அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களோடு இணைந்து எண்ணிலடங்கா தாவரங்களும், உயிரினங்களும் இணைந்து வாழும் விதமாக இயற்கை கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இயற்கையில் வாழும் தாவரங்களும் – உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழும் முறைகளுக்கு பஞ்ச பூதங்களின் இயக்க அமைப்புகளும் இயற்கையோடு இணைந்து இயங்கும் விதமாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. இதில் மனித வாழ்வியல் இயல்பாக, முறையாக, வாழ்ந்திட – நல்லது, கெட்டது, சுதந்திரமாக இருப்பது, கட்டுபடுத்தபட்டிருப்பது ….. போன்ற நிகழ்வுகளை அறிவதும், அதற்கு உரிய தீர்வுகளை நாம் அறிவதும், அறிந்த தீர்வுகளை வாழ்வியலுக்கு ஏற்புடையதாக அமைத்து கொள்வதும் உண்ணதமான வாழ்வியல் முறைகளுக்கு வழிகாட்டுகிறது.
மனிதனது வாழ்வு அகம் – புறம் என இரு வகை மாபெரும் வாழ்வியலாக சூட்சும முறையில் ஒன்றுபட்டு அமைந்திருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதனது உயிருடல் இயக்க அமைப்பில் தான் வாழ்வியல் முறைகள் நிகழ்கிறது. உயிருடல் இயக்க வாழ்வில் தான் உலக வாழ்வியல் முறைகள் நிகழ்கிறது. இவ்வாழ்வியல் முறைகளை அக வாழ்வு – புற வாழ்வு என இரு வகை முறைகள் இருப்பதை அறியலாம். இவ்வாழ்வு முறைகளை அக உலக வாழ்வு என்றும், புற உலக வாழ்வு என்றும் அழைக்கலாம்.
நமது வாழ்வு முறைகளின் பயன்களை இரு வகைகளாக கூறுவது உண்டு.
1. நல்லது
2. கெட்டது என இரு நிலைகளில் கூறப்படுகிறது. இவ்விரு நிகழ்வுகளுக்கு உரிய வாழ்வியல் முறைகளை இருவிதமான சூழ்நிலைகளில் அமைந்திருப்பதை அவசியம் அறிய வேண்டும்.
1. சுதந்திரமாக இருப்பது
2. கட்டுபடுத்தபட்டிருப்பது ஆகும்.
மேற்கூறிய இருவகை பயனியல் வாழ்வு முறைகளையும், இருவகை சூழ்நிலைகளில் அமைந்திருக்கும் வாழ்வியல் முறைகளையும் மிகத்தெளிவாக அறிந்து வாழ்கிற போது தான் படைப்பியல் அடிப்படையில் வாழ்கிறோம் அல்லது மனிதனின் சிறப்பு அம்சமாக விளங்கும் பகுத்தறிவு அடிப்படையில் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள இயலும்.
நல்லது:
நல்லது எது என்பதை நாம் முழுமையாக, தெளிவாக அறிவோம் என்றால்,
* நமது அறிவின் தொடர்பு
* நமது அன்பின் தொடர்பு
* நமது ஞானத்தின் தொடர்பு ஆகிய மூன்று நிகழ்வுகளின் தொடர்புகள் நமது உயிரை தொடர்பு கொள்ளும் பாதையில் இயல்பாக இருக்கும் நிலை இருந்தால் அது சிறப்பான நிலையாகும். அதாவது நல்லது எனும் நிலையை அறியலாம்.
நலம் தரும் நல்லது:
நல்லது எது என்பதை அறிந்து வாழ்கிற போது நமது வாழ்வியலும், நமக்கு பின் வருவோரின் வாழ்வியலும் மிக உயர்ந்த வாழ்வியலை தரும். மேலும் நமது வாழ்வியலை நிறைவுடன் வாழ இயலும். நமது இலட்சியம் எது என்பதை அறிந்து வாழ இயலும்.
“நல்லது நலம் தரும்”.
கெட்டது:
கெட்டது எது என்பதை நாம் முழுமையாக, தெளிவாக அறிவோம் என்றால்,
* நமது அறிவின் தொடர்பு
* நமது அன்பின் தொடர்பு
* நமது ஞானத்தின் தொடர்பு ஆகிய மூன்று நிகழ்வுகளின் தொடர்புகள் நமது உயிரை தொடர்பு கொள்ளும் பாதையில் இயல்பாக இல்லாமல் தொடர்பு பகுதியில் வீக்கம் அல்லது வலி போன்ற நிலை இருந்தால் அது சிக்கலான பாதிப்புகளை கொண்டிருக்கும். அதாவது இந்நிலையானது கெட்டது எனும் நிலையாகும் என்பதை அறியலாம்.
தீயது தரும் கெட்டது:
நமது உயிருடல் (புற தொடர்பு, அக தொடர்பு, அக – புற படைப்பியல் தொடர்பு) இயக்க அமைப்பில் கெட்டது என்பது நமக்குள் (உடல் – மனம் – உயிர்) தீய விளைவுகளை தரும். அதாவது நமது வாழ்வியலையும், நமக்கு பின் வருவோரின் வாழ்வியலையும் பலவீனம் அடையச்செய்யும். பாதிப்பு அடையச்செய்யும்.
” கெட்டது தீமையை தரும்”
கட்டுபடுத்தபட்டிருத்தல்:
பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள்:
* பேராசையில் ஏற்படும் சிக்கல்
* பொறாமை கொள்ளுதலில் சிக்கல்
* அச்சமடைதலில் குழப்பம்
* அச்சு மூட்டுதலில் தொடர்ந்து அச்சமடைதல்
* தேவையானது இருந்தும் தேவையான சூழலில் பயன்படுத்தாதிருக்கும் தொடர் நிகழ்வுகள்
பாதிப்புகளை அறியும் முறை:
நம்மை நாம் கூர்ந்து கவனிக்கிற போது நமது உடலில் (கழுத்திற்கு கீழ் – இடுப்பிற்கு மேல்) இருக்கமான நிலை உருவாகும். அதேசமயம் மூச்சு காற்று மாத்திரம் வேகமாக இயங்கும் விதமாக அமைந்திருக்கும். அதாவது மூச்சு காற்று சீராக இயங்காமல் மாறுபட்ட நிலையில் இயங்குதல். உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை அறிய இயலாத நிலையில் இருப்பது ஆகும்.
பாதிப்புகள்:
1. சுவாச ஜீரண தேக்கம் (நுரையீரல் – இதயம் பலவீனம் அடைதல்)
2. உணவு ஜீரண தேக்கம் (வயிற்றில் உள் உறுப்புகள் பாதிப்படைதல்)
3. சிறுநீர் சிக்கல்
4. மல சிக்கல்
5. இரத்த அபிவிருத்தி குறைவு
6. புலன்களின் இயக்கங்கள் பலவீனமடைதல்
7. தூக்கம் நிறைவு பெறாதிருத்தல்
8. மன சோர்வு
9. சுய சிந்தனை வெளிப்படாதிருத்தல் …… . இந்நிகழ்வை சுருக்கமாக கூறினால் மூச்சு விடுகிறோம் என்பதை தவிர வேறு எதுவும் சுய சிந்தனையில் இல்லாமல் பழக்கத்தில் உள்ள செயல்களை மாத்திரமே செய்யும் நிலையாகும். நமது உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அறிய உதவும் கல்வியல் தகுதிகள்:
நமது உயிருடல் இயக்க அமைப்பில் புற உடல் தொடர்பு அமைப்புகள், அக உடல் தொடர்பு அமைப்புகள், இவ்விரண்டும் படைப்பியல் தொடர்பு கொள்ளும் முறைகள் என மூவ்வகை தொடர்புகளை அறிந்து இருக்க வேண்டும்.
அறிய உதவும் வாழ்வியல் தீர்வுகள்:
நமது பகுத்தறிவில் மிக சரியான தெளிவு ஏற்பட்டிருக்கும் இயல்பான நிலையில் இருப்பது ஒரு முறையாகும்.
இயற்கை படைப்பியல் இரகசிய முறைகளை தெளிவாக அறிந்திருக்கும் நிலையில் இருப்பது ஒரு முறையாகும்.
மேற்கூறிய இரு நிகழ்வுகளை அறிந்து வாழ்பவரின் துணையோடு தான் இந்நிகழ்வுகளை ஒருவர் தன் நிலையில் அறிய இயலும். அதாவது தனக்குள் நல்லது, கெட்டது, சுதந்திரமாக இருப்பது, கட்டுபடுத்தப்பட்டிருப்பது என்பதெல்லாம் அறிய இயலும்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply