பூமியில் மனிதர்களது வாழ்வு துவங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை வாழ்வியலுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருப்பது
“அறிவு”.
அறிவு என்பது:
- தெரிந்து கொண்டதில் சேகரம்
- அறிந்து கொண்டதில் சேகரம்
- அனுபவித்தலில் சேகரம்
- பகிர்ந்து கொண்டதில் சேகரம்
- நினைத்து பார்த்ததில் சேகரம்
- சிந்தித்து பார்த்ததில் சேகரம்
- கற்று கொண்டதில் சேகரம்
- சீரமைத்தலில் சீரமைத்தலே (அறிவு) சேகரம் ……
சேகரங்கலின் சேகரத்தொகுப்பே அறிவு.
“அறிந்ததில் – அனுபவித்தலில் சீரமைத்தலுக்கு உரிய அனுபவ இயலே அறிவு ஆகும்”.
“அறிவின் தொடர் பரிணாம வளர்ச்சி இயலுக்கு உரிய தொகுப்புகளின் மூலமே அறிவு இயல் அல்லது அறிவியல் ஆகும் “.
“அறிவியலின் கட்டமைப்பே வாழ்வியலின் பரவலாக்கம் தொடர்வதற்கு மூல காரணமாகும்”.
மனித வாழ்வியலின் அடிப்படை கட்டமைப்பை புரிந்து கொண்ட நிகழ்வில் தான் வாழ்வியலில் அவ்வப்போது நிகழும் எதார்த்தங்களையும், காரண, காரியங்களையும் அதன் விளைவுகளையும் அறிந்து கொள்ளக்கூடிய தெளிவையும் பெற இயலும்.
“வாழ்வியலின் வாழ்வாதார கோட்பாடு இதுவே ஆகும்”.
பூமியில் மனித வாழ்வு இன்றைய அளவில், இந்த அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்வதற்கு அடிப்படை காரணமாக அமைந்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சியே மூல காரணமாகும்.
விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணமே வாழ்வியலின் வாழ்வாதார கோட்பாடு ஆகும் என்பதை அறிய வேண்டும். அதே வேளையில்,
பூமியில் கழிவுகளும், மாசுகளும், நிறைவதற்கு :
- விஞ்ஞான வளர்ச்சி காரணமா……
- மனித பெருக்கம் காரணமா……..
- தெளிவற்ற நிலையில் உருவெடுக்கும் போட்டி காரணமா…….
- ஆக்கிரமிப்புகளுக்கு உரிய பேராசை காரணமா…….
- காலத்தின் கட்டாயமா…….. ……….
என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால் மாத்திரமே புரிந்து கொள்ள இயலும்.
இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வு பூமியை கடந்து சந்திரனுக்கோ அல்லது பிற கோள்களுக்கோ செல்ல வேண்டிய அவசியத்தை அறிவோமா?
“சற்று சிந்திப்போம், செயல்படுவோம்”.
சந்திரனில் நமது வாழ்வாதாரத்தை உருவாக்கிட, “பூமியின் இயற்கை இயக்கத்திற்கும், சந்திரனின் இயற்கை இயக்கத்திற்கும் உள்ள அடிப்படை நிகழ்வுகளை அறிந்து செயல்படுவோம்”.
“சந்திரனில் மனித வாழ்வாதார அடிப்படை கட்டமைப்பை அறிந்தால் மாத்திரம் தான் விஞ்ஞான ஆய்வுகளின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்க்கு செல்ல இயலும் ” என்பதை அறிவது அவசியமாகும்.
“அவசியத்தை அறிவோம் ஆனந்தமான வாழ்வாதாரத்தை உருவாக்குவோம் “.
நன்றி, வணக்கம்.
சந்திரனின் அடிப்படை மனித வாழ்வாதார கட்டமைப்பை புரிந்துகொள்வதில் அவசியம் புரிகிறது. அவசியத்தை புரிந்த நிகழ்வில் எவ்வாறு பூமிக்கும் சந்திரனுக்கும் பொதுவாக இருக்கும் இயற்கை அமைப்பை புரிந்து அதன் இணைப்பை இயற்கையுடனும் உருவாக்குவது எவ்வாறு.
கற்றலின் வாய்ப்புக்கு, என் மனமார்ந்த நன்றிகள், என் அன்புடைய சுவாமி.
ஓம் சிவமதி போற்றி
ஓம் அட்சயநாதர் போற்றி
அறிவின் கட்டமைப்பு
அடிப்படையில் இருந்து
ஆராய்ச்சி. வரை
(சந்திரனில் வாழ்வாதாரம்)
அறிவை விளக்கி உள்ளது அற்புதம். அறிவை அறிந்து சீரமைக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன் சாமி.
இறைவா நன்றி