ஒளி இயல்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒளியே வெளி அறியும் மூலமாகும்.
பிரபஞ்சத்தில் நாம் வாழும் அணைத்து பகுதிகளையும் கோள்கள் என்கிறோம்.

கோள்கள் (நட்சத்திரங்கள் = நட்சத்திரங்கள் + கோள்கள் + துணை கோள்கள்) அணைத்தும் ஒளிதரும் தன்மை உடையது என்பதை அறிய வேண்டும்.

கோள்களின் ஒளிதரும் தன்மையை 3 (மூன்று) வகையாக பிரிக்கலாம்.

 1. அணைத்து நேரங்களிலும் ஒளி தருபவை.
 2. பகல் நேரத்தில் ஒளி தருபவை.
 3. இரவு நேரத்தில் ஒளி தருபவை ஆகும்.
  இவ்வாறு மூன்று வகை நேரங்களில் ஒளி தரும் கோள்களை பார்க்கலாம்.

  1. நட்சத்திரங்கள்: அணைத்து நேரங்களில் (பகல் – இரவு) ஒளி தரும் என்றாலும் நட்சத்திரங்களின் ஒளியை பகலில் காண இயலாது. இரவில் காண இயலும்.
  2. கோள்கள் (சூரியன்): பகலில் ஒளி தரும் தன்மை உடையதாய் அமைந்திருக்கிறது.
  3. துணை கோள்கள்: (சந்திரன்) இரவில் ஒளி தரும் தன்மை உடையதாய் அமைந்திருக்கிறது.

பிரபஞ்சம் முழுவதும் வெளிச்சம் (ஒளி) தருவதாக (கூடுதலாக அல்லது குறைவாக) நட்சத்திரங்கள் அமைந்திருக்கிறது என்பதை அறியவேண்டும்.

பிரபஞ்சத்தின் இயற்கை கட்டமைப்பு மேற்கூறியவாறு இருந்தாலும், பிரபஞ்சத்தில் உள்ள சூரிய குடும்பத்தில் நாம் வாழுகின்ற முறைகளை அறிகிற போது வெளிச்சம் தருவதற்கு சூரியனையும், சந்திரனையும் காண்கிறோம். அதுபோலவே வெளிச்சம் இல்லாதிருப்பதற்கு சூரியன், சந்திரன் வெளிப்படாதிருக்கும் நிலையை அறிகிறோம். அதே சமயம் நட்சத்திரங்களை காணுகின்ற போது நட்சத்திரங்களின் தோற்றங்களை காண இயலுகிறதே தவிர அவற்றினால் வெளிப்படுகிற வெளிச்சத்தை வைத்துக்கொண்டு நமது அன்றாட வாழ்வியலுக்கு பயன்படுத்தி கொள்ள இயலவில்லை. அதாவது சூரியன், சந்திரன் ஒளியை வைத்து பயன்படுத்துவது போல் (நட்சத்திரங்களின் ஒளியை வைத்து) இயலவில்லை என்பதையும் அறிவோம். அதற்கு காரணம் கோள்களின் வாழ்வியல் கட்டமைப்பு முறைகளை சார்ந்து அமைந்திருக்கிறது என்பதை அறியவேண்டும்.

எனவே,
ஒளி என்பது
ஒளி = வெப்பம் + வெளிச்சம் என்று வழங்குவதையே கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் ஒளியின் தன்மை அல்லது ஒளியின் நிகழ்வை பற்றி அறிகிற போது,
“ஒளியின் மிக குறைந்த அளவின் வெளிப்பாடு இருள் எனவும், ஒளியின் கூடுதலான அளவின் வெளிப்பாடு வெளிச்சம்” எனவும் வழங்கப்படுகிறது.

எனவே,
“ஒளி = வெளிச்சம் + வெப்பம் + இருள்” என்பதன் கூட்டு கலவையாகும்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளிலும் வெளிச்சம் ஒரு பகுதியாகவும், இருள் ஒரு பகுதியாகவும் இவை இரண்டிலும் வெப்பம் கலந்திருப்பதை அறிய இயலும்.

நன்றி வணக்கம்,

மேலும் அறிவோம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of