*இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அதாவது அறிவின் முதல் பருவம் முழுமையும் தெளிவடைவதற்குள் அறிவின் இரண்டாம் பருவம் ஏன் துவங்குகிறது.
இதற்கு பதில் பிரபஞ்ச வாழ்வியலே ஆதாரமாக அமைந்திருக்கிறது.
எவ்வாறெனில் “உயிரினங்களின் அறிவு தொடர்பானது ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்கிறது. அது போலவே இயற்கையில் பிரபஞ்ச கூட்டமைப்பானது ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை உடையதாய் அமைந்திருக்கிறது “. எனவே அறிவின் தொடர்பானது பிரபஞ்சம் முழுவதும் இணைந்து இயங்கும் முறைகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே பூமியில் நமது வாழ்வாதார நிகழ்வுகள் நிறைவு பெறுகிற தருவாயில் பூமியின் துணைக்கோளாக அமைந்திருக்கும் சந்திரனில் நமது வாழ்வாதாரம் அமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை அவசியமாகிறது.
நமது அறிவின் முதல் பருவத்தில் பூமியில் வாழக் கற்றுக்கொள்ள கூடிய முறைகளைத் தவிர பிற இயற்கை* அமைப்புகள் அணைத்தும் நிறைந்து அமைந்திருக்கிறது. இதில் “இயற்கையில் இயற்கை அமைப்பு முறைகளையும், இயற்கையில் செயற்கை அமைப்பு முறைகளையும் உருவாக்கி வாழ வேண்டிய முறைகளே அறிவின் முதல் பருவமாக அமைந்திருக்கிறது”.
(*தாவரங்கள், உயிரினங்கள், நீர், சுவாச இயல் காற்று, பருவ காலம்: கோடை, குளிர், மழை, பனி ……. )
ஆனால் நமது அறிவின் இரண்டாம் பருவம் “ஜட இயற்கையில் (சீரமைக்கப்பட வேண்டிய நிலையில்), ஜடமற்ற இயற்கையின் துணை கொண்டு இணைத்து வாழ வேண்டிய சூழ்நிலையில் அமைந்திருக்கிறது.”
(+ ஜட இயற்கை அமைப்பின் இயக்க முறைகளை அவசியம் அறிய வேண்டும் ).
அறிவின் முதல் பருவ அனுபவத்தின் துணைகொண்டு, அறிவின் இரண்டாம் பருவ வளர்ச்சியின் மூலத்தை அறிய முயற்சி செய்வோம்.
மேலும் இம்முயற்ச்சியின் வெளிப்பாட்டில் வெளிப்படும் அறிவின் துணை கொண்டு சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்க முயற்சி செய்வோம்.
.
“முயன்றால் முடியும், முயற்சி செய்தால் முடியும்”
எனும் வாழ்வியல் தத்துவத்தை அறிவோம். .
வாருங்கள் அனைவரும் கூடுவோம், உலகார் அனைவருக்கும் உயர் வழி காட்டுதலை உருவாக்கி தருவோம்.
“ஆனந்தமாக வாழ முயற்சி செய்வோம்“.
நன்றி, வணக்கம்.
மதிப்பிற்குறிய ஆசிரியர் அவர்களை வணங்குவதில்
உவகை அடைகின்றேன்.
2019 புத்தாண்டு நன்னாளில் தங்களின் கட்டுரையை படிக்க வாய்ப்பளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், தங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அகிலத்தின் நன்மைக்கான தங்களது மேன்மையான இந்த முயற்சி வெற்றிபெற இறைவனை வேண்டி தங்களை வாழ்த்துகிறேன்.
இறைவா நன்றி
அன்புடன்
கண்ணன்.மு.க
9443598919