அறிவு

அனைவருக்கும் வணக்கம்.,

உயிரினங்களின்* வாழ்வியல் என்பது “அறிவு” எனும் மாபெரும் சக்கர சுழற்சியில் இயங்குகிறது.
(* தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்)

அறிவு
அறிதலை அறிவு என்கிறோம்.
அறிவு என்பது ஐம்பலன் தொடர்புகளால் அறிவது, அறிவதை ஆராய்ந்து அறிவது.

அறிவியல்
அறிவு + இயல் = அறிவியல்.
அறிவியலை அறிதல் + இயல் = அறிதல் இயல் என்றும் அழைக்கலாம்.
அறிதல் என்றால் அறிந்து கொள்ளுதல் என்று பொருளாகும்.
இயல் என்றால் முறைகள் என்று பொருளாகும்.
அறிதலுக்கு உரிய முறைகளோடு அறிவதையே அறிவியல் என்கிறோம்.

அகிலம் இயங்கும் முறைகளை அறிவதுவே அறிவு ஆகும்.

அகிலம் இயங்கும் முறைகள் உயிரினங்களோடு (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) இணைந்து இயங்கும் முறைகளாக அமைந்திருக்கிறது.

உயிரினங்களோடு இணைந்து இயங்கும் அகிலம் (கோள்கள், நட்சத்திரங்கள்) இருவகையான இயக்கங்களை இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.

இருவகை
1. உயிரினங்களின் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) “முழு கூட்டமைப்பில்” அதற்கு உரிய இயற்கை கட்டமைப்பில் அமைந்திருப்பது ஆகும்.
2. உயிரினங்களின் கூட்டமைப்பில் “ஒரு வகை உயரினங்களின்” (நுண்ணுயிர்கள்) கூட்டமைப்பும் அதற்கு உரிய இயற்கை கட்டமைப்பில் அமைந்திருப்பது ஆகும். இவ்வாறு இருவகை கட்டமைப்பில் அமைந்திருக்கும் அகிலத்தின் இயக்கங்களை அறிவதும் அவ்வாறு அறிவதில் தமது வாழ்வாதாரத்தை அறிந்து கொள்ளும் அறிதலை “அகில அறிவு, பிரபஞ்ச அறிவு” என்றும் அழைக்கலாம்.

அறிவின் வகை
அறிவு என்பது இரண்டு வகைகளில் இயங்குகிறது.
1. இயல்பு இயல் அறிவு (இயல்பான அறிவு)
2. கலப்பு இயல் அறிவு (கலந்து இயங்கும் அறிவு).

அறிவின் இயக்கம்
அறிவின் இயக்கம் இரண்டு வகைப்படும்.
1. இயங்குதல்
2. இயக்குதல் என்பனவாகும்.

இயங்குதல்:
இயங்குதலில் இயக்குதலின் இயக்கம்

இயக்குதல்:
இயக்குதலில் இயங்குதலின் இயக்கம் என இருவகைகளாக அறிவின் இயக்கம் இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.

அறிவின் இயக்கம் அறிவியலாய் இயங்குவதை – இயக்குவதை அறிவோம் வாருங்கள்.

அறிவின் கட்டமைப்பு
அறிவின் கட்டமைப்பு ஜடமற்ற உயிரினங்களுக்கே பொருந்தும் என்பதை போலவே ஜட உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பதை அறிவோமா.

ஜடமற்றதுவானது தமது இயங்குதல் அல்லது இயக்கதலின் “(தத்தமது செயல் இயல்புகளை பொருத்தவரை) விளைவுகளை வெளிக்கொணர்வது” ஆகும்.

ஜடமானதும் தமது இயங்குதல் அல்லது இயக்கதலின் “(தத்தமது செயல் விளைவுகளை பொருத்தவரை) விளைவுகளை வெளிக்கொணர்வது” ஆகும்.

பகுத்தறிவு
முழு இயல் நிலையை ஆராய்ந்து அறியும் அறிவிற்கு பகுத்தறிவு என்று பெயர். அறிதலில் அறிந்து கொள்ளுதலும், அறிந்து கொண்டதை அனுபவ இயலுக்கு உட்படுத்துதலும், அனுபவ இயலை பகிர்ந்து கொள்ளுதலும், பகிர்ந்து கொண்டதை தொடர் செயல் இயலுக்கு பயன்படுத்தும் முறைகளை பகுத்தறிவு என்கிறோம்.

அறிவின் உயர்நிலை என்றும் அறிவின் முழுமை நிலை என்றும் மனிதர்களுக்கே உரியது என்றும் …… பகுத்தறிவின் சிறப்பை சிறப்பித்து கூறலாம்.

பஞ்ச பூதங்களால் ஆன பிரபஞ்சத்தில், கோள்கள் (கோள்கள், நட்சத்திரங்கள்) வடிவில் சுழன்று இயங்கும் இயக்க முறைகளில் பஞ்ச பூதங்களின் தொடர்பு முறைகளை அறியும் அறிவை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

அறிவின் இரண்டு பருவம்
அறிவின் பருவம் I

பஞ்ச பூதங்களின் சுழற்சி இயக்க முறைகளில் “இயங்குதலில் இயங்குதலும், இயக்குதலுமாக” இயங்குகிற அமைப்பு முறைகளை அறிவது அறிவின் பருவம் I ஆகும்.

அறிவின் பருவம் II
பஞ்ச பூதங்களின சுழற்சி இயக்க முறைகளில் “இயக்குதலில் இயக்குதலும், இயங்குதலுமாக” இயங்குகிற அமைப்பு முறைகளை அறிவது அறிவின் பருவம் II ஆகும்.

அறிவின் முதல் பருவம் பூமியிலும், அறிவின் இரண்டாம் பருவம் பிற கோள்களை அறியும் முறைகளிலும் அறிய வேண்டி இருப்பதை அறிவோம்.

அறிவை மேலும் அறிய வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of