நினைவுகளில் ஆய்வியல் தொடர்பு

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பூமியில் மனிதனது துவக்க காலத்தை அறிய முற்படுவோம் என்றால் நினைவுகளின் முக்கியத்துவத்தை அறியலாம். நினைவுகளின் முக்கியத்துவத்தை இன்றைய காலத்திலும் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிய இயலும்.

நினைவுகளின் மூலம் மனம்
மனம் என்று குறிப்பிடுவது நினைவுகளின் தொகுப்பாகும். நினைவுகளின் இருப்பிடமும் மனமே ஆகும்.

நினைவுகளின் தொடர்பு புலன்கள்
நினைவுகளின் தொடர்பு ஐம்புலன்கள் ஆகும்.
நினைவுகள் ஒவ்வொன்றும் ஐம்புலன்கள் வாயிலாகவே வெளிப்படுகிறது.
நினைவுகள் உயிருடல் அமைப்பிற்கும் – பிரபஞ்ச இயக்க தொடர்பிற்கும் (உள் – வெளி) மனமே காரணமாக அமைகிறது.

நினைவுகளின் தொடர்புகள்:
*உருவம் – அசைதல், அசையாதிருத்தல் என்பன பார்த்தல் வாயிலாக நடைபெறுகிறது.

* ஒலி (ஓசை) ஓசைகள் (சப்தம்) இயற்கை (பஞ்ச பூதங்கள்), தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் வாயிலாக வெளிப்படும் அனைத்தும் கேட்டல் வாயிலாகவே (வெளி – உள்) நடைபெறுகிறது.

* ஒலி (ஓசை) ஓசைகளை (சப்தம்) தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களுக்கு என வாய் வாயிலாக (உள் – வெளி) வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் சாப்பிடுதல் எனும் நிகழ்வில் சுவை அறிதல் என்பதும் வாய் வாயிலாகவே (வெளி – உள்) நடைபெறுகிறது.

* வாசனை எனும் நிகழ்வுகள், சுவாசித்தல் எனும் நிகழ்வுகள் நுகர்தல் வாயிலாகவே நடைபெறுகிறது.

* உணர்தல் – இயற்கையில் – செயற்கையில் வெப்பம் – குளிர், உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்கள் என உணர்தல் அனைத்தும் தோல் வாயிலாகவே நடைபெறுகிறது.

நினைவுகளில் ஆய்வுகள்:
நினைத்து பார்த்தல் & நினைத்து பார்த்தலின் பரவலாக்கமே நினைவுகளில் ஆய்வியல் & ஆய்வியல் தொடர் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைகிறது. அதாவது தனக்குள் நினைத்து பார்த்தல், தனது நினைவுகளை பிற மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் என்பதன் வாயிலாக நிகழ்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of