அனைவருக்கும் வணக்கம்,
மனிதன் தனது உயிருடல் இயக்க தொடர்பில் வாழ்வதற்கு நினைவுகளே பிரதானமாக அமைந்திருக்கிறது.
நினைவுகளின் இருப்பிடம் மனம் எனும் அமைப்பாகும்.
நினைவுகளில் தெளிவிருந்தால், செய்யும் செயல்கள் தெளிவாகும்.
தெளிவுகள் வாழ்வாதாரத்தின் ஆனிவேராகும்.
மனம் உடலுக்கும் – உயிருக்கும் உறவு பாலமாய் அமைந்திருக்கிறது.
மனம் தனக்கும், தான் வாழுகின்ற பிரபஞ்சத்திற்கும் தொடர்பாக அமைந்திருக்கிறது.
மனமே நினைவுகளின் கூடாரமாக அமைந்திருக்கிறது.
நினைவுகள் உண்மை, பொய், கற்பனை எனும் மூன்று வித தொடர்புகளிலும் இயங்கும் விதமாக அமைந்திருக்கிறது. இம்மூன்றை அறிதலே அறிதலில் அவசியம் ஆகிறது. இம்மூன்றின் தன்மைகளை, அதன் விளைவுகளை அறிந்தால் தான் வாழ்வியல் தொடர்புகளில் உயர்வு, தாழ்வுகளை அறிய இயலும்.
அறிய வேண்டியதை அறிவோம். ஆனந்தமாக வாழ்வோம்.
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
அறிய வேண்டியதை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply