அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்கள் ஐந்தும் இணைந்து இயங்கும் தன்மை உடையதாக இயல்பாகவே அமைந்திருக்கிறது. இணைந்து இயங்கும் தன்மை உள்ள பஞ்ச பூதங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் வேக அளவுகள் அதிகமானால்/குறைந்தால் இணைதலில் முரண்பாடு உருவாகிறது. இந்த முரண்பாடுகள் பஞ்ச பூதங்களின் இயக்கங்களையும், பஞ்ச பூதங்கள் உருமாறியிருக்கும் தன்மைகளையும் பாதிக்கிறது. மேலும் பஞ்ச பூத இயற்கை கட்டமைப்பிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், தாவரங்களையும், உயிரினங்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. மேலும் பகலும், இரவுமாக பிரபஞ்சம் காட்சி அளிக்கிறது. உயிரியல் வாழ்வாதாரத்தோடு இணைந்திருக்கும் பூமியில் பஞ்சபூத முரண்பாடுகளின் ஆய்வுகளில் விஞ்ஞான கட்டமைப்பு எப்பொழுதும் விழிப்புணர்வு நிலையில் இருந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் வாழும் பூமியில் உயிரியல் வாழ்வின் துவக்க காலத்திலிருந்தே உயிரினங்கள் தத்தமது அறிவின் துணை கொண்டே வாழ்ந்து வருகிறது. மனிதர்கள் மாத்திரமே
- பார்த்து அறிதல்
- கேட்டு அறிதல்
- நினைவுகளில் அறிதல்
- தெரிந்து கொண்டு அறிதல்
- உணர்ந்து அறிதல்
- அனுபவித்து அறிதல்
- பகிர்ந்து கொண்டு அறிதல் ….. என ஒவ்வொரு முறைகளையும் ‘வாழ்வியல் அறிதல்’ தொடர்பாக தமது அறிவு என்றழைக்கப்படும் ‘பகுத்தறிவை’ அறிய முடிகிறது. பகுத்தறிவின் துணைகொண்டு தான் மனித வாழ்வின் விசாலமும், மனித வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் முறைகளும் தொடர்ந்து உருவாகி / உருவாக்கி கொண்டிருக்கிறது. உருவான விஞ்ஞான வளர்ச்சியே நாம் இப்பொழுது அறிந்து கொண்டிருக்கும் சந்திரனின் வாழ்வாதார கோட்பாடு ஆகும்.
மனிதன் பூமியில் இருந்து அண்ணாந்து பார்க்கிற பொழுது மிக பரந்த ஆகாய இடைவெளிகளும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை காணுகின்ற பொழுது கோள் அறிவு, ஆகாய அறிவு என்று சிறப்பு பெயரிட்டு அழைக்க கூடிய வானியல் அறிவு (விஞ்ஞான அறிவு) சிறப்பறிவாக வெளிப்பட ஆரம்பித்தது. அதாவது பூமிக்கு அப்பால் இருப்பதை அறியும் அறிவும், அவ்வறிவை செயலாக்கம் செய்திடும் ஆற்றலும் உருவாக ஆரம்பித்தது. இதன் விளைவாகத்தான் “செயற்கை வெளிச்சம்” உருவெடுக்க ஆரம்பித்தது. இதற்கு ஆதாரமான அறிவே மனிதனை விஞ்ஞான வளர்ச்சியின் உச்சகட்டத்திற்கு கொண்டு செல்வதை அறியலாம்.
மேலும் அறிவோம் வாருங்கள்,
நன்றி, வணக்கம்.
Leave a Reply