அனைவருக்கும் வணக்கம்,
சந்திரன்: வாழ்வாதாரத்தை உருவாக்குதலில் இயற்கை கட்டமைப்பு சீராகுதல்.
மிக நீண்ட கால வாழ்வியல் முறையில், சந்திரனில் இவை சாத்தியமாகிறது.
சந்திரனில் தற்போதைய நிகழ்வுகளில் உருவாகும் விஞ்ஞான ஆய்வுகளில் இருந்து உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும். இது சாத்தியம் தானா என்றால் சாத்தியம் தான் என்பதை அறிய இயலும். ஆனால் இது உடனடியாக சாத்தியம் தானா எனும் கேள்விக்கு உரிய பதில் தான் நம்மை சிந்திக்க வைக்கிறது என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் சந்திரனின் இயற்கை (உயிரியல் வாழ்வாதாரத்திற்கு உரிய நிலையில்) கட்டமைப்பு முறைக்கும், பூமியின் இயற்கை கட்டமைப்பு முறைக்கும் உரிய நிகழ்வுகள் மாறுபாடும், முரண்பாடும் உரியதாக அமைவதால் வாழ்வாதார அமைப்பு முறைகளில் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாரெல்லாம் இருந்தால் என்ன? எங்கள் வாழ்வியல் முறைகளில் அறிந்த முறைகளை பின்பற்றுவோம். அதனால் ஒரு தவறும் இல்லையே! என்று கேட்கலாம்.
தவறு ஒன்றும் இல்லை!.
சந்திரனில்,
மண் இருக்கிறது,
நீர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வோம். அப்புறம் என்ன! நீரை அறிந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமே ……….
சரியான அனுகுமுறையில் தானே ஈடுபடுகிற போது ஏன் வாழ்வாதாரத்தை உருவாக்கிட இயலாது என்று குறிப்பிட முடியுமா? என்ற கேள்வி எழுகிறது என்பதை அறியலாம்.
ஆம்! இது நியாயமான கேள்வி தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அப்புறம் என்ன சிக்கல் உள்ளது என்பதை புரிய வைக்க இயலுமா என்றால் விளங்க வைப்போம், கவனியுங்கள்.
முதலில் ஒன்றை புரிந்து கொள்வோம்.
அதாவது நடைமுறையில் தற்பொழுது – சந்திரனில் (வாழ்வாதாரம் சீரமைக்கப்படுவதற்கு முன்பு உள்ள நிலை) உள்ள ஆய்வியல் முறைப்படி உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலுமா என்றால் இயலும் என்பது தான் பதிலாகிறது. ஆனால் காலம் என்பது மிக நீண்ட காலத்தை குறிக்கிறது.
அதாவது,
50 ஆண்டுகள் ஆகலாம்,
100 ஆண்டுகள் ஆகலாம்,
1000 ஆண்டுகள் ஆகலாம். ஏன் அதற்கு மேலும் கூட காலங்கள் ஆகலாம்.
அதுபோலவே உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கிட சேதாரங்கள் என்பது என்னிலடங்கா நிலையில் உருவாகும்.
அதாவது,
பொருளாதார (பனம்) சேதாரம்,
விஞ்ஞான கட்டமைப்புகள் சேதாரம்,
தாவரங்கள் சேதாரம் (அழிவு)
உயிரினங்கள் அழிந்து போகுதல்,
மனிதர்கள் அழிந்து போகுதல் என என்னிலடங்கா சேதாரங்களை பல ஆண்டுகளாக சந்திக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும்.
மேலும் அறிவோம் வாருங்கள்….
இங்கு நாம் உயிரியல் என்று எதை கூறுகிறோம்.
– நடைமுறை விஞ்ஞான இயலில் குறிப்பிடப்படும் உயிரியல் கட்டமைப்பையா
அல்லது
– பிரபஞ்ச உயிரியல் அமைப்பையா? அதாவது உயிர் இயங்கும் இயல் அமைப்பு
இரண்டுமே என்று எடுத்து கொள்ளலாம் என்ற நிலை உண்மையானதென்றாலும்.
எனக்கு, எப்போதும் தோன்றுவது பிரபஞ்ச உயிரியல் அமைப்பின் கண்ணோட்டமே முழுமையானதென்று.
இது சரியான புரிதல் அமைப்பா, இதில் சீரமைப்பிற்கு வாய்ப்புள்ளதா?
மகத்துவமான இந்த வாய்ப்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் சுவாமி.
இறைவா நன்றி.