சந்திரனில் செயற்கை மழையில் விவசாயம் செய்வோமா?

அனைவருக்கும் வணக்கம்,

“சந்திரனில் செயற்கை மழையில் விவசாயம் செய்வோமா, உயிரினங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கிட உதவியாக இருக்குமா என்று நண்பர்கள் கேட்டது, ஏராளமான மனிதர்களின் மனதில் இருப்பது”.

நாம் வாழும் இந்த பூமியில் மனிதர்களின் வாழ்வாதாரம் சிறப்படைய எத்தனை, எத்தனை முயற்சிகள், பயிற்சிகள், அனுபவங்கள் ……. என சிறிது, சிறிதாக செதுக்கப்பட்டது. இதில் இயற்கை மழை நீரை சேகரித்து விவசாயம், மின்சாரம்……. என வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.

“மழை நீரின்றி அமையாது உலகு” என்பதற்கினங்க மழை நீர்வளம் பற்றாக்குறையான இடங்களில் செயற்கை மழையை பொழிய வைத்து தேவைகளை ஓரளவிற்கு பூர்த்திசெய்ய இயலுகிறது என்பதை அறிவோம். மனித வாழ்வின் அத்தியாவசியம் கருதி சந்திரனில் செயற்கை மழையை பொழிய வைத்து விவசாயம் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய இயலுமா என சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலர் இது சாத்தியம் ஆகுமா என்று கேட்கின்றனர்.

இதற்கான பதிலை பார்ப்போம், வாருங்கள்.

  • பொருளாதார வசதி இருக்கிறது.
  • இயந்திர வசதி இருக்கிறது.
  • விஞ்ஞானிகள் இருக்கின்றனர்.
  • கலவைக்கு உரிய பொருள்கள் இருக்கிறது….

பிறகு என்ன!

செயற்கை மழையை பொழிய வைக்க வேண்டியது தானே!!!!!

மேலும் அறிய வேண்டியதை பார்ப்போம்.

செயற்கை மழை பூமியில் சாத்தியம். செயற்கை மழையால் பூமியில் வாழ்வாதாரம் மிக குறைந்த அளவில் சாத்தியம் ஆகிறது. அதற்கு காரணம் பூமியில் கடல் நீரின் (உப்பின் சுவை கலந்த நீர்) கட்டமைப்பும், பூமியில் முக்கால் பாகம் கடல் நீர் அமைப்பால் சூழ்ந்த கட்டமைப்பும், பூமியில் கடல் கடந்து நிற்கும் பிற மண் கூட்டமைப்பில் பல வகையான (செம்மண், கரிசல்மண், மணல் மண் …..) மண் அமைப்பும் அதில் கலந்துள்ள நீரின் சுவை (இனிப்பு, உப்பு, களிம்பு…….) கலவை கூட்டமைப்பில் கலந்திருந்தாலும் தாவரங்கள், உயிரினங்கள் மிக நீண்ட வாழ்வாதார அமைப்பிற்கு உகந்ததாய் அமைந்திருக்கிறது.

அதாவது “பூமியின் கட்டமைப்பில் நீர் ஆதாரமும், உயிரியல் வாழ்வாதாரமும் வாழ்வியலுக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது”. மேலும், கடல் நீர்(உப்பு நீர்) ஆவியாகி உப்பு மழையாக பொழியாமல் உப்பின் சுவை மிக, மிக குறைந்த அளவில் இருக்கும் வகையில் இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது என்பதை அறிவோம். செயற்கை மழைக்கு தேவையான கலவைகள் அணைத்துமே பூமியில் உள்ள நீர் ஆதாரத்தின் துணை கொண்டே உருவாக்கப்படுகிறது. எனவே, பூமியில் உள்ள நீரும், மேகமும், கலவையும் (செயற்கை மழைக்குரியது), இயற்கை (மண், மலை) வளங்களும், உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.

ஆனால்,

சந்திரனில் மண், வெப்பம், நீர், காற்று போன்றவைகளின் கலவைகள் அங்குள்ள வாழ்வியலுக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கும். அங்கு நடைபெறும் நீர் ஆவியாகுதலினால் உருவாகும் மேக கூட்டமைப்புகளும் சந்திரனின் இயற்கை வளங்களுக்கு ஏற்புடையதாகவே அமைந்திருக்கும். இவ்வாறு இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்க. பூமியில் உள்ள செயற்கை மழைக்குரிய கலவைகளை சந்திரனின் மேக கூட்டமைப்புகளோடு பயன்படுத்த முயற்ச்சிக்கையில், அம்மழை நீரானது அங்கு நாம் உருவாக்கும் வாழ்வாதார கட்டமைப்புகளோடு இணைந்து இயங்குமா என்பதை அறிய வேண்டும்.

இதை சொல்வது சுலபம் தான்.

இதை செய்வது கடினம் தான்,

ஆனால்…..

சந்திரனில் செயற்கை மழையின் பலன் என்னவென்றால் பூஜ்யம் தான் என்பதை நாம் அறிவோமா?

ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால் சந்திரனின் வெப்பத்தாக்கம் செயற்கை மழையால் அமண்ணை குளிர வைக்காது. பூமியை விட சந்திரனில் வெப்பம் பல மடங்கு அதிகம். அதோடு மட்டுமல்லாது பதினான்கு (14) நாட்கள் தொடர்ந்து நிலவும் வெப்பம் என்பதால் சந்திரனில் சிறிதளவு கூட பயன்தராது. மாறாக இம்முயற்சி மிகப்பெரும் தோல்வியைத்தரும். அதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய பொருளாதார செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும்.

அறிய வேண்டியதை அறிவோம் : “அவசியமின்றி அனாவசியமான சிந்தனைகளை தவிர்ப்போம் “

நன்றி, வணக்கம்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of