அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சுழற்சி நிலையில் இயங்குகிறது. கோள்களின் சுழற்சி முறையானது இரண்டு வகைகளில் நிகழ்கிறது.
1. தன்னை தானே சுற்றுதல்.
2. தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல் ஆகும்.
கோளின் சுழற்சி இயக்கத்திற்கு கோளின் மைய அச்சும், பாதுகாப்பு வலயமும் மிக முக்கியமான ஆதார அமைப்பாக விளங்குகிறது. மேலும் கோளின் இரு வகை சுழற்சி (தன்னை தானே சுற்றி வருதல், தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்) இயலுக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.
பாதுகாப்பு வலய இயக்க தொடர்புகள்:
ஒரு கோளில் அதன் இயக்கத்திற்கும், சுழற்சிக்கும் மிக முக்கிய தொடர்பாக அமைவது பாதுகாப்பு வலயம் ஆகும். ஒரு கோள் தன்னை தானே சுற்றி வரும் முறையிலும், தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் முறையிலும் பாதுகாப்பு வலயத்தின் பங்கு மிக மிக முக்கியமானதாகும். அதாவது பாதுகாப்பு வலயமானது கோளின் உள் கட்டமைப்பிலும், வெளி கட்டமைப்பிலும் தொடர்பு உடையதாகும்.
உள் கட்டமைப்பு:
சந்திரனின் பாதுகாப்பு வலயமானது உள் கட்டமைப்பை பொறுத்த வரையில்:
- கோளுக்கும், பாதுகாப்பு வலயத்திற்கும் உள்ள இடைவெளி கட்டமைப்பில் உள்ள பஞ்ச பூதங்களின் தொடர்புகளாகும்.
அதாவது: - ஆகாய இடைவெளிகளின் தொடர்பு,
- இடைவெளிகளில் உள்ள வெப்பத்தின் தொடர்பு,
- இடைவெளிகளில் உள்ள காற்றின் தொடர்பு,
- இடைவெளிகளில் உள்ள ஈரப்பதத்தின் தொடர்பு என தமது உள் கட்டமைப்பில் பங்கேற்கிறது.
வெளி கட்டமைப்பு:
சந்திரனின் பாதுகாப்பு வலயமானது வெளி கட்டமைப்பை பொறுத்த வரையில் பஞ்ச பூதங்களின் தொடர்பு சக்திகளோடு பங்கேற்கிறது.
அதாவது,
- கோளின் பாதுகாப்பு வலயமானது கோள் தன்னை தானே சுற்றி வரும் நிகழ்வில் இருந்த இடத்தில் இருந்தே பிரபஞ்ச தொடர்பில் பங்கேற்கிறது.
- கோளின் பாதுகாப்பு வலயமானது கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் நிகழ்வில் சுழன்று கொண்டே தனது சுற்று வட்ட பாதையில் பிரபஞ்ச தொடர்பில் பங்கேற்கிறது. இவ்விரு வகையான சுழற்சி நிலையிலும் பாதுகாப்பு வலயமானது தனது வெளி நிலையில்:
- ஆகாயமய் அமைந்திருக்கும் இடைவெளியில் தனது இயக்க ஈர்ப்பு விசையில் இயங்க வேண்டியிருக்கிறது.
- ஆகாய இடைவெளியில் பரவியிருக்கும் வெப்பத்தில் கலந்து இயங்க வேண்டியிருக்கிறது.
- ஆகாய இடைவெளியில் சுழன்று வரும் காற்றில் கலந்து, காற்றின் சுழற்சி ஈர்ப்பு விசையில் நகர்தல் பனியினை தொடர்கிறது.
- ஆகாய இடைவெளியில் பரவியிருக்கும் ஈரப்பதத்தில் (நீரின் இயக்கத்தில்) வெப்பமும், காற்றும் கலந்து இயங்கும் இயக்கத்தில் இயங்குகிறது.
- ஆகாய இடைவெளியில் சுழன்று இயங்கும் பிற கோள்களின் (கோள்கள், துணை கோள்கள்) இயக்க சக்திகளின் வெளிப்பாடுகளோடு இணைந்து அல்லது இணைப்பினை இணைய இயலாமல் இயங்குகிறது.
சந்திரனின் பாதுகாப்பு வலயம்:
சந்திரனின் பாதுகாப்பு வலய இயக்கத்தை இரு வித இயக்க பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. சந்திரனில் உயிரியல் வாழ்வாதார இயக்க சீரமைத்தலுக்கு முன்பு உள்ள நிலை.
2. சந்திரனில் உயிரியல் வாழ்வாதார இயக்க சீரமைத்தலுக்கு பிறகு உள்ள நிலை என இரு நிகழ்வுகளில் விளக்குகிறோம்.
சந்திரன் (கோள) தன்னை தானே சுற்றி வரும் நிகழ்வில் & தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் நிகழ்வில் பாதுகாப்பு வலய தொடர்பினை அறிவோம். அதாவது பாதுகாப்பு வலயத்தின் உள் – வெளி ஈர்ப்பு விசையின் தொடர்பு அமைப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியவேண்டும். அதாவது சந்திரனின் பாதுகாப்பு வலயமானது சந்திரனின் கோள் அமைப்பை தனக்குள் உள்ளடக்கியிருக்கிறது. அதே வேளையில் பிரபஞ்ச கட்டமைப்போடு இணைந்திருக்கிறது. மேலும் பிரபஞ்ச சுழற்சி இயக்க இயலோடு இணைந்து இயங்குகிறது.
மேலும் அறிவோம், வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply