சூரியன்

சூரியன்:
மனித உயிருடல் அமைப்பிற்கு தலை (ஐம்புலன்கள்) எந்த அளவிற்க்கு முக்கியமோ அதுபோலவே சூரிய குடும்பத்திற்கு சூரியன் கோள் முக்கியமானது என்பதை அறிய வேண்டும்.

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் மிக பெரிய அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், கோள்களும் உள்ளடங்கி இருக்கிறது. மேலும் ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண் எனும் ஐவகை பிரமாண்டமான அமைப்பில் அமைந்திருக்கிறது. வெளிச்சமும் – இருளும் நிறைந்த பிரபஞ்ச அமைப்பின் வடிவத்தை காண கண்கள் கோடி போதாது – போதாது எனும் நிலையில் அமைந்திருக்கிறது.

மனித உலகின் துவக்க காலம் முதல் உயிரியல் வாழ்வாதாரத்தின் அடித்தளமாக அமைந்திருப்பது சூரியன் ஆகும். ஏனென்றால் சூரியன் இந்த பிரபஞ்சத்தில் தனி ஒரு கோளாக அமையாமல் மனித மற்றும் உயிரியல் வாழ்வாதார அமைப்பிற்கு ஒரு குடும்பமாக அமைந்திருக்கிறது.

சூரியன் தன்னை சுற்றி தொடர்பு கொள்ளும் கோள்கள் அணைத்திற்கும் வெப்பத்தையும் – வெளிச்சத்தையும் தரக்கூடிய அமைப்பாக அமைந்திருக்கிறது. மேலும் கோள்களில் (உள்ளும் – புறமும், மேலும் – கீழும், சுற்றுப்புறம்) அணைத்து பகுதியிலும் வெப்ப சீரமைப்பை ஒழுங்கு படுத்தும் கடமையை மேற்கொள்கிறது. அதாவது வெப்ப சீரமைப்பை மேற்கொள்ள நீரை ஆவியாக்கி காற்றின் துணை கொண்டு கோள்களின் எல்லா புறத்திற்கும் கொண்டு செல்கிறது.

கோள்கள் அனைத்தும் வெளிச்சத்தை ஒளிரும் தன்மை உடையதாக இருந்தாலும் சூரிய ஒளியின் தன்மை கொண்டே பகல்
பொழுது அமைகிறது.

ஒளியின் தன்மை
கோள்கள் அனைத்தும் ஒளிரும் தன்மை உடையது.

சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்கள் தனிச்சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனை மையப்படுத்தி சுழன்று வருகிறது. அவ்வாறு கோள்கள் ஒவ்வொன்றும் சூரியனை மையப்படுத்தி சுழன்று வருவதால் தான் கோள்களில் பகல் – இரவு சுழற்சி நிகழ்கிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பல்வேறு இயற்கை கட்டமைப்புகளை உள்ளடக்கியது. அதில் மிக முக்கியமானது பாதுகாப்பு வலயமாகும்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் ஆனாலும் சரி, கோள் குடும்பம் ஆனாலும் சரி, கோள் ஆனாலும் சரி, துணை கோள் ஆனாலும் சரி அனைத்திற்கும் பாதுகாப்பு வலயம் என்பது மிக மிக முக்கியமானது ஆகும்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் ஒன்றே மிக நீண்ட காலமாக வாழ்வியலில் தெரிந்த விஷயமாக இருக்கிறது.

சூரிய குடும்பத்திற்கு சூரியனே மைய அச்சாணியாக அமைந்திருக்கிறது. பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையோடு சூரிய குடும்பத்தின் பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை இணைந்திருக்கிறது. சூரியனின் பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையானது சூரிய குடும்ப பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையோடு இணைந்திருக்கிறது. எனவே சூரியன் தனித்த ஒரு நிலையில் தேய்ந்து போக இயலாது.

சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள சூரியனின் ஆயுள் காலம் பிரபஞ்சத்தின் இறுதி ஆயுள் காலத்தோடு இணைந்திருக்கிறது. அவ்வாறு இல்லாமல் சூரியன் மிக சீக்கிரம் தேய்ந்து அழிந்து போகும் என்றால் அதன் நிகழ்வு தான் என்ன என்பதை அறிவோமா! வாருங்கள்.

சூரியனின் ஆயுள் காலம் சூரிய குடும்பம் உள்ள வரை இருக்கும் என்பதை அறிய வேண்டும்.
சூரியன் இருப்பதால் தான் பூமியில் பகல் எனும் நிகழ்வு நடக்கிறது. சூரிய குடும்பத்தில் சூரியன் இல்லாது போனால் பூமி இருள் மயமாகி விடும். வெளிச்சமும் (ஒளி), வெப்பமும் இருக்காது. பூமி இருள் மயமானால், வெப்பமும் – வெளிச்சமும் இல்லாது போனால் பூமியில் தாவரங்கள் முளைக்காது. பூமியில் தாவரங்கள் முளைக்காது போனால் உயிரினங்கள் வாழ இயலாது. உயிரினங்கள் வாழ இயலாது போனால் மனித இனமும் வாழ இயலாமல் போய்விடும்.

சூரிய குடும்பத்தில் சூரியன் இல்லாது போனால் பூமி மாத்திரம் அல்ல சூரிய குடும்பத்தில் உள்ள எந்த ஒரு கோளிலும் பகல் இருக்காது. அதாவது வெளிச்சம் இருக்காது.
சூரிய குடும்பத்தில் சூரியன் இல்லாது போனால் சூரிய குடும்பத்தின் ஈர்ப்பு விசை துண்டிக்கப்படும். சூரிய குடும்பத்தின் ஈர்ப்பு விசை துண்டிக்கப்பட்டால் சூரிய குடும்பத்தில் உள்ள அத்துனை கோள்களும் நிலை தடுமாறி விடும். அவ்வாறு நிகழ்ந்தால் சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி பிரபஞ்சத்தில் மிகப்பெரிய பேரழிவு நிகழும் என்பதை அறிவோமா?!.
அவ்வாறு எல்லாம் சூரியன் தேய்ந்து விடும். கரைந்து விடும். அழிந்து விடும் என்பதெல்லாம் நிகழாது. அவ்வாறு நிகழ வேண்டும் என்றால் பிரபஞ்சமே அழிய நேர்ந்தால் மாத்திரமே இது சாத்தியம் ஆகும் என்பதை அறியலாம்.

பிரபஞ்சத்தின் அழிவு இல்லாமல் எந்த ஒரு கோளும் அழிந்து விட இயலாது என்பதை அறிய வேண்டும். இவ்வாறு நாம் குறிப்பிடுவதற்கு காரணம்:
* கோள் பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையானது கோள் குடும்ப பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையுடன் இணைந்திருக்கிறது.
* கோள் குடும்ப பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையானது பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையுடன் இணைந்திருக்கிறது.
இவ்வாறு ஈர்ப்பு விசையானது ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால் நிகழ்வுகள் என்பது இயற்கை கட்டமைப்பின் கூட்டமைப்பில் இணைந்திருக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of