அனைவருக்கும் வணக்கம்,
கற்றல் என்பது இல்லையேல் உயிரியல் வாழ்வில் எவ்வகையான முன்னேற்றமும் இல்லை என்பதை அறிய வேண்டும்.
கற்றலில் சேவை:
கற்றலில் சேவை என்பது இயல்பறிவை மனித நேயத்தோடு கற்றறிந்து, அனுபவ வாழ்வியலில் வாழ்பவர்கே இயலும் என்பதை அறிய வேண்டும்.
இயல்பறிவு:
கற்றலை பொருத்தவரை தாவரங்கள், உயிரினங்கள் என்பவற்றிற்கு இயல்பறிவு இருப்பதை அறியலாம். ஆனால் மனிதர்களுக்கு மாத்திரம் இயல்பறிவு என்பது வாழ்வாதார தொடர்புகளை புரிந்து கொண்டு வாழ முற்படுகிற பொழுது தான் வெளிப்படுகிறது என்பதை அவசியம் அறிய வேண்டும்.
கற்றலில் இயல்பறிவை பெற்றவரையே ‘பகுத்தறிவின் அடிப்படையில்’ வாழ்ந்து வருகிறார் என்று கூற இயலும்.
பகுத்தறிவின் அடிப்படையில் வாழ்ந்து வருகிறவரையே மனித வாழ்வில் தேவையான அளவு நிறைவுடன் வாழ்கிறார் என்பதை அறிய இயலும்.
கற்றலில் தெளிவு, புரிதல், பகிர்தல், நிறைவு ஏற்படுகிற போது தான் இயல்பறிவை பெற இயலும்.
கற்றல் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவானது, தேவையானது, அவசியமானதாக அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
கற்றலில் சேவை கற்றுக்கொள்ளும் முறைகளையும் கற்றலில் உருவாகும் விளைவுகளையும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய வாழ்வியல் சாராம்சங்களையும் அறிவதும், அறிவதை தொடர்வதும் அதோடு மாத்திரமல்லாது மேலும் கற்றலுக்குரிய விஷயங்களை பின்தொடர்பவர்களுக்கு கொண்டு சேர்ப்பதும் இதனால் மனித சமுதாயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைவதற்கும், விரிவான விசாலம் அடைவதற்கும் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதை முழுமையாக தெரியப்படுத்துவது ஆகும்.
சேவை பயன்பாடு:
கற்றலில் சேவையை பயன்படுத்துகிற நிகழ்வுகள் மனித வாழ்வியலுக்கு முழுவதும் முழுமையாக பயன்படுகிறது. மனித வாழ்வியலோடு அல்லாது மனித வாழ்வியலுக்கு உறுதுணையாக அமைந்திருக்கும் தாவரங்களுக்கும், உயிரினங்களுக்கும் பயன்படுகிறது.
சேவையில் பண்பாடு:
கற்றலில் சேவை பயன்பாடு என்பது மனித நேயத்தையும், உயிரியல் நேயத்தையும், தாவரங்களின் நேயத்தையும் மையப்படுத்தி அமைந்திருக்கிறது. அதேசமயம் இயற்கை கட்டமைப்பை இயல்பாக புரிந்துகொள்ள உதவியாக அமையும் என்பதை அறியலாம். ஆகவே மனித நேயத்தையும், உயிரியல் நேயத்தையும், தாவரங்களின் நேயத்தையும், இயற்கை கட்டமைப்பை அறிய அணைத்து வகையிலும் ‘கற்றலில் சேவையின் பயன்பாட்டை சேவையில் பண்பாடாக’ மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த உலக பண்பாடாக கருதலாம்.
உயிரியல் சேவையில் உலக பண்பாடாக விளங்கும் கற்றலில் சேவை பயன்பாடக, பண்பாடாக விளங்குவதை உலக மக்கள் அனைவரும் கற்றலின் அடிப்படையாக, வாழ்வாதார தியாகமாக, வாழ்வாதார சேவையாக, உயிரியல் நேயமாக, கற்றலில் மூலமாக பயன்படுத்தி அனைத்து உலக மக்களும் மேன்மையான வாழ்வியலில் வாழ்ந்து பழகுவோம். வருங்கால வாழ்வியலை வாழ்வாதார சிறப்போடு வாழ்ந்து வருவோம்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply