பகல் பத்து மணி நேரம் ஒளி (சூரியன்)

அனைவருக்கும் வணக்கம்,

மனித வாழ்வு என்பது பன்னெடுங்காலமாக பூமியில் இருந்து வருகிறது. நமது வாழ்வியலுக்கு ‘இயற்கையே’ அனைத்துமாக, ஆதாரமாக அமைந்து வருகிறது. அதாவது இயற்கையில் வெப்பம், நீர், காற்று, மண், மலை, மழை, கனிம வளங்கள் அமைந்திருக்கிறது. அதுபோல் தாவரங்கள், உயிரினங்கள் என அமைந்து மனிதர்களுக்கு உணவாகவும், மருந்தாகவும் வாழ்வியலுக்கு அணைத்துமாகவும் அமைந்திருக்கிறது. மேலும் மனித அறிவை (பகுத்தறிவு) வெளிப்படுத்துவதற்கு உரிய வாய்ப்பாக அமைகிறது.

மனித வாழ்வில் இதற்கு மேலும் ஆதாரமாக விளங்குவது பகலும் – இரவும் ஆக அமைந்து இருக்கும் பூமியில் சூரியனும், சந்திரனும் ‘இயற்கை வாழ்வாதார சக்திகளாக’ விளங்குகிறது. சூரியன் பகலில் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கொடுத்து ‘பகல் ஒளி விளக்காய்’ அமைந்திருக்கிறது. அதுபோல் சந்திரனும் இரவு இருளில் வாழ தடுமாறுகிற மனித மற்றும் உயிரியல் சமுதாயத்திற்கு ‘இரவு ஒளிவிளக்காய்’ அமைந்திருக்கிறது.

நாம் வாழும் இந்த பூமிக்கு சூரியனே பகலில் வெப்பம் மற்றும் வெளிச்ச ஆதாரமாக அமைவதும், இரவுக்கு வெப்பசக்தியின் ஆதாரமாகவும் விளங்குகிறது. மேலும் உயிரியல் ஆதார சக்தியாக விளங்கும் சக்தியான சூரிய சக்தியும், இரவிற்க்கு குளிர்ச்சி சக்தியாகவும், வெளிச்ச சக்தியாக விளங்கும் சந்திரனும் இணைந்து தான் பூமியின் இயக்கங்களை பராமரிக்கிறது.

பூமியில் வாழ்வாதார மேம்பாடு விஞ்ஞான உச்சகட்ட வளர்ச்சியை எட்டும் தருவாயில் மனிதர்கள் சந்திரனில் வாழ வேண்டிய சூழ்நிலைகள் உருவாகிற காரணத்தால் சந்திரனில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

சந்திரனில் வாழ்வாதார ஆய்வுகளில் நமது ஆய்வும் (Our moon life) இருக்கிறது. நமது ஆய்வில் தான் சந்திரனில் வாழ வேண்டுமென்றால் சந்திரனின் இயற்கை கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் என்பதும், இயற்கை கட்டமைப்புகளை சீரமைத்தால் தான் உயிரியல் வாழ்வாதாரத்தை சந்திரனில் நிர்வகிக்க இயலும் என்பதை தெரிவிக்கிறோம். அவ்வாறு சந்திரனின் இயக்கத்தை சீரமைத்தால் பூமியில் சந்திரன் சீரமைக்கப்பட்ட வெளிப்பாடுகள் வெளிப்படும். ஆகவே சந்திரனின் சுழற்சி இயக்கமானது 28 நாட்களில் இருந்து 28 மணி நேரமாக மாறி அமைகிறது. எனவே சந்திரனின் சுழற்சி இயக்கம் பூமி சூரியனின் இயக்கங்களுடன் இணைந்து வெளிப்படுகிற போது பூமியில் சூரியனின் வெளிச்சம் ஆனது 10 மணி நேரம் (பூமி கடிகாரம் 24 மணி நேரத்தில்) மாத்திரமே வெளிப்படுவதாக அமையும். எனவே சூரிய வெளிச்சமானது பூமியில் 10 மணிநேரமாக வெளிப்படுகிற சூழ்நிலைகள் பூமியில் 2 மணி நேரம் முழு இருளாக அமையும் என்பதும், 2 மணி நேரம் இரவாக உள்ள இருள் நிலையும், இதில் 10 மணிநேரம் சந்திரனில் வளர்பிறை, பௌவர்னமி, தேய்பிறையாக ஒளியின் நிகழ்வில் அமையும்.

பூமியில் சூரிய வெளிச்சம் இதுவரை 12 மணி நேரமாக அமைந்த நிலையில் சந்திர வாழ்வாதார உருவாக்கத்திற்கு பிறகு 10 மணிநேரமாக (பகல் பொழுது) அமைந்தாலும் பூமிக்கு சுகம் தரும் சூழ்நிலைகளே உருவாகும். இதனால் பூமியின் வாழ்வாதார வளர்ச்சி என்பது தற்போதுள்ள சூழ்நிலைகளில் பல மடங்கு உயரும் என்பதை அறிய வேண்டும்.

பூமியில் 2 மணி நேரம் சூரிய ஒளியும், வெப்பமும் குறைவதை விட தினசரி சந்திரனின் ஒளியும், குளிர்ச்சியும் தருகிறது. இதனால் தாவரங்கள் உயிரினங்களின் வாழ்வாதாரம் உயரும். மேலும் தென்றல் காற்று, வெப்பம் தேவையான அளவு மழையாய் பூமியில் நீர் ஆதாரம் பெருகும். இதனால் உயிரியல் ஆதாரமும் இயற்கையும் மகிழும்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of