இயற்கை (வாழ்வியல்) சீரமைக்கப்பட்ட நிகழ்வில்

சந்திரன் சுழற்சி இயல் முறை:

இயற்கை கட்டமைப்பை சீரமைத்தலில் வாழ்வாதாரத்தை உருவாக்குதல்.
மிக குறுகிய கால கட்ட அமைப்பில் இப்பாதை நிறைவேறுகிறது.

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் வாழ்வதற்கு பற்பல ஆண்டுகளாக மனிதர்களுக்கு ஆசை இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பூமியை கடந்து வேறு ஒரு கோளில் வாழ வேண்டும் என்று நினைப்பது நமது தேவைகளை பொறுத்து அமைகிறது.

பூமியில் வாழ துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை பார்த்தால் நாம் (மனிதர்களின் துவக்க காலத்தில் இருந்து இன்று வரை …… ) கடந்து வந்த பாதைகள் சுகமானது, கடினமானது, கற்றது, கற்க வேண்டியது என நிறையவே இருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு கற்றலில் ஒன்று தான் பிற கோள்களில் வாழ வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பதாகும்.

பூமியில் வாழ்ந்து பழகி கொண்டிருக்கிற நாம் அறிந்தவற்றை பார்த்தால் சந்திரனில் வாழ்வது எளிமை என்று தோன்றும். எவ்வாரெனில் நாம் கடந்த வந்த வாழ்வியலுக்கு உரிய ஆதார பாதைகள் அவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கே புரியவரும். மலைகள், காடுகள், மேடு, பள்ளங்கள், சமவெளிகள், பாலைவனங்கள், நீர் நிலைகள்……. என மனிதர்களுக்கு, உயிரினங்களுக்கு, தாவரங்களுக்கு என வாழ்வாதார சீரமைப்புகள் என்பது மனிதர்களின் உன்னதமான உழைப்பையும், உயர்வான அறிவையும் சார்ந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

 • மனிதர்கள் உணவு உண்ண கற்று கொண்டதும்
 • மனிதர்கள் நீர் அருந்த கற்று கொண்டதும்
 • மனிதர்கள் உட்கார கற்று கொண்டதும்
 • மனிதர்கள் படுக்க கற்று கொண்டதும்
 • மனிதர்கள் நடக்க கற்று கொண்டதும்
 • மனிதர்கள் ஒட கற்று கொண்டதும்
 • மனிதர்கள் பேச கற்று கொண்டதும்
 • மனிதர்கள் ஆட கற்று கொண்டதும்
 • மனிதர்கள் நீந்த கற்று கொண்டதும்
 • மனிதர்கள் மரம் ஏற கற்று கொண்டதும்
 • மனிதர்கள் மலை ஏற கற்று கொண்டதும்
 • மனிதர்கள் ஒருங்கினைந்து வாழ கற்று கொண்டதும்
 • மனிதர்கள் யுத்தம் செய்ய கற்று கொண்டதும் …..

என இருந்த போது மனிதர்கள் பறக்க கற்று கொள்ள நினைத்ததில் வந்த முயற்சியே பிற கோள்களுக்கு செல்ல வேண்டும் என்ற முயற்சியாக மாறியது. மாறிய முயற்சிகள் சந்திரனுக்கும் செல்ல முடிந்தது. செவ்வாய்க்கும் சேட்டிலைட் மூலம் அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்வது, சூரியனுக்கு சேட்டிலைட் அனுப்பியதில்: தொடர் பயனத்தில் (8 ஆண்டுகள் பயனத்தில் இருக்கும் நிலையில்) இருக்கும் நிலையில் நாம் காணுகிற முன்னேற்றத்தில் இருந்து பார்க்கையில் சந்திரனில் மனிதர்கள் வாழ்வது எளிமை என்றே தோன்றும். எவ்வாரெனில்

 • மனிதர்கள் வாழ மண் வேண்டும்
 • மனிதர்கள் வாழ நீர் வேண்டும்
 • மனிதர்கள் வாழ காற்று வேண்டும்
 • மனிதர்கள் வாழ வெப்பம் வேண்டும்
 • மனிதர்கள் வாழ தாவரங்கள் வேண்டும்
 • மனிதர்கள் வாழ உயிரினங்கள் வேண்டும்
  எனும் அடிப்படை கட்டமைப்புகள் இருந்தால் வாழ இயலும் என்பது நமது கருத்தாகும்.

இவ்வாறு உள்ள அடிப்படை கருத்தில் இருந்தே நாம் பார்ப்போம்.

 • சந்திரனில் மண் இருக்கிறது
 • சந்திரனில் வெப்பம் இருக்கிறது
 • சந்திரனில் காற்றும் ஓரளவு இருக்கிறது.
  மேலும் நாம் வாழ நீர் தேவை தேடிக்கொண்டிருக்கிறோம்.

நீர் கிடைத்து விட்டால் வாழ்வியல் உருவாக்க இயலும் என்று நினைக்கிறோம். இங்கு நாம் ஒன்றை நன்கு கவனிக்க வேண்டும். அதாவது வெப்பம், காற்று, நீர், மண் இருந்தால் போதும் (வாழ்வாதாரம் உருவாக்கிட) நினைக்கும் நமக்கு பூமியில் உள்ளது போல் சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை, வெப்பம், குளிர், பகல், இரவு…. போன்றவை இருக்கிறதா எனும் கேள்வி நமக்கு முன் இருக்கிறதா? என்பதை அறிவோமா?
அறிவோம் வாருங்கள்.

மேலும் அறிவோம் வாருங்கள்….

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of