அனைவருக்கும் வணக்கம்,
சந்திரனில் நாம் வாழ்வதற்கு விரும்புகிறோம். அதற்குரிய முயற்சிகளை ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானிகளும் தங்களால் இயன்ற அணைத்து முயறசிகளையும் செய்கின்றனர் என்பதை அறிவோம். அதே சமயத்தில் சந்திரனைப்பற்றி நாம் அறிய வேண்டிய விசயங்கள் இருக்கிறது என்பதை அவசியம் அறிய வேண்டும்
அறிந்தவை :
நாம் இதுவரை அறிந்தவை அணைத்தும் பூமியில் இருந்து அறிந்தது என்பதை நினைவு கூர்ந்து கவனித்தல் வேண்டும். அதாவது உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை அறிவை பெற்றதும் பூமியில் இருந்து தான் என்பதை அவசியம் அறியவேண்டும். அதுபோலவே செயற்கை இயலுக்கு ஏற்புடைய அறிவை பெற்றதும் பூமியில் இருந்து தான் என்பதை அவசியம் அறியவேண்டும்.
அதாவது,
மனித வாழ்வியலுக்கு தேவையான ஒவ்வொரு விசயங்களையும் துவக்க காலத்தில் இருந்தே தொடர்சியாக தொடர்வதற்கு நமது அனுபவ மற்றும் விஞ்ஞான அறிவே மூலமாக அமைந்து கொண்டிருக்கிறது.
அதில்,
- தாவரங்களை பற்றியும்,
- உயிரினங்களை பற்றியும்,
- மண் அமைப்புகளை பற்றியும்,
- நீர் ஆதாரங்களை பற்றியும்,
- வெப்பத்தின் தன்மைகளை பற்றியும்,
- காற்றின் இயக்கங்களை பற்றியும்,
- ஆகாய இடைவெளிகளையும்
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயக்கங்களையும், ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் இயக்கங்களையும், செயற்கை இயல் பற்றியும் இவற்றால் மனித சமுதாய வளர்ச்சி இயலுக்கு தேவையான இயற்கை – செயற்கை கட்டமைப்புகளை அறிந்து கொள்ள உதவும் அறிவை பெற்றது என அணைத்தும் பூமியில் இருந்து அறிந்தது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் கவனித்தால் சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்க பயன்படும் அறிவும் பூமியில் இருந்து பெற்ற அறிவுத்திறனை தான் பயன்படுத்துகிறோம் என்பதை அறிய வேண்டும்.
பூமியில் இருந்து கற்று அறிந்த அறிவை சந்திரனில் பயன்படுத்துவது என்பது சரியான அனுகுமுறை தான் என்றால் மேலும் அறிய வேண்டியதன் அவசியம் தான் என்ன? ஆம், மேலும் அறிய வேண்டியிருக்கிறது.
அறியவேண்டியவை :
* பூமியில் தாவரங்கள் இருக்கிறது, சந்திரனில் இல்லை.
பூமியில் உயிரினங்கள் இருக்கிறது, சந்திரனில் இல்லை.
* பூமியில் நீர் மண்ணிற்கு அடியிலும், மண்ணிற்கு மேல் கடலாகவும் இருக்கிறது.
சந்திரனில் மண்ணிற்கு அடியில் இருக்கிறது, மண்ணிற்கு மேல் கடலாக இல்லை.
* பூமியில் பகல் – இரவு 24 மனி நேரமாக ஒரு நாள் இருக்கிறது.
சந்திரனில் 28 நாட்கள் சேர்ந்து பகல் – இரவாக ஒரு நாள் இருக்கிறது.
* பூமியின் சுழற்சி காலம் 24 மணி நேரம் & 365 நாட்கள் (தன்னை தானே சுற்றி வருதலும், சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்) எனவாகவும்,
சந்திரனின் சுழற்சி காலம் 28 நாட்கள் & 28 நாட்கள் (தன்னை தானே சுற்றி வருதலும், சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்) எனவாகவும் அமைந்திருக்கிறது.
* பூமியில் வளர்பிறை – தேய்பிறை இல்லை,
சந்திரனில் வளர்பிறை – தேய்பிறை இருக்கிறது.
* பூமியில் ஈர்ப்பு விசை (கோள் ஈர்ப்பு விசை) உயிரியல் வாழ்வியலுக்கு ஏற்புடையதாக (இயல்பு நிலையில்) அமைந்திருக்கிறது.
சந்திரனில் ஈர்ப்பு விசை (கோள் ஈர்ப்பு விசை) மாறுபடுகிறது.
இதுபோல் நாம் அறிய வேண்டியவை இன்னும் இருக்கிறது என்பதை அறிவோமா?
பூமியின் இயக்க அமைப்புகளுக்கும், சந்திரனின் இயக்க அமைப்புகளுக்கும் சில மாற்றங்களை இருப்பதை அறிகிறோம். பூமியின் இயக்க அமைப்புகளை அறிந்து (அறிவியல் பூர்வமாக) வாழ கற்று அறிந்து இருக்கும் நாம், சந்திரனின் இயக்க அமைப்புகளில் (பூமியின் இயக்கங்களில் இருந்து சந்திரனின் இயக்க மாறுபாடுகள்) உள்ள மாறுபாடுகளில் வாழ பூமியில் கற்று அறிந்த அறிவின் சாரம்சம் என்ன என்பதை அறிவோமா? இதற்கு பதில் என்ன என்பது நமக்கு நன்கு தெரியுமா?
சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம் வாருங்கள். சிந்தித்து செயல்படுவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply