பூமியில் நமது வாழ்க்கை

அறிவியல் - அறிந்து கொள்கிற வாழ்வியல்
பூமியில் நமது வாழ்க்கை அறிவியலை அடிப்படையாக கொண்டது.
அறிவியல் என்பது அறிந்து கொள்கிற வாழ்வியலை மையப்படுத்தியதாகும்.

அனைவருக்கும் வணக்கம்,

  • பூமியில் நமது வாழ்க்கை என்பது வாழ்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • பூமியில் நமது வாழ்க்கை கற்றலின் வாயிலாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • பூமியில் நமது வாழ்க்கை உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை கட்டமைப்பு முறைகளின் முறைகளை அறிந்தே வாழ்வாதாரம் உருவாக்கப்பட வேண்டியிருக்கிறது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பூமியில் நமது வாழ்க்கை கற்றல் முறை என்பது துவக்க காலத்தில் உயிரினங்களையும், தாவரங்களையும் வைத்து தான் மேன்மை தாங்கிய வாழ்வியல் முறையாக அமைந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல இயற்கை கட்டமைப்பு முறைகளோடு இணைந்து வாழ வேண்டும் என்ற நிலையை நாம் அறிகின்ற போது வாழ்வியலின் மேலான முறையில் மிகப்பெரிய முன்னேற்றம் உருவாக துவங்கியது. இந்நிகழ்வே இன்றைய அறிவியல், கணிதவியல், தொடரும் அனுபவ இயல் என்பதை அறிய வேண்டியிருக்கிறது.

அறிவியல்:
அறிவியல் என்பது அறிந்து கொண்ட இயலை குறிப்பதாகும்.
அறிந்து கொண்டது என்பது வாழ்வியலின் முழுமையை அறிந்து கொள்வதற்கு உரிய அனைத்து செயல்களையும், செயல்படுத்தும் முறைகளையும் குறிப்பதாகும்.

அறிவியலின் முப்பெரும் பிரிவுகள்:
1. இயற்பியல்
2. வேதியியல்
3. உயிரியல்
எனும் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது. இம் முப்பெரும் பிரிவுகளின் விரிவாக்கமே இன்றைய விஞ்ஞானத்தின் மாபெரும் பிரிவுகள் ஆனாலும் சரி, வருங்காலத்தில் வர இருக்கிற அனைத்து விஞ்ஞான மூல பிரிவுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருக்கும் என்பதை அறிய வேண்டும்.

வாழ்வியலில் மொழி இயல் என்பது தொடர்புகளின் தொடர்புகளுக்கு தொடர்பு சாதனமாக அமைந்திருக்கிறது.
மொழி இயலில் கணித இயல் என்பது எண்களோடு எழுத்துக்கள் இணைந்து இயங்கும் வாழ்வியல் தொடர்புகளை மையப்படுத்தியது ஆகும்.

கணிதவியல்:
கணிதவியல் என்பது கூட்டல், கழித்தல், பெருக்கல் எனும் ‘மூலத்தை மையபடுத்தியது’ ஆகும்.
அதாவது
1. (+) × (+) = (+)
2. (+) × (−) = (−)
3. (−) × (+) = (−)
4. (−) × (−) = (+)
எனும் நான்கு மூலக்கூறுகள் அடங்கிய வாழ்வியல் நிகழ்வில் உள்ள உண்மைகளை அறியலாமா!
இந்நான்கு பெருக்கல் முறைகளில் வருகிற விடை (தீர்வு) என்பதில் (+) என்பது வரவு அல்லது இலாபத்தை குறிக்கிறது.
(−) என்பது செலவு அல்லது நஷ்டத்தை குறிக்கிறது என்பதை அறிவோம்.

1. (+) × (+) = (+) எனும் மூலக்கூறில் இரண்டு கூட்டு தொகைகளை பெருக்கினால் கூட்டல் (+) வரவாகவே அல்லது இலாபமாகவே வருவதை அறிகிறோம்.
2. (+) × (−) = (−) எனும் மூலக்கூறில் இரண்டு தொகைகளை (+), (−) பெருக்கினால் வருவது கழித்தல் (−) அதாவது செலவாகவே அல்லது நஷ்டமாகவே வருவதை அறிகிறோம்.
3. (−) × (+) = (−) எனும் மூலக்கூறில் இரண்டு தொகைகளை (−), (+) பெருக்கினால் வருவது கழித்தல் (−) அதாவது நஷ்டமாகவே வருவதை அறிகிறோம்.
4. ( −) × (−) = (+) எனும் மூலக்கூறில் இரண்டு தொகைகளை (−), (−) பெருக்கினால் வருவது கூட்டல் (+) வருகிறது. இங்கு தீர்வாக (+) வருவது இலாபம் அல்லது வரவு என்பதை குறிப்பதல்ல என்பதை அறிய வேண்டும். அதாவது சேர்ந்த அல்லது இரட்டிப்பான செலவு அல்லது நஷ்டமாகவே வருவதை அறிகிறோம்.

மேற்கண்ட முறைகளில் 2வது மூலக்கூறை அறிய வாருங்கள்.
இந்த மூலக்கூறுகள் அடங்கிய கணிதத்தை நாம் திரும்ப திரும்ப கவனித்தால் வரும் தீர்வை கவனியுங்கள்.
(+) × (−) = (−) எனும் மூலக்கூறில் பெருக்கல் தொகைக்குரிய இரண்டையும் எடுத்துக்கொண்டால் முதலில் வருவது கூட்டல் (+) தொகையாகும். அதாவது வரவு அல்லது லாபத்தோடு இணைந்த தொகையாகும். இரண்டாவது வருவது கழித்தல் (−) தொகையாகும். அதாவது செலவு அல்லது நஷ்ட தொகையாகும். இவ்விரண்டு தொகைகளையும் பெருக்கினால் தீர்வாக வருவது கழித்தல் (−) ஆகும். அதாவது செலவு அல்லது நஷ்ட தொகையாகும். இந்த 2ம் மூலக்கூறை அறிவதற்கு முன்பு நடைமுறை நிகழ்வுகளை அறியலாம்.
1வது மற்றும் 2வது மூலக்கூறுகளுக்கான நடைமுறை தீர்வை அறிவோம்.
1. (+) × (+) = (+)
இலாபம் × இலாபம் = இலாபம். அல்லது
வரவு × வரவு = வரவு ஆகும்.
2. (+) × (−) = (−)
இலாபம் × நஷ்டம் = நஷ்டம் என்கிறோம்.
வரவு × செலவு = நஷ்டம் என்கிறோம். இந்த நிகழ்வை சற்று கூர்ந்து கவனித்து பாருங்கள். துவக்கமாக உள்ள வரவு அல்லது இலாபத்தில் இருந்து நஷ்டம் அல்லது செலவை கழிக்க இயலும் என்றால் அந்த வரவு அல்லது இலாபம் என்பது கூடுதலாக இருந்தால் மாத்திரமே சாத்தியம் ஆகும் என்பதை அறிய வேண்டும். ஆக வரவு அல்லது இலாபம் என்பதில் இருந்து செலவு அல்லது நஷ்டத்தை கழித்தால் வருவது குறைந்த இலாபம் அல்லது வரவு என்பதை அறியலாம்.
ஆக மிக குறைந்த இலாபம் அல்லது வரவு என்பது நஷ்டமல்ல என்பதை புரிந்து கொள்வோமா?.

கணித முறையில் எப்படி மிக குறைந்த அளவிற்கு மகத்துவம் குறைவோ அதுபோல் மனிதனின் நேரடி வாழ்வில் மிக பெரும்பான்மையான நிகழ்வில் மிக குறைந்த அளவில் கிடைக்கும் அல்லது உருவாகும் வாழ்வியலுக்கு மகத்துவம் குறைவு என்பதை அறிவோமா?.

மனித வாழ்வில்
நிறைவு – குறைவு
இலாபம் – நஷ்டம்
கற்றல் – கல்லாமை
அறிவு – அறியாமை
வெற்றி – தோல்வி
சந்தோசம் – துக்கம்
கோபம் – சமாதானம்
ஆரோக்கியம் – ஆரோக்கியமின்மை
புரிதல் – குழப்பமடைதல் ………. போன்ற ஒவ்வொரு தொடர்பிலும் மனிதன் தமது மகத்தான சிந்தனை, மகத்தான ஆற்றலை,
மகத்தான அனுபவத்தை,
மகத்தான பகிர்ந்து கொள்ளுதலை மனித சமுதாயம் முழுவதும் புரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கின்றது என்பதை அறிய இயலுமா? அறிந்தால் பல்வேறு நிகழ்வுகள் புரிந்து கொள்ள இயலும் என்பதை அறியலாம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of