வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்பவர்க்கு வழிகாட்டுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும்.
விஞ்ஞான அறிவு என்பது மனிதனின் மாண்புமிகு மகத்துவத்தை வெளிபடுத்துவதும், மனித குலத்திற்கு அர்ப்பணிப்பதும் ஆகும்.
விஞ்ஞான கண்டுபிடிக்கப்புகள் என்பது
- மனிதர்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்,
- பாதுகாப்பு சிறப்பு அம்சங்களை உருவாக்குதற்கும்,
- விஞ்ஞான அறிவாற்றலை மனித குலம் மேன்மையான முறையில் பயன்படுத்தி கொள்வதற்கும் உதவுகிறது.
விஞ்ஞான அறிவாற்றல் வாயிலாக உருவாக்கப்படும் எந்த ஒரு உயர்ந்த கண்டுபிடிப்புகளும் அவரது காலத்திலேயே அரங்கேற்றம் செய்யப்படுமானால், மனித குல தேவைக்கு பயன்படுத்தபடுமானால் அவரது விஞ்ஞான அறிவு நிறைவு பெற்றதாகிவிடுகிறது.
அது மட்டுமல்லாது அவரது வாழ்வியல் அமைப்பை அவரது இறுதி காலம் வரை மட்டுமல்லாது, வாழ்வாங்கு வாழ, மிக உயர்ந்த நிலையில் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியதாய் உயர்த்தப்படுகிறது.
தேசத்திற்காக தமது மிக உயர்ந்த அறிவை, மிக உயர்ந்த நிலையில் அர்பனிக்கப்படுகிற போது அவர் தமது தேசத்தின் தலைமகன் (முதல் குடிமகன்) ஆகிவிடுகிறார்.
மிகவும் நல்ல விளக்கம்