அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வாழ்வியலை பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும். நமது வாழ்வில் அறிந்து கொண்டதை, அதில் தெளிவு பெற்றதை, வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக மாற்றி அமைத்ததை, நிகழ் காலத்தில் – வரும் காலத்தில் வாழ வழி தருவதை முறைபடுத்தி தருவதை அறிவு என்கிறோம்.
நமது அறிவின் துணை கொண்டு அறிய வேண்டியதில் அவசியமானது ‘கோள் சுழற்சி இயலை பற்றி அறிவது ஆகும். இக்கருத்து எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றாலும் நாம் வாழும் தற்போதைய இந்த காலத்திற்கு அவசியம் அறிய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பூமியை கடந்து சந்திரன், செவ்வாய், சூரியன் ….. என விஞ்ஞான ஆய்வுகள் வாழ்வாதாரத்தை நோக்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கோள் சுழற்சி இயல்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது என்பதை அறிவோம். இதை மேலும் விரிவாக அறியலாம்.
கோள் சுழற்சி இயல் என்பது கோளின் சுழற்சி இயக்கத்தை தெரியபடுத்துவது ஆகும். கோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேகத்திலும், தூரத்திலும் தத்தமது சுழற்சி இயக்கத்தில் பங்கு பெறுகிறது. கோள்கள் தம்மை தாமே சுற்றி கொள்வதற்கும், தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதற்கும் கோள் சுழற்சி இயல் பயன்படுகிறது.
கோள் சுழற்சி இயல் இயக்கம்:
கோள் சுழற்சி இயல் இயக்கம் இயங்குவதற்கு
* மின் காந்த அலைகள்
* நீரின் இயக்கம்
* கோள் ஈர்ப்பு விசை
* பகல் – இரவு கால அளவுகள்
* கோளின் மைய அச்சு
* கோள் நுண்ணுயிர்களின் வாழ்வாதார இயக்கம்
* பாதுகாப்பு வளையம் ….. போன்ற பல்வேறு இயக்கங்கள் தொடர்பில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
வாழ்வாதாரம்:
கோள் சுழற்சி இயல்:
நாம் வாழும் இந்த பூமியில் அறிந்து கொண்ட ‘அறிவியல் ஆய்வில்’ பூமியின் தொடர்பு இயக்கங்களை மிகப்பெரிய அளவில் அறிந்து கொள்ள உதவுகிறது.
நமது வாழ்வாதார சூழ்நிலை கருதி மிக நீண்ட காலமாக சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்கிறோம்.
ஆய்வுகள்:
சந்திரனில் கோள் சுழற்சி இயல் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் சந்திரனில் கோள் சுழற்சி இயல் முறையில் குறிப்பிடுகிற தகவல்களை அறிவோம்.
சந்திரன் தம்மை தாமே சுற்றி வரும் காலம் தோராயமாக 28 நாட்கள் (பூமியின் 24 மணி நேர கணக்கு முறைப்படி) ஆகிறது. அதுபோலவே சந்திரன் தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கால அளவும் 28 நாட்கள் ஆகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பூமியின் சுழற்சி கால அளவு தம்மை தாமே சுற்றி வரும் காலம் தோராயமாக 24 மணி நேரமாகவும், தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கால அளவு தோராயமாக 365 நாட்களாகவும் ஆகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்திரனின் சுழற்சி இயல் தம்மை தாமே (28 நாட்கள்) சுற்றி வருவதும், தமது சுற்று வட்ட பாதையில் (28 நாட்கள்) சுற்றி வருதுமாக அமைந்திருக்கிறது. சந்திரனின் சுழற்சி சுற்று வட்ட பாதையானது பூமியின் சுழற்சி சுற்று வட்ட பாதையுடன் இணைந்திருக்கிறது. அதாவது சந்திரனின் சுற்று வட்ட பாதை பூமியின் சுற்று வட்ட பாதையில் வெளி – உள் கட்டமைப்பாக சுற்று வட்ட பாதை அமைந்திருக்கிறது.
“சந்திரனின் சுழற்சி இயல் இருபுற நிகழ்வாக நிகழ்வதை அறிவோமா?”
1. கிழக்கு திசையில் இருந்து தெற்க்கு திசையின் வாயிலாக மேற்க்கு திசையை நோக்கி பயனம் செய்வது சந்திரனின் நிகழ்வாகும்.
2. கிழக்கு திசையில் இருந்து வடக்கு திசையின் வாயிலாக மேற்க்கு திசையை நோக்கி பயனம் செய்வது சந்திரனின் நிகழ்வாகும்.
சாதகம்:
பூமியின் சுழற்சியை நமது விஞ்ஞானிகள் அறிந்தது போல் சந்திரனின் சுழற்சியை அறிந்தது சாதகமாகும்.
பாதகம்:
பூமியின் சுழற்சி கால அளவும், சந்திரனின் சுழற்சி கால அளவும் வெகுதூர இடைவெளியில் மாறி அமைந்திருப்பது பாதகமாகும்.
முடிவு:
சந்திரனின் சுழற்சி கால அளவில் பூமியின் சுழற்சி கால அளவில் வாழ்ந்த தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களின் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலாது என்பதை அறிவது அவசியம்.
தீர்மானம்:
சந்திரனின் கோள் சுழற்சி இயலை நாம் மாற்றி அமைக்க வேண்டும். அதாவது சந்திரனின் கோள் சுழற்சி இயலுக்கு தொடர்பு உடைய அணைத்து தொடர்புகளையும் சீரமைக்க வேண்டும்.
சந்திரனின் இயற்கை கட்டமைப்பில் நிகழக்கூடிய அணைத்து நிகழ்வுகளையும் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக சீரமைக்க வேண்டும்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply