகளை பாதுகாப்பு வலைய கவசத்துடன் சுழல்கிற கோள்களின் சுழற்சி இயலுக்கு உதவுகிறது.
கோள்கள் மாத்திரம் அல்லாது வின் கற்களின் இயக்கத்திற்கும் காற்றானது வெப்பம், குளிர், இடைவெளிகளோடு இணைந்து இயங்கும் கடமைகளை செய்வதற்கும் உதவுகிறது.

கோள்களின் பாதுகாப்பு வலய உள் கட்டமைப்பு சுழற்சி இயக்கம்:
கோள்களின் மண்ணின் மேற்பரப்பிற்கும் பாதுகாப்பு வலயத்தின் உட்கட்டமைப்பிற்கும் இடையில் உள்ள இடைவெளிகளின் இயக்கத்திற்கும் காற்று பஞ்ச பூத இயக்கங்களின் துணையோடு இணைந்து உதவுகிறது. மேலும் கோள்களின் மண்ணின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் ஜட – உயிரியல் அமைப்பிற்கும், ஜட – ஜடமற்ற உயிரியல் அமைப்பிற்கும், கோள்களின் வெளி – உள் ஈர்ப்பு விசைக்கும் காற்று பஞ்ச பூத இயக்கங்களின் துணையோடு இணைந்து உதவுகிறது.

கோள்களின் உள் கட்டமைப்பு சுழற்சி இயக்கம்:
கோள்களின் உட்கட்டமைப்பில் (மண்ணின் உட்பரப்பில்) அமைந்திருக்கும் ஜட, ஜடமற்ற அமைப்புகளுக்கு காற்று பஞ்ச பூத சக்திகளின் துணையோடு இணைந்து உதவுகிறது.

கோள்களின் உள் – வெளி ஈர்ப்பு விசைக்கு காற்று பஞ்ச பூத சக்திகளின் துணையோடு இணைந்து உதவுகிறது.
கோள்களின் மைய அச்சின் இயக்கத்திற்கும் காற்று பஞ்ச பூத சக்திகளின் துணையோடு இணைந்து உதவுகிறது.

காற்றின் சுழற்சி இயல்

மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of