ஆய்வியல் சுதந்திரம்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பல்வேறு இயற்கை கட்டமைப்புகளை உடையது.
பிரபஞ்சம் அதில்,
பஞ்ச பூதங்கள்
வெப்பம் – குளிர்
ஒளி – இருள்
கோள்கள் – துணை கோள்கள்
நட்சத்திரங்கள் என்பனவும்,
அதில்,
மழை – பனி
மலைகள்
தாவரங்கள்
உயிரினங்கள்
மனிதர்கள் என்பனவும் என பல்வேறு கட்டமைப்புகள் இயல்பாக அமைந்திருக்கிறது.

நாம் வாழும் பூமியில் மாத்திரமே இயற்கை கட்டமைப்புகளும், உயிரியல் கட்டமைப்புகளும் அமைந்திருப்பதை அறிவோம். மனிதர்கள் தங்களது வாழ்வியல் கற்றல் முறைகளையும் இங்கேயே (பூமி) அறிந்தனர். மனித வாழ்வியலின் தேவைகள் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள நமக்குள் உருவான முறையே அறிவாகும்.

அறிவு என்பது அறிந்து அறிந்து கொள்ளுதலின் தொகுப்பு ஆகும். அவ்வறிவானது இரு வகைப்படும்.
1. தெரிந்து கொண்டது.
2. தெரிந்து கொண்டதில் தெளிவு பெற்றது.

தெரிந்து கொண்டது நடைமுறை அனுபவம்

தெரிந்து கொண்டதில் தெளிவு பெற்றது கல்வி

வாழ்வாதாரத்தின் மிக விசாலமான தேவைக்கு உருவானதே ஆய்வியல் முறையாகும்.

தெரிந்து கொண்டது நடைமுறை அனுபவமும், தெரிந்து கொண்டதில் தெளிவு பெற்ற கல்வியுமே ஆய்வியல் முறையாகும்.

ஆய்வியல்
அனுபவம் + கல்வி = ஆய்வியல்

ஆய்வியல் முறையை:
* கல்வி இயல்
* அனுபவ இயல்
* அறிவு இயல் (அறிவியல்)
* ஆராய்ச்சி இயல்

சுதந்திரமாக அறிய ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

ஆய்வுகளில் சுதந்திரம்:
மனித நேயத்தை மையப்படுத்தியே ஆய்வுகள் உருவாக்கப்பட வேண்டும்.

மனித வாழ்வாதாரத்தை மையப்படுத்தி நடத்துகிற ஆய்வுகள் எதுவும் தெளிவாகாவும், சுதந்திரமாகவும், உலக நன்மையை ஆதார மையமாகவும் வைத்து உருவாக்குதலை சட்டமாக்க வேண்டும். இதை ஒவ்வொரு ஆய்வாளரும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of