அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை அறிவோம், அறிய இயலும்.
பஞ்ச பூதங்கள் ஐந்தும் தனித்தும், இணைந்தும் இயங்கும் தன்மையாக அமைந்திருக்கிறது.
பஞ்ச பூதங்கள் ஐந்தும் பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசைக்குள் தனித்தும், இணைந்தும் இயங்கும் தன்மையில் ஜடத்தன்மையாக அதேசமயம் உயிரோடு இணைந்து இயங்கும் தன்மையில் அமைந்திருக்கிறது.
பஞ்ச பூதங்கள் ஐந்தும் பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசையோடு இணைந்து இயங்குகிற போது பஞ்ச பூதங்களுக்குள் இணைந்து (கலவை) இயங்கும் செயல் நடைபெறுகிறது. இந்நிகழ்வு பிரபஞ்ச துவக்க காலத்தில் இருந்தே இயற்கை கட்டமைப்பில் நடைபெற்றுகொண்டிருக்கிறது.
பஞ்ச பூதங்கள் ஐந்தும் பிரபஞ்சத்தில் சுழற்சி முறையில் சுழன்று இயங்கிடவே ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கிடவும், உயிரினங்களின் வாழ்வியலுக்கு ஆதார அமைப்பாக விளங்கிடவும், உயிரியல், இயற்கையியல், செயற்கை இயல் பரிணாம, பரிமாற்ற வளர்ச்சிகளுக்கு இணைப்பு மையமாக, இயக்கமாக அமைந்திருப்பதுவே பஞ்ச பூத ஈர்ப்பு விசை ஆகும்.
பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று – ஒன்றுக்குள் ஒன்றாக இணைவதும், இணைந்து இயங்குவதும், இயக்கத்தில் பிரபஞ்சத்தில் இயற்கையும் – உயிரினங்களும் வாழ்வதற்கு உரிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உரிய வளர்ச்சியில் ஆதார அமைப்பாக விளங்குகிறது.
பஞ்ச பூதங்கள் தங்களது ஈர்ப்பு விசையை கோள்களோடு இணைகிற பொழுது வெளிப்படுத்துகிறது.
அதாவது,
கோள்களின் பாதுகாப்பு வலயத்திற்கும்,
கோள் காந்த ஈர்ப்பு விசைக்கும்,
வெப்பம் – குளிருக்கும்,
கோள் ஈர்ப்பு விசைக்கும்,
கோள் மைய அச்சு இயக்கத்திற்கும்,
கோள் சுழற்சி இயலுக்கும்,
பகல் – இரவு தொடர் இயக்கத்திற்கும்,
பிரபஞ்சம் முழுவதும் வாழுகின்ற நுண்ணுயிர்களுக்கும்,
இயற்கை தாவரங்களுக்கும்,
உயிரினங்களுக்கும் என ஒவ்வொரு இயக்கங்களுக்கும் முழுமுதற் காரணமாக, ஆதாரமாக அமைந்திருக்கிறது.
ஈர்ப்பு விசையில் நிறைவு:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில்,
ஆகாயம் + வெப்பம் + காற்று + நீர் + மண்
என பஞ்ச பூதங்கள் ஐந்தும் ஒரு கோளில் தேவையான அளவு நிறைந்து இருக்குமே ஆனால் அக்கோளில் நுண்ணுயிர்கள், தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என அனைத்தும் வாழ்வதற்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது என்பதை அறியலாம்.
உதாரணம் – பூமி (கோள்)
ஈர்ப்பு விசையில் சீரமைப்பு:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில்,
ஆகாயம் + வெப்பம் + காற்று + நீர் + மண்
என பஞ்ச பூதங்கள் ஐந்தும் ஒரு கோளில் தேவையான அளவு நிறைவு கொள்ளாமல்
வெப்பத்தின் அளவிலும்,
நீரின் தன்மையிலும்,
காற்றின் கலவையிலும்
முரண்பாடாக அமைந்திருக்கும் என்றால் அக்கோளில் பிரபஞ்ச நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு மாத்திரமே வாய்ப்பு இருக்கிறது. மாறாக தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என அனைத்தும் வாழ்வதற்கு ஏற்புடையதாக அமையவில்லை என்பதை அறிய வேண்டும்.
உதாரணம் – சந்திரன் (துணை கோள்) ……….. .
பஞ்சபூத ஈர்ப்பு விசையை மேலும்
அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply