ஈர்ப்பு விசை தொடர்பு

அனைவருக்கும் வணக்கம்,

மனிதர்களின் துவக்க காலத்தில் வாழ்வாதாரத்தை அறிய மிகப்பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அதில் ஒன்று தான் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இயற்கையின் தொடர்பை அறிய வேண்டிய நிகழ்வாகும். ஏன் என்றால் பகல் – சூரியன், இரவு – சந்திரன் எனும் தொடர்புகளை புரிந்து கொள்ள சில இயற்கை அடையாளங்களை தெரிந்து கொண்டனர். இதனால் பகல் – இரவு எனும் தொடர்பில் உயிரினங்களின் வாழ்வியல் முறைகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

பகல் – இரவு உயிரியல் தொடர்பு:
துவக்க கால மனித வாழ்வியலுக்கு இயற்கை தொடர்பு வாழ்வியல் முறைகளை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னவென்றால் பகலில் தாம் (மனிதர்கள்) வாழ்வது, இரவில் (வெளிச்சம் குறைவான/இருளான நிலை) உறங்குவது/ஓய்வெடுப்பது எனும் நிலையில் வாழ்ந்து வந்த மனித சமுதாயத்திற்கு இரவில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதை கவணிக்க நேர்ந்தது. மேலும் பகலில் அல்லது இரவில் தான் உயிரினங்களின் வாழ்வாதாரம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிற பொழுது சில உயிரினங்கள் பகலிலும், இரவிலும் வாழ்வதை கவனிக்க நேர்ந்தது. இந்நிகழ்வு தான் விழிப்புணர்வு – தூக்கம் எனும் வாழ்வியல் தொடர்புகளை அறிந்து கொள்ள அடிப்படை காரணமாக அமைந்தது. அதாவது உயிரியல் தொடர்பு என்பது நாள் முழுவதும் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்ட மாபெரும் விசயமாகும்.

உயிரியல் ஈர்ப்பு விசை:
உயிரியல் ஈர்ப்பு விசை என்பது 7 விதமான ஈர்ப்பு விசைகளாக இயங்குகிறது என்பதை அறிவோம் வாருங்கள்.

1. உடல் ஈர்ப்பு விசை
2. மன ஈர்ப்பு விசை
3. உயிர் ஈர்ப்பு விசை
4. உயிரினங்கள் ஈர்ப்பு விசை
5. தாவரங்கள் ஈர்ப்பு விசை
6. உலக (பிரபஞ்சம்) ஈர்ப்பு விசை
7. செயற்கை தொடர்பு ஈர்ப்பு விசை

இயற்கை தொடர்பு அறிவியல் முறை

1. உடல் ஈர்ப்பு விசை

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை நாம் அறிவோம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் ‘உயிர்’ அமைப்பு முறைகளை அடிப்படையாக கொண்டது.
உயிர் அமைப்பு முறைகளை இரு விதமான நிகழ்வுகளில் இயங்குகிறது.
1. ஜட உயிர் அமைப்பு முறைகள்
2. ஜடமற்ற உயிர் அமைப்பு முறைகள்
ஆக பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு இயல்பு இயக்கங்களுக்கும் உயிர் அமைப்புகளே மூல அமைப்புகளாக விளங்குகிறது என்பதை அறிதல் அவசியம் ஆகும்.

உயிருடலின் ஒவ்வொரு தொடர்புகளுக்கும் வெளி தொடர்பு அமைப்பாக தோல் அமைந்திருக்கிறது. தோல் உணர்தல் எனும் ஈர்ப்பு விசையின் காரணமாக பிரபஞ்ச இயக்க தொடர்பில் தொடர்பு கொள்கிறது.

தோலின் உணர்தல் சக்தியானது உடலின் வெளிப்புறம் துவங்கி – உடலின் உட்புறமுள்ள அனைத்து இயக்கங்களோடு (உயிருடல் முழுவதும்) தொடர்பு கொண்டிருக்கிறது. அதுபோலவே பிரபஞ்ச சக்தியானது உயிருடல் இயக்க அமைப்பில் உடலின் வெளிப்புறம் துவங்கி உடலின் உட்புறமுள்ள அனைத்து இயக்கங்களோடு (உயிருடல் முழுவதும்) தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை அறிகிற போது உடல் ஈர்ப்பு விசையின் மகத்துவத்தை முழுமையாக அறிய இயலும்.

2. மன ஈர்ப்பு விசை

நாம் வாழும் இந்த உலகில் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக உயிரியல் அமைப்பு முறைகள் அமைந்திருக்கிறது. இம்மூன்று பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கும் உயிரியல் அமைப்புகளில் மனித உயிரியல் அமைப்பு முறைகள் மாத்திரமே முற்றிலும், முழுமையும் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது.
ஏனென்றால்
* மனிதர்களின் நினைவுகள்
* மனிதர்களின் சிந்தனை திறன்
* மனிதர்களின் கற்றல் முறை
* மனிதர்களின் ஆளுமை திறன்
* மனிதர்களின் திட்டமிடல்
* மனிதர்களின் ஆய்வியல் முறை
* மனிதர்களின் கண்டுபிடிப்பு முறை
* மனிதர்களின் செயல் முறை
* மனிதர்களின் அனுபவ முறை
* மனிதர்களின் பயண முறை ……..
என மனிதர்களின் வாழ்வாதார முறை என்பது வியக்கத்தக்கது மற்றும் ஆச்சரியம் உடையதாக இருக்கிறது. இதற்கு காரணம் மனமே (மனித மனம்) ஆகும்.
மனிதர்களின் சிந்தனை மற்றும் செயல் திறன்களுக்கு மூல அமைப்பாக விளங்குவது மனித மனம் ஆகும்.

மனித மனம் மனித உடலுக்கும் – உயிருக்கும் உறவு பாலமாக விளங்குகிறது.
மனித மனம் மனிதனுக்கும் பிற உயிரியல் அமைப்புகள் அனைத்திற்கும் தொடர்பு அமைப்புகளாக விளங்குகிறது.
மனித மனம் மனிதனுக்கும் – பிர பஞ்ச இயற்கை கட்டமைப்புகள் அனைத்திலும் இயல்பாக மற்றும் ஆய்வியல் முறையாக தொடர்பு கொள்ளும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.
ஆகவே மனித மனதின் ஈர்ப்பு விசை ஆனது வாழ்வியல் எல்லைகளை ஆராய்ந்து அறியும் முறையாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.

3. உயிர் ஈர்ப்பு விசை

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்கள், அதில் கனிம வளங்கள், தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் இவை அனைத்திற்கும் இருப்பிடமாக விளங்குகிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் இயங்குவதற்கு உயிரே பிரதானமாக அமைந்திருக்கிறது.
உயிரின் தொடர்பு அமைப்புகள் இருவிதமான முறைகளில் இயங்குகிறது.
1. பஞ்ச பூதங்கள் மற்றும் அது சார்ந்த இயக்க தொடர்புகள் இயங்கிட மூல ஆதாரமாக விளங்குகிறது.
2. தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் எனும் உயிரியல் அமைப்பு முறைகள் பிரபஞ்சத்தோடு இணைந்து வாழும் முறைகளுக்கு மூல ஆதாரமாக விளங்குகிறது.
மேற்கூறிய இரு வித இயக்க அமைப்புகளையே ஜட உயிர் (1), ஜடமற்ற உயிர் (2) என குறிப்பிடுகிறோம்.

உயிரின் ஈர்ப்பு விசையே இவ்வுலக இயக்கத்திற்கு ஈர்ப்பு விசையாக அமைந்திருக்கிறது.

4. உயிரினங்கள் ஈர்ப்பு விசை

நாம் வாழும் இந்த பூமியில் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக உள்ளது. இம்மூன்று உயிரியல் அமைப்பில் தாவரங்கள், மனிதர்கள் தவிர உயிரினங்கள் எனும் அமைப்புகள் புற கண்களுக்கு தெரிந்த நிலையிலும், தெரியாத நிலையிலும் உள்ளதை நாம் அறிகிறோம்.
உயிரினங்களின் (தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள்) வாழ்வாதார அமைப்பில் கருவறை, பரிணாம வளர்ச்சி என்பதில் அமைந்திருக்கும் ஈர்ப்பு விசையானது உயிரியல் மகத்துவத்தை எடுத்துரைக்கும் மாபெரும் விசயமாகும்.
மனிதர்களின் சிறப்பம்சங்களில் புலனியல், மன இயல், அறிவு இயல், ஆளுமை இயல் …… போன்றவற்றில் ஒவ்வொன்றிற்கும் இடையில் அமைந்திருக்கும் ஈர்ப்பு விசையானது இன்று வரை விஞ்ஞான இயல் கொண்டு புரிந்து கொள்ள இயலாத நிலையில் அமைந்திருப்பதை அறிகிறோம். இதன் சூட்சுமத்தை (அகம் – புறம், புறம் – அகம்) மெய்ஞான இயல் கொண்டு அறிகிறார்கள். இத்தொடர்பு முறைகளை விஞ்ஞான ரீதியாக (கல்வி முறை) அறிமுகமாக்கவே எமது ஆய்வின் சிறப்பு அம்சமாகும்.

உயிரினங்களின் வாழ்வாதாரம் மனித வாழ்வியலுக்கு உணவாக, மருந்தாக, வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள துணையாக, ஆய்வியல் தொடர்புகளுக்கு ஆருயிராக, தன்னை பாதுகாக்கும் பாதுகாவலனாக, தன்னோடு பழகும் உயிர் தோழனாக, …….. உயிரியல் தொடர்புகளின் ஈர்ப்பு விசை உன்னதமானது, மகத்துவம் உடையது என்பதை அறிவோமா!.

5. தாவரங்கள் ஈர்ப்பு விசை

மனித சமுதாயம் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு உரிய, உயரிய வரப்பிரசாதமாக விளங்குவதே தாவரங்கள் ஆகும்.
தாவரங்கள் மண்ணிலும், நீரிலும் வாழ்கின்ற வாழ்வாதார இயற்கை கட்டமைப்பு முறையாகும். அதாவது மண்ணின் மேற்பரப்பிலும், நீரின் மேற்பரப்பிலும், நீருக்குள்ளும் வாழ்கின்ற முறையாகும்.

மண்ணில் ஈர்ப்பு விசை அறிமுகம்:
மண்ணில் ஈர்ப்பு விசை இருவித முறைகளில் ஒருங்கிணைந்த முறையாக அமைந்திருக்கிறது.
1. மண்ணில் மேற்பரப்பு ஈர்ப்பு விசை
2. மண்ணில் உட்பரப்பு ஈர்ப்பு விசை
இவ்விரு வித ஈர்ப்பு விசைகளையும் மனித சமுதாயத்திற்கு அறிமுகபடுத்தியதே தாவரங்கள் ஆகும். அதாவது தமது வேர் பகுதியை மண்ணின் உட்பரப்பிலும், தமது இலை/தண்டு பகுதியை மண்ணின் மேற்பரப்பிலும் வளரும் ஈர்ப்பு சக்தியை கொண்டு வாழ்வதே தாவரங்களின் வாழ்வியல் முறையாகும்.

6. உலக (பிரபஞ்சம்) ஈர்ப்பு விசை

உலக ஈர்ப்பு விசை என்பது மூன்று மாபெரும் பிரிவுகளாக அமைந்திருக்கிறது.
1. பஞ்ச பூத ஈர்ப்பு விசை
2. காந்த ஈர்ப்பு விசை
3. கோள் ஈர்ப்பு விசை

7. செயற்கை தொடர்பு ஈர்ப்பு விசை

மனித சமுதாயம் தங்களது வாழ்வாதார விரிவாக்கத்திற்கு உரிய, உயரிய செயலாக உருவாக்கியதுவே விஞ்ஞான மார்க்கமாகும்.

விஞ்ஞான மார்க்கம் இரு வகை:
1. இயற்கை மார்க்கம்
2. செயற்கை மார்க்கம்

இயற்கை மார்க்கம்:
இயற்கை மார்க்கம் என்பது பிரபஞ்ச வாழ்வாதார கட்டமைப்பில் இயற்கையாக, இயல்பாக அமைந்த வாழ்வாதார அனுபவ ஆய்வுகளை கொண்டு உருவாக்கப்படுகிற முறையாகும்.
இயற்கை மார்க்கம் ஆதி காலம் தொட்டு தொடர்ந்து வருகிற முறையாகும்.

செயற்கை மார்க்கம்:
மனித அனுபவ அறிவோடு தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் இயற்கை கட்டமைப்புகளோடு இணைந்து இயங்குவதற்கு, இயக்குவதற்கு உருவாக்கப்பட்ட முறையாகும்.
விஞ்ஞானத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாக விளங்குவதே செயற்கை சாதன முறையாகும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of