பிரபஞ்சம்: முக்கூட்டு சங்கமம்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்ச அமைப்பை உற்று நோக்கினால் இந்த பிரபஞ்ச கட்டமைப்பே சுழற்சி முறையில் இயங்குகிறது. ஈர்ப்பு விசையில் இயங்குகிறது என்பதை அறியலாம். இப்படி தனித்து பார்க்கிற நிகழ்வுகள் நடைமுறையில் ஆய்வுகளை மையபடுத்தி அமைந்திருக்கிறது. இதையே இன்னொரு புறம் பார்த்தால் இவ்விரு (சுழற்சி முறை இயக்கம், ஈர்ப்பு விசை இயக்கம்) இயக்கங்களும் இணைந்து இயங்குகிறது என்பதை நம்மால் மறுக்கவும் இயலாது.

பிரபஞ்ச இயக்க கட்டமைப்பை இங்கு இன்னொரு புறமாக பார்த்தால் “சுழற்சி இயக்கத்தால் ஈர்ப்பு விசை நிகழ்கிறதா அல்லது ஈர்ப்பு விசை இயக்கத்தால் சுழற்சி இயக்கம் நிகழ்கிறதா” என்ற மாபெரும் கேள்வி எழுகிறது என்பதை அறிய முடிகிறது. இதற்கு தெளிவான ஒரு தீர்வை அலசி ஆராய்ந்து பார்த்தால் தான் ஆய்வுகளை மேற்கொள்ள இயலும். இந்த மாபெரும் கேள்விக்கு இயற்கை இயங்குகிற முறைகளில் இருந்தே பதிலை தேர்வு செய்யலாம். அதாவது சுழற்சி முறையில் இயக்கத்தை இயக்கி கொண்டே ஈர்ப்பு விசையை இணைக்க இயலாது. சுருக்கமாக கூறினால் சுழற்சி இயக்கத்திற்கு (சுழல்வதற்கு) உரிய நிகழ்வுகள் ஏற்பாடு ஆகிறது. ஈர்ப்பு விசைகளுக்கு உரிய நிகழ்வுகளும் ஏற்பாடு ஆகிறது. ஈர்ப்பு விசை இணைப்பில் தான் தொடச்சியாக சுழற்சி இயக்கம் நடைபெறுகிறது. சுழற்சியில் ஈர்ப்பு விசையும், ஈர்ப்பு விசையில் சுழற்சியும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத நிலையில் தொடர்ந்து இயங்குகிறது. இவ்விரு இயக்கத்தில் வேகத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ முயற்சி செய்தால் சுழற்சிக்கு உரிய நிகழ்வை சீரமத்தால் அல்லது ஈர்ப்பு விசைக்கு உரிய நிகழ்வை சீரமத்தால் இரு விசைகளும் தேவைக்கு ஏற்ப சீராகும்.

மேலும் கவனிக்கப்பட வேண்டியது:
சுழற்சி இயக்கமும், ஈர்ப்பு விசையும் இயங்குவதற்கு இவை இரண்டிற்கும் இணைக்கப்படுகிற “பஞ்ச பூதங்கள் மற்றும் அதனோடு இணைகிற ஒவ்வொன்றும் திட – திரவ – வாயு நிலையில் இணைந்து இயங்கும் தன்மையில்” அமைந்திருக்கிறது.
ஆகவே சுழற்சி, ஈர்ப்பு விசை நிகழ்வை புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தை பார்க்கலாம். (மண் + காற்று) + (மண் மீது காற்று + நீர் ) + (மண் மீது காற்று + வெப்பம்) + (மண் மீது காற்று +நீர் + வெப்பம்) (மண் மீது காற்று + வெப்பம் + நீர்) இவற்றின் இயக்கத்தை பார்க்கலாம்.

மண் காற்று இயல்பு தன்மை:
மண்ணும் காற்றும் இணைந்தே (மண் + காற்று) இருக்கும். “காற்றோடு இணையாத எந்த ஒரு இயக்கமும் இல்லை” என்பதை அறிய வேண்டும்.

மண்ணின் இயல்பு தன்மை:
மண்: இயல்பான நிலையில் திட தன்மையுடன் (கெட்டி மற்றும் துகள்)
& துகள் தன்மையுடன் தன்மையுடன் இருப்பதால் இடை வெளிகள் நிறைந்ததாக இயற்கையில் (இயல்பு நிலையில்) இருக்கிறது.

காற்றின் இயல்பு தன்மை:
காற்று இயல்பு நிலையில் வாயுவின் தன்மையுடன் இருக்கிறது. ‘காற்று நகர்த்துதல் (சுழற்சியல்: எல்லா புறமும்) சக்தியை’ பெற்றிருக்கிறது.

மண் + காற்றின் இயல்பு தன்மை:
மண் என்பதையே கோள் வடிவின் பிரதான பொருள் என்கிறோம். மண்ணோடு காற்று இணைந்து இயங்கும் தன்மை உடையது. மண்ணில் உள்ள இடைவெளிகளில் நிறைவதும், மேடு – பள்ளங்களில் நகர்ந்து செல்வதும், இதனால் சுழற்சி இயக்கங்கள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. இதுவே மண்ணின் வெளிப்புறத்திலும் – உட்புறத்திலும் சுழற்சி இயக்கங்களின் நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. ஆகவே மண்ணில் உட்புறத்திலும், வெளிபுறத்திலும் (மண்ணை சுற்றியுள்ள பிரபஞ்சத்திலும்) மண்ணோடு காற்றும், காற்றோடு மண்ணும் இணைந்து இயங்குவதில் ஈர்ப்பு விசையில் சுழற்சியாக – சுழற்சியில் ஈர்ப்பு விசையாக ஒருங்கினைந்து இயங்குவதை அறியலாம்.

மண் மீது காற்று + நீர் இணைந்து இயங்கும் இயல்பு தன்மை:
மண் என்பது கெட்டியாக, துகழ்களாக என இடைவெளிகள் நிறைந்த அமைப்பாக உள்ளது. நீர் என்பது இடைவெளிகளில் நிறையும் தன்மையாக, நிறைந்திருக்கும் தன்மையாக அமைந்திருக்கிறது.

மண் மீதும், மண் இடை வெளிகளுக்குள் காற்றும், நீரும் இணைந்து இருக்கிற வரை மண் இயல்பு தன்மையில் இருக்கும் என்பதை அறியலாம். அதாவது மண்ணின் தன்மையில் நீரும் அல்லது நீரின் தன்மையில் மண்ணும் இணைந்த நிலையில் உள்ள இயல்பு நிலை உருவாகும். . இவ்விரு தன்மைகளில் எந்நிலை ஆனாலும் காற்றின் தன்மை அவற்றோடு இணைந்து இயங்கும் இயல்பு உடையதாக அமைந்திருக்கிறது.

மண் மீது காற்றும், வெப்பமும் இணைந்து இயங்கும் இயல்பு தன்மை:
மண்ணோடு எப்பொழுதும் இணைந்து இருக்க கூடிய காற்று தமது நகர்த்துதல் சக்தியால் இடைவெளிகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது. இதனால் மேடு – பள்ளம் – சமவெளி போன்ற நிகழ்வுகள் உருவாகிறது. இந்நிகழ்வில் வெப்பமும் இணையுமே ஆனால் மண்ணின் உள்ள இடைவெளிகள் குறையவும், கூடுதலாகவும் உருவாகும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. மேலும் மண்ணில் ஒளி (வெளிச்சம்) ஊடுருவி செல்வதற்கு உரிய வாய்ப்புகள் உருவாகிறது.

முக்கூட்டு சங்கமங்களின் மூலக்கூறுகள் சூத்திரம்

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of