அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இயற்கை கட்டமைப்பும், உயிரியல் வாழ்வாதார அமைப்பும் பிரமாண்டமானவை – பிரமிக்கத்தக்க வகையாகும்.
பூமியில் மனித வாழ்வு துவங்கிய காலத்தில் இருந்து:
புலன் வழி வாழ்வியல் வழியாக
* தெரிந்து கொள்ள வேண்டியவை
* பார்த்து அறிய வேண்டியவை
* தொடர்பு கொள்ள வேண்டியவை
* கற்றுக்கொள்ள வேண்டியவை
* கண்டுபிடிக்க வேண்டியவை
* அனுபவிக்க வேண்டியவை
* பழக வேண்டியவை
* பகிர்ந்து கொள்ள வேண்டியவை
என ‘வாழ்வியல் அறிவும், அறிவியல் வாழ்வும்‘ தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதில்,
மனம் – உயிர் – இயற்கை இயக்க தொடர்பு அறிவின் (அறிவியல்) வாயிலாக
* தாவர இயல் அறிவு
* உயிரினங்கள் இயல் அறிவு
பஞ்சபூதங்களால் இணைந்து இயங்கும் இயற்கை கட்டமைப்பில் பாதுகாப்பை கருதி
* உடலியல்
* உளவியல்
* உயிரியல்
* உணவியல்
* மருந்தியல்
* பாதுகாப்பு இயல்
தொடர்பில் அறிய வேண்டியதை அறிந்து வாழ்ந்திடவும்
* மண் இயல் அறிவு
* வெப்ப இயல் அறிவு
* காற்று இயல் அறிவு
* நீர் இயல் அறிவு
* ஆகாய இயல் அறிவு
* ஈர்ப்பு விசை அறிவு
* இயக்க இயல் அறிவு
* சுழற்சி இயல் அறிவு
* இயந்திரவியல் அறிவு
* ஒளி, ஒலி, வழி இயல் அறிவு
* பரிணாம வளர்ச்சி இயல் அறிவு …
என வாழ்வாதார அறிவியல் தொடர்பில்,
மனித வாழ்வு இயற்கையோடு இயல்பாக இணைந்திட,
* உயிரியல் தொடர்பு
* இயற்கை தொடர்பு
என மனித வாழ்வின் விசாலமான தேவை பூர்த்தி ஆகிட,
* செயற்கை (தொழில் நுட்பம்) தொடர்பு என,
ஆய்வியல் – வாழ்வியல் முறையாக,
* உருவாக்குதல்
* பயன்படுத்துதல்
* பாதுகாத்தல்
* பராமரித்தல்
* மறுசீரமைத்தல்
* அழித்தல் என அறிவின் தொடர்புகளை ‘விஞ்ஞான இயல், மெய் ஞான இயல் என இரு மாபெரும் பிரிவுகளாக ‘தனித்தும், இணைந்தும்’ இயங்கும் விதமாக’ தொடரும் அறிவியல் வாழ்வியலில் பூமியில் இருந்து சூரியனுக்கும், சூரியனை சுற்றி உள்ள அனைத்து கோள்களுக்கும், அதையும் கடந்து நட்சத்திர மண்டலங்களுக்கும் ‘ஆய்வியலில் அறிவியல்‘ தொடர்ந்து கொண்டிருப்பதை அறிவோம்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply