அனைவருக்கும் வணக்கம்,
ஈர்ப்பு விசை: இயற்கை & செயற்கை கட்டமைப்பு
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பிரபஞ்சம் முழுவதும் சுழல்வதற்கும், இயங்குவதற்கும் ஈர்ப்பு விசை காரண, காரியமாக அமைந்திருக்கிறது. இந்த ஈர்ப்பு விசைக்கு பிரபஞ்ச ஈர்ப்பு விசை என்று பெயர்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒவ்வொரு வகையான ஈர்ப்பு விசை இருக்கிறது.
ஈர்ப்பு விசை இரு வகைப்படும்.
1. இயற்கை ஈர்ப்பு விசை
2. செயற்கை ஈர்ப்பு விசை
1. இயற்கை ஈர்ப்பு விசை:
ஒலி, ஒளி, வாசனை, திடம், திரவம், ……. போன்றவை ஈர்த்து, நகர்த்தும் விசை (ஈர்ப்பு விசை) இயற்கை கட்டமைப்புகளுக்கு உண்டு.
இயற்கை ஈர்ப்பு விசைக்கு இயக்க, கால, எல்லை அளவுகள் உண்டு.
ஈர்ப்பு விசைக்கு எப்புறமும் இயங்கும் சக்தி உண்டு.
இயற்கை ஈர்ப்பு விசை இயற்கை கட்டமைப்பில் இயல்பாக இயங்கும் தன்மை உடையது.
இயற்கை ஈர்ப்பு விசையில்:
பிரபஞ்ச ஈர்ப்பு விசை
பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை
பஞ்ச பூத ஈர்ப்பு விசை
கோள் ஈர்ப்பு விசை
கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை
கோள் சுழற்சி ஈர்ப்பு விசை
வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை
ஒளி – இருள் ஈர்ப்பு விசை
காந்த ஈர்ப்பு விசை என ஈர்ப்பு விசை பல்வேறு கட்டமைப்புகளில் ஈர்ப்பு விசை அமைந்திருக்கிறது.
2. செயற்கை ஈர்ப்பு விசை:
இயற்கை கட்டமைப்புகளின் துணையோடு, மனித அறிவின் விசால தன்மையோடு (உயிரியல் வாழ்வாதாரம்) இயங்குவதே செயற்கை ஈர்ப்பு விசை ஆகும்.
செயற்கை ஈர்ப்பு விசைக்கு இயக்க, கால, எல்லை அளவுகள் உண்டு.
செயற்கை ஈர்ப்பு விசைக்கு நாம் குறிப்பிட்டு இயக்கும் திசைகளில் மட்டுமே இயங்கும் சக்தி உண்டு.
செயற்கை ஈர்ப்பு விசை இயற்கை கட்டமைப்பில் இயல்பாக & முரண்பாடாக இயங்கும் தன்மை உடையது.
மகா விஞ்ஞானி:
ஈர்ப்பு விசையின் இயக்க, கால, எல்லை அளவுகளின் விரிவான விவரங்களை அறிந்து செயல்படுபவரே “மகா விஞ்ஞானி” ஆவார்.
மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply