அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் மனிதர்களின் வாழ்வாதாரத்திற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் ‘பிரபஞ்ச வாழ்வியல்’ எனும் ‘மகா வாசகம்’ காலம் காலமாக மனிதர்கள் மத்தியில் நடைமுறையில் இருக்கிறது.
பல்லாண்டு காலமாக பூமியில் மேன்மை தாங்கிய வாழ்வியலை மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். உலக படைப்பியல் அடிப்படை வாழ்வாதார கணித இயல் முறைகளை பார்த்தால் பூமியில் மனிதர்கள் வாழ்ந்து பழகியது போதுமா? இல்லையா? எனும் கேள்வி எழுகிறது என்பதை அறிவோமா!.
பிரபஞ்ச இயல் கணிதம்:
* கணிதம் என்பது இருப்பதை பயன்படுத்துதல்,
* பயன்படுத்தியதை சீரமைத்தல்,
* சீரமைத்ததை ஒழுங்குபடுத்துதல்,
* ஒழுங்குபடுத்தியதை இனைத்து உருவாக்குதல்,
* உருவாக்கியதை புதுபித்தல்,
* உருவாக்கியதற்கு மருஉருவம் தருதல், …….. போன்ற அணைத்தையும் இயக்கிடவும், இயங்கிடவும் செய்வித்தல் ஆகும்.
ஆக பிரபஞ்ச இயல் கணிதம் என்பது பிரபஞ்சம் இயங்கும் முறைகளை அறிவதாகும்.
பிரபஞ்சம் இயங்கும் முறைகள்:
பிரபஞ்சம் என்பது பஞ்ச பூதங்கள் ஐந்தாகவும், அவ்வைந்தின் கூட்டமைப்பாகவும்,
அக்கூட்டமைப்பில் இயங்கும் இயற்கை கட்டமைப்பும், இயற்கை கட்டமைப்பில் வாழ்வாதார அமைப்பாக தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் எனும் உயிரியல் வாழ்வாதார இயற்கை கட்டமைப்பு முறையாக பிரபஞ்ச இயக்கத்தில் இருவித இயக்க முறைகளாக இயங்கி கொண்டிருக்கிறது.
வாழ்வாதார மாற்றம்:
வாழ்வாதார மாற்றங்கள் இரண்டு வகைப்படும்.
1. முழு நிறைவாக வாழ்தல்
2. முழு பாதிப்புகளை உருவாக்கி வாழ்தல்
என இரண்டு வகைப்படும்.
நாம் வாழுகின்ற (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வியல் வாழ்வாதாரம் நிறைவு பெற்றால் வாழ்வாதார மாற்றங்கள் உருவாகும். அதாவது ஒரு கோளில் வாழ்கிற போது இன்னொரு கோளில் வாழ்வாதாரம் அரங்கேறும்.
1. முழு நிறைவாக வாழ்தல்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் அடங்கிய ஒரு கோளில் உள்ள உயிரியல் வாழ்வாதார அடிப்படையில் முழுவதும் நிறைவாக வாழ்வது ஒருவிதமாகும்.
2. முழு பாதிப்புகளை உருவாக்கி வாழ்தல்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் அடங்கிய ஒரு கோளில் உள்ள உயிரியல் வாழ்வாதார அடிப்படையில் முழுவதும் பாதிப்புகளை உருவாக்கி வாழ்தல் ஒருவிதமாகும்.
மனிதன் தமது வாழ்வியல் தேவைகளை பெறுவதற்கு தாம் வாழும் கோளில் முழுமையான வாழ்வாதார முறைகளையும் வாழ்ந்து அனுபவிக்கிற போது தான் மனிதனது பகுத்தறிவின் ஆற்றல் வெளிப்படும். அப்போது தான் நாம் வாழும் கோளை கடந்து பிற கோளில் வாழ்வதற்கு உரிய வழியும், தெளிவும் பிறக்கும்.
நாம் இதுவரை வாழ்ந்த பூமியில் இயற்கை கட்டமைப்பும், உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பும் நிறைவாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால்
பூமியில் நாம் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். சில காலம் நிறைவாகவும், சில காலம் நிறைவின்மையாகவும் (எதிர் நிலையாகவும்), சில காலம் இரண்டும் கலந்த கலவையாகவும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் தற்போதைய காலத்தில் இயற்கைக்கு எதிரான வாழ்வியல் முறைகளை தான் வாழ்ந்து வருகிறோம். அதாவது பிரபஞ்ச இயல் கணித முறையில் – வாழ்வாதார மாற்றங்கள் முறையில் இரண்டாம் நிலையான முழு பாதிப்புகளை உருவாக்கி வாழும் முறைகளில் வாழ்கிறோம்.
ஆகவே பஞ்ச பூதங்கள் ஐந்திலும் பாதிப்புகளை (கழிவுகள்: ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண்) உருவாக்கி வாழ்கிறோம். ஆகவே பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ‘பிரபஞ்ச வாழ்வியல் மாற்றங்கள் வாயிலாக‘ வேறு கோளில் வாழ்வாதாரத்தை தொடர வேண்டியிருக்கிறது. எனவே நாம்
சந்திரனில் வாழ்வதற்கு உரிய வழி முறைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.
சந்திரனில் நமது வாழ்வாதாரம் அமைக்கப்பட வேண்டிய இயற்கை கட்டமைப்புகளையும், உயிரியல் வாழ்வாதார இயற்கை கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
எனவே நாம் சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கிட அங்குள்ள அனைத்து (வாழ்வியலுக்கு தேவையானது) சூழ்நிலைகளையும் முழுமையாக சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அவசியம் அறியவேண்டியது:
பிரபஞ்சத்தில் வாழ்வியல் மாற்றங்கள் என்றால் இயற்கை கட்டமைப்பு முதல் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான அனைத்தையும் அறிய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பூமியில் வாழ வேண்டிய அனைத்து முறைகளையும் வாழ்ந்தாகிவிட்டது. எனவே சந்திரனில் வாழ புதியதோர் வாழ்வாதாரத்தை உருவாக்கிட புதியதோர் சிந்தனையும், செயலாக்கமும் தேவை என்பதை அறிவோம்.
அறிவதை அறிவோம், ஆனந்தமாக வாழ்வாதாரத்தை துவங்கிட முயற்சிப்போம்.
நன்றி வணக்கம்
Leave a Reply