அனைவருக்கும் வணக்கம்,
பிரபஞ்சம்: உயிரியல் கோளம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கலவை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. அதோடு உயிரியல் கட்டமைப்பிலும் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் முழுவதும் உயிரியல் கட்டமைப்பு உள்ளது. ஆகவே இந்த பிரபஞ்சத்தை இரண்டு வகையான கட்டமைப்புகளாக பிரிக்கலாம்.
1. பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பு
2. பிரபஞ்ச உயிரியல் கட்டமைப்பு எனலாம்.
1. பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பு:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இயற்கை கட்டமைப்பு என்பது பஞ்ச பூதங்களினால் ஆனது. பஞ்ச பூதங்களின் (ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண்) இயக்கம் தனித்தும், இணைந்தும் இயங்கும் இயக்கமாக அமைந்திருக்கும் நிகழ்வை பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பு என குறிப்பிடுகிறோம்.
2. பிரபஞ்ச உயிரியல் கட்டமைப்பு:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் கட்டமைப்பு என்பது இரு பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கிறது.
1. பிரபஞ்சம் முழுவதும் வாழும் நுண்ணுயிர்கள் (பிரபஞ்ச நுண்ணுயிர்கள்) அமைப்பையும்,
2. பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் இயற்கை கட்டமைப்பில் தாவரங்கள், உயிரினங்கள் வாழ்வாதார அமைப்பாக வாழ்ந்து கொண்டிருப்பதை குறிப்பிடுகிறோம்.
உயிரியல் கட்டமைப்பு:
பிரபஞ்சம் முழுவதும் உள்ள உயிரியல் அமைப்பிற்கு நுண்ணுயிர்கள் என்று பெயர். அதாவது இந்த நுண்ணுயிர்களை பிரபஞ்ச நுண்ணுயிர்கள் என்று அழைக்கலாம்.
எந்த ஒரு கோளில் மண்ணின் மேற்பரப்பில் ஈரப்பதமும், நுண்ணுயிர்களும் அமைந்திருக்கிறதோ அந்த கோளில் உயிரியல் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும் என்பதை நாம் அறியலாம். இந்நிகழ்வு நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளில் அமைந்திருந்தாலும் சாத்தியம் என்பதை அறியலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களின் வாழ்வாதார இருப்பிடமாக அமைந்திருக்கும் (பூமி) என்பது ஒரு புள்ளி அளவு எனலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பல்வேறு குடும்ப (கூட்டமைப்புகள்) அமைப்புகளாக அமைந்திருக்கிறது. அதாவது இயற்கை கட்டமைப்பில் அவ்வாறு அமைந்திருக்கிறது. பல்வேறு குடும்ப அமைப்புகளில் நாம் வாழ்வது சூரிய குடும்ப அமைப்பாகும்.
பூமி: உயிரியல் கோளம்
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் சூரிய குடும்ப அமைப்பில் தான் மனிதர்களின் வாழ்வாதார அமைப்பு அமைந்திருக்கிறது. அதுவும் சூரிய குடும்பத்தில் பூமி எனும் கோள் அமைப்பில் தான் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்களோடு இணைந்து தாவரங்கள், உயிரினங்கள் பூமியில் வாழ்ந்து வருகிறது.
பிரபஞ்சம் முழுவதும் உயிரியல் (பிரபஞ்ச நுண்ணுயிர்கள்) வாழ்ந்து வருகிறது என்று நாம் குறிப்பிட்டாலும் பூமி எனும் கோள் அமைப்பில் தான் உயிரியல் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது என்று அறிவோம்.
கோள் எதுவாக இருந்தாலும், அக்கோளில் மனிதர்களின் வாழ்வாதாரம் உருவாக வேண்டும் என்றால் உயிரினங்கள், தாவரங்கள் போன்றவை நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். உயிரினங்களும், தாவரங்களும் வாழ வேண்டும் என்றால் பஞ்ச பூதங்களின் இயக்கங்கள் இணைந்து இயங்கும் விதமாக அமைந்திருக்க வேண்டும். அதாவது பஞ்ச பூதங்களின் தொடர்பு இயக்கங்கள் இணைந்து இயங்கும் தொடர்புகளை அறிவோம்.
நீர்:
நீர் மண்ணோடும், நீர் வெப்பத்தோடும், நீர் காற்றோடும், நீர் ஆகாயத்தோடும், நீர் நீரோடும் இணைந்து இயங்கும் தன்மையில் அமைந்திருக்க வேண்டும்.
மண்:
மண் நீரோடும், மண் வெப்பத்தோடும், மண் காற்றோடும், மண் ஆகாயத்தோடும், மண் மண்ணோடும் இணைந்து இயங்கும் தன்மையில் அமைந்திருக்க வேண்டும்.
வெப்பம்:
வெப்பம் நீரோடும், வெப்பம் மண்ணோடும், வெப்பம் காற்றோடும், வெப்பம் ஆகாயத்தோடும், வெப்பம் வெப்பத்தோடும் இணைந்து இயங்கும் தன்மையில் அமைந்திருக்க வேண்டும்.
காற்று:
காற்று நீரோடும், காற்று மண்ணோடும், காற்று வெப்பத்தோடும், காற்று ஆகாயத்தோடும், காற்று காற்றோடும் இணைந்து இயங்கும் தன்மையில் அமைந்திருக்க வேண்டும்.
ஆகாயம்:
ஆகாயம் நீரோடும், ஆகாயம் மண்ணோடும், ஆகாயம் வெப்பத்தோடும், ஆகாயம் காற்றோடும், ஆகாயம் பிர நான்கு கட்டமைப்புகளோடும் ஒன்றிற்குள் ஒன்றாக இணைந்து இயங்கும் தன்மையில் அமைந்திருக்க வேண்டும்.
இங்கு நாம் குறிப்பிடும் பஞ்ச பூதங்கள் ஐந்தும் தேவையான அளவு இணைந்து இயங்கினால் உயிரினங்கள், மனிதர்கள், தாவரங்களின் வாழ்வாதாரம் நிறைவாக அமையும் என்பதை அறியலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பூமியில் பஞ்ச பூதங்களின் இயக்கங்களும், உயிரியல் கட்டமைப்பு முறைகளும் இணைந்து அமைந்திருக்கிறது.
உயிரியல் வாழ்வில் தீர்வுகள்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எந்த ஒரு கோளில் உயிரியல் கட்டமைப்பு அமைய வேண்டும் என்றால் பஞ்ச பூதங்களின் இயக்கங்கள் இணைந்து அமைந்திட வேண்டும். இல்லை என்றால் அமைத்திட வேண்டும் என்பதை அறிய வேண்டும்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply