அனைவருக்கும் வணக்கம்,
புலன் இயல் தொடர்பு
நாம் இந்த பிரபஞ்சத்தில் மனிதனாய் முழுமையாக வாழ்வதற்கு புலன் இயல் தொடர்பு அவசியமாகிறது. மனித உயிர் உடல் இயக்க அமைப்பில்
1. உடல்
2. பொறிகள்
3. புலன்கள்
4. சித்தம்
5. அறிவு
6. அன்பு
7. ஞானம்
8. மனம்
9. உயிர்
எனும் ஒன்பது அடிப்படை அமைப்புகளில் புலன்கள்
எனும் அமைப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
ஐம்புலன் இயக்கங்களே பிரபஞ்ச அமைப்பிற்கும் மனித உடலில் இருக்கும், மனித வெளி உடல் தொடர்பிற்கும், மனித உள் உடல் தொடர்பிற்கும்,
மனித வெளி – உள் தொடர்பிற்கும், மனித உள் – வெளி தொடர்ந்திருக்கும், மனிதனின் பிரபஞ்ச இயல் தொடர்பிற்கும் (பஞ்ச பூதங்கள், மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்)
காரணமாக அமைகிறது.
புலன்கள் ஐந்து வகைப்படும்:
1. பார்த்தல்
2. கேட்டல்
3. சொல்லுதல்
4. உணர்தல்
5. நுகர்தல் என்பனவாகும்
ஐம்புலன் இயக்க தொடர்பில் அமைந்திருக்கும் உயிருடல் இயக்க அமைப்புகள் மனித வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பேருஉதவியாகும்.
உயிருடல் இயக்க அமைப்பில் புலன்கள், பொறிகளின் தொடர்பை அறியலாம்.
புலன்கள் பொறிகள்
பார்த்தல் கண்
கேட்டல். காது
சொல்லுதல் வாய் (நாக்கு)
உணர்தல். தோல்
நுகர்தல் சுவாசம்
எனும் நிலையில் அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.
ஐம்புலன் தொடர்பு இயக்கங்களை தொடர்ந்து அறியலாம். வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply